Thilagavathiar Adheenam

Thilagavathiar Adheenam சமய, சமுதாயப் பணிகளை முதல் பெண் ஆதீனம?

19/10/2025
சைவத்தமிழை போற்றி வளர்த்தும், திருநெறியத் தமிழிலால் திருக்கோயில்களில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாக்களை பாரெங்கும் நடத்த...
17/10/2025

சைவத்தமிழை போற்றி வளர்த்தும், திருநெறியத் தமிழிலால் திருக்கோயில்களில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாக்களை பாரெங்கும் நடத்தியும், கல்விச் சாலைகளையும் நிறுவியும் பேரூர் ஆதீன 24- வது குருமகா சந்நிதானமாக அருளாட்சி புரிந்த கயிலை மாமுனிவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியின் 16-10-2025 வியாழன் அன்று நடந்த நிகழ்வில், செங்கோல் ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். திலகவதியார் ஆதீன சந்நிதானம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் அருளுரையும், பேரூர் ஆதீன சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரையுடன், தமிழ்நாடு மேனாள் அமைச்சர் திரு பொங்கலூர் பழனிசாமி சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். புலவர். சேந்தலை கெளதமன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சான்றோர்கள், அடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பேரூர் அருள்மிகு மரகதவல்லி உடனுறை பட்டீஸ்வரர் திருக்கோயிலில் செங்கோல் ஆதீனம், திலகவதியார் ஆதீன சந்நிதானங்கள் வழிபாடாற்றினார்கள்.

நமது இந்திய நாட்டின்முதல் பெண் மருத்துவரும், பெண்ணினத்திற்காக அயராது பாடுபட்டவருமான பத்மபூசண் முத்துலட்சுமி அம்மையாரின் ...
11/09/2025

நமது இந்திய நாட்டின்முதல் பெண் மருத்துவரும், பெண்ணினத்திற்காக அயராது பாடுபட்டவருமான பத்மபூசண் முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு " மாதர் குல மாணிக்கம்" நூல் (மூன்றாம் பதிப்பு) வெளியிட்டு விழா எதிர்வரும் 19-9-2025 அன்று மகளிருக்காக சிறப்பாக இயங்கி வரும் புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

தரணிபுகழ், தஞ்சை வளநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கோயிலில் கடந்த 7-9-2025 அன்...
09/09/2025

தரணிபுகழ், தஞ்சை வளநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கோயிலில் கடந்த 7-9-2025 அன்று மாலை 6:00 மணிக்கு இரண்டாம் ஆண்டின் முதல் கிரிவலத்தினை தொடங்கி வைத்து அடியார்கள், அன்பர்களுடன் வலம் வந்த திலகவதியார் திருவருள் ஆதீன சந்நிதானம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், உடன் கிரிவலக்குழு ஆடிட்டர் திரு. இரவிச்சந்திரன், திரு. ஜெயசங்கர், திரு. புண்ணியமூர்த்தி, புதுகை மூத்த வழக்கறிஞர் திரு. மேனா. வீரப்பன் உள்ளட்டோர், நிகழ்வுக்கு முன், தஞ்சை மாநகராட்சி ஆணையர் திரு. கண்ணன் குடும்பத்தினரை பாராட்டி ஆசி வழங்கிய காட்சியும், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மனையும் தரிசனம் செய்த பின்னர் அருகில் புதியதாக உருவாகியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் மடத்திற்கு விழாக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அதனை பார்வையிட்டும் அருளாளர் மூவரை வழிபட்டும், அதனை நிர்வகித்து வரும் சுவாமி விமூர்த்தானந்தர் அவர்களை சந்தித்து வாழ்த்திய காட்சிகளின் புகைப்படங்கள்.

சைவத்தையும், செம்மொழித் தமிழையும் ஒருங்கே வளர்த்த பெருமைக்குரிய சைவ ஆதீனமாக திகழ்ந்து வரும் திருக்கயிலாய பரம்பரை திருப்ப...
21/08/2025

சைவத்தையும், செம்மொழித் தமிழையும் ஒருங்கே வளர்த்த பெருமைக்குரிய சைவ ஆதீனமாக திகழ்ந்து வரும் திருக்கயிலாய பரம்பரை திருப்பனந்தாள் காசி மடத்தின் 21-ஆவது அதிபராக அருள்பாலித்து அரும்பணிகளை ஆற்றி வந்த கயிலை மாமுனிவர், ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் முத்தக்குமார சுவாமி தம்பிரான் அவர்கள் கடந்த 19-8-2025 செவ்வாய் அன்று பரிபூரணம் எய்தினார்கள். பன்னெடுங்காலமாக சைவத்தின் மேன்மையை உலகறிய செய்ய பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமயப்பணியோடு, பள்ளி, கல்லூரிகளையும் திறம்பட நடத்தி வந்தவர்கள்.

நமது ஆதீன குரு முதல்வர் அன்னை சாயிமாதா சிவ பிருந்தா தேவி அவர்களிடத்தில் அன்பும்,மதிப்பும் கொண்டு வாழ்த்தியவர்கள். அதன் பின்னர் ஆதீன பொறுப்புக்கு வந்த இன்றைய ஆதீனகர்த்தர் அவர்களின் பணிகளை பாராட்டி ஆசி வழங்கியவர்கள். 1999- ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் ஆதீன அன்னையாரின் முதலாம் ஆண்டு குருபூசை விழாவிற்கு எழுந்தருளி ஆசியுரை வழங்கினார்கள்.

சிவத்துடன் ஐக்கியமாகிய குருமகா சந்நிதானம் ஸ்ரீ எஜமான் சுவாமிகளின் திசை நோக்கி பணிந்து வணங்குகிறோம்.

கடந்த 8-8-2025, வெள்ளியன்று, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக சிற்பத்துறையில், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் திரு எம். பக...
15/08/2025

கடந்த 8-8-2025, வெள்ளியன்று, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக சிற்பத்துறையில், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் திரு எம். பக்தவச்சலனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில், சிற்பம்- மானுடப் பண்பாட்டின் வேர் எனும் தலைப்பில் ஆதீன சந்நிதானம் சொற்பொழிவாற்றினார்கள். பல்கலைக் கழகப் பதிவாளர் (பொ) முனைவர். பன்னீர்செல்வன் தலைமை வகித்து வாழ்த்தினார். துறைத்தலைவர் முனைவர்.வே.லதா வரவேற்புரை ஆற்றினார். முனைவர் பா.ஷீலா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர்.செ.கற்பகம், முனைவர்.மாதவி, முனைவர் வெற்றிச்செல்வன், கவிஞர்.பறம்பு நடராசன், அரிமளம்.அ.செல்வராஜ் உள்ளிட்ட சிற்பத்துறை கல்வெட்டுத்துறை மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையமும், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்...
12/08/2025

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையமும், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் ஆண்டு விழாவின் 26-7-2025 அன்று நடைபெற்ற காலை நிகழ்வில் திருருட்பா மூலமும், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி உரை 10- தொகுதிகள் நூல் வெளியிட்டருளிய தருமையாதீன குருமகா சந்நிதானம், முதல்படி பெற்ற குன்றக்குடி ஆதீன சந்நிதானம், தொடர்ந்து நூல்களை பெற்ற செங்கோல் ஆதீன சந்நிதானம், தொண்டை மண்டல ஆதீன சந்நிதானம், மயிலம் பொம்மபுர ஆதீன சந்நிதானம், திலகவதியார் ஆதீன சந்நிதானம், தவத்திரு பாலமுருகனடிமை, கலவை சச்சிதானந்த சுவாமிகள், சிவபுரம் ஆதீன சந்நிதானம், குருபழனியடிகள், நீதியரசர் எஸ். ஜெகதீசன், சிவாலயம் ஜெ.மோகன், சக்தி தொழில் குழுமம் திரு.ம.பாசுப்பிரமணியன், திரு.ஹரி தியாகராசன், முனைவர்.ந.அருள், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் மற்றும் அன்றைய நிகழ்வின் படங்கள் சில.

Address

Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when Thilagavathiar Adheenam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category