நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்

  • Home
  • India
  • Pudukkottai
  • நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்

நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம் மாற்றம் என்பது சொல் அல்ல செயல்…!!!

அனைவருக்கும் வணக்கம்! 🙏🏼நமது 🌳நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம் 🫂🏃🏿‍♂️தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டு மகிழ்ச...
07/07/2026

அனைவருக்கும் வணக்கம்! 🙏🏼

நமது 🌳நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம் 🫂🏃🏿‍♂️தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டு மகிழ்ச்சியோடு🥰 தொடங்குகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்!!!!!

நமது ஊரை பசுமையான 🌱🌾கிராமமாக மாற்றியமைக்க மற்றும் கல்வியில்📚📒 நிறைவான சமூகமாக மாற்ற இன்று வரை பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய ஊர் பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!!🙏🏼

மேலும் எதிர்வரும் காலங்களில் ஒத்துழைப்பு வழங்க உங்களை கேட்டுக்கொள்கிறோம்!!!

இவன்!
நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ இளைஞர்கள் இயக்கம்- வடவாளம் தெற்கு.

நம் வாக்கு! நம் எதிர்காலம்!!வாக்களிப்பது உங்கள் உரிமை!வாக்களிப்பது உங்கள் கடமை!!தமிழ்நாட்டின்  வளர்ச்சிக்கும் நல்ல ஆட்சி...
22/04/2026

நம் வாக்கு! நம் எதிர்காலம்!!
வாக்களிப்பது உங்கள் உரிமை!
வாக்களிப்பது உங்கள் கடமை!!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும்
நல்ல ஆட்சிக்கும் வாக்களிப்போம்!!!🌱🌳🪴

இவன்!!! நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்- வடவாளம் தெற்கு!!!

இந்திய அரசியலமைப்பின் தந்தை, சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்...
15/04/2026

இந்திய அரசியலமைப்பின் தந்தை, சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கைபந்து மற்றும் சிலம்பம் பயிற்சி செய்ய மைதானம் அமைத்து கைபந்து கம்பம் நடப்பட்டது!!

இவன்!! நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்-வடவாளம் தெற்கு.

#நம்மாழ்வார்மற்றும்ஆதிபாய்ஸ்இளைஞர்கள்இயக்கம் #வடவாளம்தெற்கு #ஆதிபாய்ஸ்

இன்று அய்யா நம்மாழ்வார் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரங்கள் நடப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது!!🌱💚! “பூமி நமது தா...
06/04/2026

இன்று அய்யா நம்மாழ்வார் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரங்கள் நடப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது!!🌱💚!

“பூமி நமது தாய், அந்த தாய்க்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ!!! அதுவே அவளுடைய பிள்ளைகளான நமக்கும் நாளை நேரிடும், ஏனென்றால் பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல, மனிதன்தான் பூமிக்கு சொந்தமானவன்”
—அய்யா நம்மாழ்வார்.

இயற்கையை பாதுகாப்போம்!!
இளைய தலைமுறைக்கு!!!🔥🌾

இவன்!!! நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்-வடவாளம் தெற்கு.

#நம்மாழ்வார் #நம்மாழ்வார்மற்றும்ஆதிபாய்ஸ்இளைஞர்கள்இயக்கம்
#88வதுபிறந்தநாள் #நம்மாழ்வார்

அனைவருக்கும் வணக்கம்!!! 🙏🏼🌾💚இன்று வடவாளம் தெற்கு ஶ்ரீ ஆதி பொதிக்காத்தான் துனையோடு இந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன...
28/02/2026

அனைவருக்கும் வணக்கம்!!! 🙏🏼🌾💚இன்று வடவாளம் தெற்கு ஶ்ரீ ஆதி பொதிக்காத்தான் துனையோடு இந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ✍️🖋️எழுதும் நமது ஊரை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 👨‍🎓👩‍🎓தேர்வுக்கு தேவையான பொருட்கள் ✏️✒️🎁நமது ஊர் பெரியவர்கள் வழங்கினார்கள்!!!💐

1. மா. வைரமணி - பத்தாம் வகுப்பு
2.உ.சாதனா- பத்தாம் வகுப்பு
3. செ.மணிகண்டன் - பத்தாம் வகுப்பு
4. கு. ஶ்ரீநிதி - பன்னிரண்டாம் வகுப்பு
5. ஹ. ஹாரிஸ் - பன்னிரண்டாம் வகுப்பு

ஆகிய ஐந்து மாணவ- மாணவிகள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்!!!

மேலும் பள்ளி முதல் மதிப்பெண் எடுத்தால் ஊக்க பரிசு வழங்கப்படும், மற்றும் 400 மேல் மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்!!! நன்றி🙏🏼

வெற்றிபெற வாழ்த்தும்..!!
நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்- வடவாளம் தெற்கு.

வாழ்த்துகிறோம்!!!👏👏🌾புதுக்கோட்டை மாவட்ட சென்ட்ரல் JCI தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அ.அறிவழகன் அவர்கள்!தமிழ்நாடு கைத்திறத...
23/01/2026

வாழ்த்துகிறோம்!!!👏👏🌾

புதுக்கோட்டை மாவட்ட சென்ட்ரல் JCI தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அ.அறிவழகன் அவர்கள்!

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் பூம்புகார் மாவட்ட சிறந்த கைத்திறன் கலைஞர் விருது பெற்ற வ.இளங்கோவன் அவர்கள்!

நமது ஊருக்கு பெருமை சேர்த்த இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்!!!

நன்றி!🙏🏼
நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம் - வடவாளம் தெற்கு.

இன்று அய்யா நம்மாழ்வார் அவர்களின் 12வது நினைவு நாள்!“முயற்சி என்பது விதை போல!அதை விதைத்துக்கொண்டே இரு!முளைத்தால் மரம்..!...
30/12/2025

இன்று அய்யா நம்மாழ்வார் அவர்களின் 12வது நினைவு நாள்!

“முயற்சி என்பது விதை போல!
அதை விதைத்துக்கொண்டே இரு!
முளைத்தால் மரம்..! இல்லையென்றால் - அது மண்ணிற்கு உரம்!!”
-அய்யா நம்மாழ்வார்.

“அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்”இந்திய அரசியலமைப்பின் தந்தை, டாக்டர், அண்ணல் BR.அம்பேத்...
13/12/2025

“அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்”

இந்திய அரசியலமைப்பின் தந்தை, டாக்டர், அண்ணல் BR.அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை முன்னிட்டு அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கல்விக்கு தேவையான பொருட்கள் வழங்குதல் மற்றும் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது!!! மேலும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பேசிய நமது ஊர் மாணவ- மாணவியருக்கும் மற்றும் வருகை தந்து ஒத்துழைப்பு செய்த அத்துனை ஊர் சொந்தங்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
நன்றி!!🙏🏼

இவன்!!!
#நம்மாழ்வார் மற்றும் #ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம், #வடவாளம்தெற்கு .

''மாற்றம் என்பது சொல் அல்ல செயல்''

இன்று நமது அலுங்குமாமுனி கோவில் திடலில் ஆலமரங்கள் நடப்பட்டது!🌳🌳🌳🌳மரம் வெறும் தாவரமன்று்!!பூமியின் சுவாசம்..!!🌳 #பசுமையான...
30/11/2025

இன்று நமது அலுங்குமாமுனி கோவில் திடலில் ஆலமரங்கள் நடப்பட்டது!🌳🌳🌳🌳

மரம் வெறும் தாவரமன்று்!!
பூமியின் சுவாசம்..!!🌳
#பசுமையான பூமியை உருவாக்குவோம்!!!🌴🌳🌲🌏

#நம்மாழ்வார்ஆதிபாய்ஸ்இளைஞர்கள்இயக்கம்
#வடவாளம்தெற்கு #வடவாளம்

நமது தொடர் நடவடிக்கையில் இன்று (19/10/2025)ஊர் நுழைவாயில் இருபுறமும் பூங்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது! அனைவரும் சேர்ந்து ப...
19/10/2025

நமது தொடர் நடவடிக்கையில் இன்று (19/10/2025)ஊர் நுழைவாயில் இருபுறமும் பூங்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது! அனைவரும் சேர்ந்து பாதுகாத்து வளர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!!!

இவண்!!!
*நம்மாழ்வார் மற்றும் ஆதிபாய்ஸ் இளைஞர்கள் இயக்கம்!
வடவாளம் தெற்கு*

*மாற்றம் என்பது சொல் அல்ல செயல்* - அய்யா நம்மாழ்வார்.

Address

Pudukkottai
622004

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வார் மற்றும் ஆதி பாய்ஸ் இளைஞர்கள் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category