16/03/2026
காமராஜ் நகர் தொகுதியின் நீண்ட காலத் துயரம்: மழைநீர் தேக்கம்! 🌧️
ஒவ்வொரு மழைக்காலத்திலும் காமராஜ் நகர் தொகுதி மக்கள் சந்திக்கும் மழைநீர் தேக்கப் பிரச்சனை பெரும் துயராக மாறியுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படும் மேம்பாலப் பணிகளால், கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்குகிறது.
இந்தத் தொடர் அவதியால் சுமார் 75% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலை நீடிக்கிறது. மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சனைக்கு முறையான திட்டமிடல் மூலம் நிரந்தரத் தீர்வு காண்பதே எங்களது முதன்மை நோக்கம்.
மாற்றம் நம்மால் சாத்தியம்! இணைவோம்... வெல்வோம்! 🤝