தேவிபட்டினம் நலச் சங்கம்

தேவிபட்டினம் நலச் சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தேவிபட்டினம் நலச் சங்கம், Social service, devipattinam, Ramanathapuram.

அஸ்ஸலாமு அலைக்கும்தேவிபட்டினம் நல சங்கம் வருடம் தோறும் நடத்தப்படும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த வருடம் 2025 அல்தவர...
31/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

தேவிபட்டினம் நல சங்கம் வருடம் தோறும் நடத்தப்படும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த வருடம் 2025 அல்தவர் பூங்காவில் செயலாளர்கள் சமீர் மற்றும் ஹாஜா அவர்களின் தலைமையில், எஸ் பி எஸ் நிஜாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை பெரோஸ் அவர்களின் மகனார் நைம் அவர்கள் கிராத் ஓதி, எஸ் பி எஸ் நிஜாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி துவங்கி வைத்தார்.

செயலாளர் ஹாஜா அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஃபித்ரா தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

செயலாளர் சமீர் அவர்கள் சங்கத்தின் வருங்கால வளர்ச்சி மற்றும் நமது ஊர் இளைஞர்களின் சமூக சேவை குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய தேவை குறித்து எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு ருவைஸ், அபுதாபி, சார்ஜா, அஜ்மான், துபாய், ஃபுஜைரா, அல் ஐன் என பல ஊர்களில் இருந்து நமது ஊர் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனை மற்றும் குறை நிறைகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஊரில் இருந்து வருகை தந்த மேல பள்ளி, ஐக்கிய ஜமாத் மற்றும் சமூக சேவா சங்கத்தில் நிர்வாக உறுப்பினர் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் தா.தா. ஹயாத் அவர்கள், தொழிலதிபர் Eng.நஜீபுள்ள அவர்கள் மற்றும் சவுதியில் இருந்து வருகை தந்த சஹீன் அவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தா.தா. ஹயாத் அவர்கள் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இதில் நலச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ருவைஸ் சீனி, ஷேக் தாவூத், ரபீதீன், அலாவுதீன், PSD. ஷேக் தாவூத் மற்றும் சமீபத்தில் பொறுப்பேற்ற பெரோஸ் மற்றும் ஜியாவுல் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட்டது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு,
வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு தங்கும் இடம் வசதி,
புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடர்பான உதவிகள்,
அமீரக அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட சலுகைகள் மற்றும் உதவிகள்,
வேலை ஆட்களுக்கு தேவையான சட்ட ஆலோசனை போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

இறுதியாக நமது ஊர் மக்களுக்கு தேவையான அனைத்துயும் செய்வதற்கு முதலில் நமது ஊர் மக்கள் பற்றிய தகவல் தேவைப்படுவதால் அதற்கு google ஃபார்ம் மூலம் விவரங்களை சேகரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

தேவிபட்டினம் நலச்சங்கம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிக விரைவில் ஒரு ஃபீட்பேக் ஃபார்ம் தயார் செய்து தேவிபட்டினம் தொடர்பான அனைத்து வாட்சப் குழுமங்களிலும் கொடுக்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி அமீரகத்தில் வாழக்கூடிய அனைத்து தேவிபட்டின மக்களும் உங்கள் தகவல்களை தருமாறு இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் உங்களுக்கு தெரிந்த தேவிபட்டினம் மக்களுக்கு இதை டேக் செய்து பகிரவும்..

https://forms.gle/7cBLyhdK9GbBrmNy6

Sameer Ahamed Sheikhaja Haja Faleel Ahamed Habeeb Mubin Deen Sala Deen Dhadha Hayath Dhadha Sultham Nizam Ziaul Rahman

Address

Devipattinam
Ramanathapuram
623514

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவிபட்டினம் நலச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category