24/08/2026
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகளால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்தும், இத்தகைய சாதிய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் அருந்ததியர் போராட்டக் குழு சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அருந்ததியர் சமூக மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதிய வன்முறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அருந்ததியர் போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.