BibleQuest

BibleQuest This page, "BibleQuest," is intended for engaging in "Biblical Information Research."

It helps in studying the scriptures in various ways, gaining an accurate understanding of God's word and transmitting it to social media users in the simplest way.

05/06/2026

06/06/2026

நன்மை செய்யாவிடில் .....இன்றைய வேதாகமப் பகுதிஏசாயா-1:10-20மத்தேயு - 25:31-46நன்மை செய்யப் படியுங்கள்...ஏசாயா - 1 : 17ஏரா...
05/06/2026

நன்மை செய்யாவிடில் .....

இன்றைய வேதாகமப் பகுதி
ஏசாயா-1:10-20
மத்தேயு - 25:31-46

நன்மை செய்யப் படியுங்கள்...
ஏசாயா - 1 : 17

ஏராளமான கிறிஸ்தவ மக்கள், தேவனால் பயன் பெற வேண்டும், வளமடையவேண்டும், வசதி நிலை பெறவேண்டும் என்று தான் அதிகமாக விரும்புகின்றார்கள். இவைகளை அடைவது தொடர்பாகவே விசுவாசமும், பக்தி சம்பந்தமான செயல்களும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிறருக்குத் தாங்கள் நிழல்தரும் மரங்களாகவும், கனிதரும் செடிகளாகவும் விளங்கவேண்டிய தேவையைக் குறித்தோ போதிய அளவு சிந்திப்பதில்லை. ஆனால் பரிசுத்தத்தின் முக்கியமான ஒரு பிரதிபலிப்பு பிறருக்கு நன்மை செய்தலாகும்.

ஏசாயா தீர்க்கனின் காலம். ஜனங்கள் தங்கள் வழக்கத்தின்படியே இறை வழிபாடுகளில் தீவிரமாயிருந்தார்கள். பலியிடுதல், ஓய்வு நாள் ஆசரிப்பு, பண்டிகை கொண்டாட்டம், காணிக்கை கொடுத்தல், ஜெபம் என வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்கள் குறைவின்றி நடந்தன. ஆனால் தேவன் அவைகளைப் பார்த்து வெறுப்படைந்து, இவைகளெல்லாம் தமக்குத் தேவையில்லை என்று கூறினார். இந்த வழிபாட்டு சம்பந்தமான விஷயங்கள் அவருக்கு அரோசிகமாகவும், அருவருப்பாகவும் இருந்தன.

அதற்குப் பதிலாக அவர்களைப் பார்த்து நன்மை செய்ய படியுங்கள் என்றார். ஆம். அவர்கள் வழிபாட்டு விஷயங்களில் நன்கு பழகியிருந்தார்கள். ஆனால் நன்மை செய்யவோ பழகவில்லை. இன்று நம்முடைய நிலை என்ன? நாம் சபை கூடுதல், ஆராதித்தல், காணிக்கை கொடுத்தல், ஜெபம் செய்தல், துதிஸ்தோத்திரம் ஏறெடுத்தல், ஊழியம் எனப் பல ஆவிக்குரிய காரியங்களில் பழகியிருக்கின்றோம். ஆனால் நன்மை செய்யப் பழகியிருக்கின்றோமா? நன்மை செய்தல் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்திருக்கின்றோமா? பிறருக்கு நன்மை செய்வதை வாழ்க்கையின் முக்கியமான ஒரு அலுவலாகக் கொள்ளாதவர்கள், தேவனுடைய பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்திருக்கின்றோமா? (மத்-25:41-46)

இயேசு கிறிஸ்து மத சம்பந்தமான காரியங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தவரல்ல. அவர் நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்தார் என்று வேதம் சொல்கின்றது. ஏனென்றால் நன்மை செய்தல் என்பது தேவனைப் பிரியப்படுத்துகின்ற வாழ்க்கையின் முக்கியமான ஒரு அம்சம் ஆகும். நாம் கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்படுவது உண்மையாயின் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவிகளையும், உபகாரங்களையும் செய்வதற்கு அசதியாயிருக்க முடியாது. இன்று ஆண்டவர் நம்மைப் பார்த்து நன்மை செய்யப் படியுங்கள் என்று சொல்கிறார். நாம் எவ்வளவுதான் ஆராதித்து, காணிக்கை கொடுத்து ஊழியம் செய்து வாழ்ந்தாலும், ஆக்கப்பூர்வ நன்மைகளைப் பிறருக்குச் செய்யாவிடில் நம்முடைய பரிசுத்தம் அரைகுறையானதே.
நன்மை செய்யப் பழகுவோம்...

ஆமென் ....
**** **** **** **** **** *
இந்த வலைப்பக்கம் உங்களுக்குப்பிடித்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து...
பின் தொடரவும்... நன்றி
https://www.facebook.com/profile.php?id=61564058229268
06/06/2026

    05-06-2026
05/06/2026

05-06-2026

சோதனைகளில் இருந்து ஆறுதல்....இன்றைய வேதாகமப் பகுதி:2 கொரிந்தியர் 1:3-11தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த ...
04/06/2026

சோதனைகளில் இருந்து ஆறுதல்....

இன்றைய வேதாகமப் பகுதி:
2 கொரிந்தியர் 1:3-11

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திர வங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.

2 கொரிந்தியர் 1 : 4

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம்.ஆனால், நாம் கடினமான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று ஆண்டவர் விரும்புகிறார்" .

பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட கடினமான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார்.

நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது ஆண்டவரிடத்தில் கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்களாய் இருந்தால், ஆண்டவர் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.

நீங்கள் இப்போது கடினமான சூழ்நிலையிலே இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்களை வழிநடத்தவும் முடியும்.

கடினமான நாட்களில் கற்றுக் கொண்டதை நல்ல நிலையில் இருக்கும் போதும் மறக்காதீர்கள்....

ஆமென் ....
**** **** **** **** **** ****
இந்த வலைப்பக்கம் உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து...
பின் தொடரவும்... நன்றி
https://www.facebook.com/profile.php?id=61564058229268
05/06/2026

04/06/2026

05/06/2026

    04-06-2026
04/06/2026

04-06-2026

Address

Poonga Nagar
Pudukkottai
622003

Website

Alerts

Be the first to know and let us send you an email when BibleQuest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category