25/02/2026
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, கொள்கை உறுதி என்பவற்றின் உயிரோவியமாக விளங்கியவர் நல்லக்கண்ணு அவர்கள். சாதாரண மக்களின் உரிமைகள், விவசாயிகளின் நலன், தொழிலாளர் வர்க்கத்தின் குரல் ஆகியவற்றிற்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த தலைவர்.
அரசியலை அதிகாரத்திற்கான பாதையாக அல்ல, சமூகநீதி மற்றும் மனிதநேயத்தின் கருவியாக அவர் வாழ்ந்து காட்டினார். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற கோட்பாட்டின் நடைமுறை வடிவமே அய்யா நல்லக்கண்ணு.
அவரின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரின் கொள்கைகள், போராட்ட ஆவி, நேர்மையான பண்பு தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டியாக இருக்கும்.
அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
*செம்மண்ணின் செம்மல் — தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு இதயம் கனிந்த அஞ்சலி.*