Description
© https://www.facebook.com/tamilnaduyadavarperiyakkam █║▌│█│║▌║││█║▌║▌║
யாதவர் என்பதற்கு "யது வம்சத்தவர்" என்றும், யாதவன் என்பதற்குக் "கண்ணன் " என்று பொருள் விளக்கம் தருகின்றது செந்தமிழ் அகராதி (பக்கம். 606). யாதவர் -யாதவம் -பசு, பசுகளையுடையவர்" என்று விளக்கம் தருகின்றது நந்தமண்டல சதகம் (பக்கம். 68). யயாதி என்னும் அரசனின் வழியில் வந்தவன் யது என்பவன். இந்த யது குலத்தில் பிறந்தவர்கள் ய
ாதவர் எனப்பட்டனர் என்றும் கூறுவர். பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுவரும் ஆயர், இடையர், கோவலர், கோன், கரையாளர், நம்பி, பிள்ளை, ஆகிய அனைவரும் இன்று அகில இந்திய அளவில் யாதவர் என்ற ஓரணியில் இருந்துவருகின்றனர் என்பதே உண்மை.
ஆயர்கள் தொன்மையானவர்கள்; இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் வளர்ந்துவரும் உயிரினங்களுக்கு ஏற்ப பெயர் பெறுகின்றனர். பழமையான தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள சிறப்பினைப் பெற்றவர்கள்;
நம்பிக்கை உரியவர்கள்; தலைமைப் பண்பு உடையவர்கள்; தலைவன், அரசன், பசுகூட்டங்களுக்கு தலைவன் என்பது தெளிவாகின்றது. தமிழக அரசமுறை இவர்களின்மூலமே தோன்றியது என அறியப்படுகின்றது. பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வரும் நாம் இன்று அனைதிந்திய அளவில் யாதவர் என்ற ஓர் இன அமைப்பின் கீழ் ஒன்று பட்டு வருவது சமூக மாற்றத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாகும்.
யாதவர் என்போர் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர்,யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோனார்,,யாதவர்,கரையாளர்,சேர்வைக்காரர்,இடையர்,ஆயர்,பிள்ளை,மணியக்காரர் அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது