28/08/2026
தமிழ்நாடு காங்கிரஸ் செய்திக்குறிப்பு
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாண்டிய மன்னன் காத்தப்ப பூலித்தேவர் அவர்கள் கி.பி.1715 முதல் 1767 வரை இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாமன்னர் ஆவார். அவருடைய 311 ஆவது ஜெயந்தி விழா, வருகின்ற 1.9.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல், பாண்டியர்கள் சமஸ்தானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் கலந்து கொண்டு முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத் தலைவர் திரு. ஆலங்குளம் செல்வராஜ் முன்னிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. இராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி ஆர். மனோகரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. எஸ்.எஸ். இராமசுப்பு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் திரு. எம். இராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. வி.பி. துரை, திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவர் திரு. துரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. மா. சின்னதம்பி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திரு. எஸ். பழனி நாடார், திரு. கே. சங்கரபாண்டியன், திரு. வீ. கார்த்திகேயன், கொடிக்குறிச்சி திரு. முத்தையா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. கே. இரவி அருணன், ஊத்துமலை ஜமீன்தார் திரு. முரளிராஜா, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.