31/05/2026
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பியாக என்னுடன் அன்பாக பழகிய, புதுச்சேரி மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் கடைநிலை ஊழியராக பணியாற்றிய சுப்புடு அவர்களின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருமணம் ஆகாத சுப்புடுவின் மகள் இறுதிச் சடங்கை செய்ததை கண்டு, “இந்த குழந்தை காரியம் செய்கிறதே” என்று மனம் நெகிழ்ந்து கூறிய முதல்வர் ரங்கசாமி, கண்ணீர் விட்டதோடு மட்டுமல்லாமல், இறுதிச் சடங்கு முடிந்த பின்னரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற மனமின்றி நீண்ட நேரம் தங்கி இருந்தார்.
பதவி, அதிகாரம், அரசியல் வெற்றி ஆகியவற்றைக் காட்டிலும் மனிதநேயம் உயர்ந்தது என்பதை தனது செயலால் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரங்கசாமி.
தன்னுடன் பணியாற்றிய ஒரு சாதாரண ஊழியரின் குடும்பத் துயரத்தை தனது சொந்த துயரமாக உணரும் இந்த குணம்தான் அவரை மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கச் செய்கிறது.மனிதர்களை மதிக்கும் பண்பு, உறவுகளை காக்கும் அன்பு, மற்றவர்களின் வேதனையை உணரும் கருணை ஆகியவையே ரங்கசாமியின் உண்மையான பலம். இதுதான் அவரது மனிதநேயம்; இதுவே அவரது வெற்றி; இதுவே அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்தும் உயர்ந்த பண்பு.
இதில் அரசியல் இல்லை.....