01/04/2015
Thanks to Dinakaran e-Paper!!!
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=444376&cat=504
மறமடக்கி ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாகுமா?
பதிவு செய்த நேரம்:2015-04-01 11:09:41
அறந்தாங்கி, : அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கியில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வட்டார மருத்துவமனையாக தரம் உயருமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். இதே போல் ஊரின் மையப் பகுதியில் உள்ள ஊரணியை தூர் வாரி சீரமைத்து நீர் நிரப்ப ஆவணச் செய்யவேண்டும். மறமடக்கி அரசு துவக்கப் பள்ளியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சுற்றுச்சுவரை முழுமையாக கட்டித்தர வேண்டும். மறமடக்கி கிராமத்தில் அரசு சார்பில் மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும்.
மறமடக்கியில் இருந்து பரவாக்கோட்டை, குரும்பூர், குளவாய்பட்டி வழியாக புதுக்கோட்டைக்கு புதிய வழித் தடத்தில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கியில் இருந்து மறமடக்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூருக்கு புதிய வழித் தடத்தில் பஸ் இயக்கவேண்டும்.
இதே போல், அறந்தாங்கியில் இருந்து சிட்டங்காடு, மறமடக்கி, கொத்தமங்கலம், வடகாடு, ஆவணம் வழியாக பட்டுக்கோட்டைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விட வேண்டும். ஆலங்குடியில் இருந்து மறமடக்கி, அறந்தாங்கி, கட்டுமாவடி வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் வகையில் தொண்டிக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. எனவே, இவற்றை நனவாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.
update District news provides dinakaran in tamil.