31/12/2025
இந்த ஆண்டின் இறுதி நாளினை இனிமையாக்கியது மதர் தெரேசா கல்வி நிறுவனம்.
கடந்த 4 மாதங்களில் CVB அறக்கட்டளைகளையோடு இணைந்து 4 நிகழ்வுகள் மூலம் 2000+ மரக்கன்றுகளை நடவு செய்தோம். அண்ணன் விஜயபாஸ்கர் அவர்கள் மிக எளிமையாக அனைத்து நிகழ்வுகளிலும் எங்களோடு கலந்து கொண்டு மிக உற்சாகமாக மரக்கன்றுகளை நடவு செய்து உடன் வந்த அனைவரையும் உற்சாகமூட்டி பசுமை படரச் செய்தார். அனைத்து நிகழ்வுகளும் உள்ளபடியே மனதிற்கு நெகிழ்வான இருந்தது.
விதைக்கலாமின் பணியை ஊக்குவிக்கும் வகையில் விதைக்கலாம் அமைப்பிற்கு இன்றைய தினம் விருது வழங்க ஆவண செய்த முன்னாள் அமைச்சர் எங்கள் மரியாதைக்குரிய டாக்டர். விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும் , மதர் தெரேசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் அண்ணன் அவர்களுக்கும் விதைக்கலாம் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#வாருங்கள்
#ஒன்றாகலாம்
#விதைக்கலாம்