NTK ITwing GOBI

NTK ITwing GOBI NTK Gobi official

29/07/2026
27/07/2026

*NEET பற்றிய தெளிவான புரிதல்.*

1. இந்தியாவில் மொத்தம் *1.30 லட்சம் மருத்துவ கல்லூரி இடங்கள் தான்* உள்ளன.

2. சுமார் 64000 அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் மற்றும் 65000 தனியார் மருத்துவ கல்லூரி இடங்கள்.

3. சுமார் 22 லட்சம் மாணவர்கள் NEET எழுதினார்கள். *சுமார் 23 லட்சம் மாணவர்கள் தயார் செய்தார்கள்.*

4. இந்த 23 லட்சம் பேர் ஆளுக்கு சுமார் 1.50 லட்சம் கோச்சிங் சென்டர்களுக்கு பணம் செலுத்தினார்கள்.

5. ஒரு *ஆண்டிற்கு கோச்சிங் சென்டர்களுக்கு சுமார் 34500 ஆயிரம் கோடி வருமானம்.* எவ்வளவு? 34500 ஆயிரம் கோடி.

6. *வெறும் 1.30 லட்சம் இடங்களுக்கு 11 லட்சம் பேர் தேர்வானார்கள்.*

7. இந்த 11 லட்சம் பேரில் 64000 பேர் அரசு கல்லூரிகளில் இடம் பெறுவார்கள்.

8. *மீதமுள்ள 10.4 லட்சம் மாணவர்களில் யாருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும்?*

9. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கா? இல்லை. அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே.

10. *1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.*

11. அதைவிட *மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவ இடம் வாங்க முடிகிறது.* பணத்தை வைத்து.

a) 1.30 லட்சம் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு, *ஏன் 23 லட்சம் பேர் இந்த NEET தேர்வு எழுத வேண்டும்?* இதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்?

b) 1.30 லட்சம் இடங்களுக்கு 11.30 லட்சம் பேர் தகுதி என்று சொல்லும் ஒரு தேர்வு முறை சரியானதா?

c) *தகுதி பெற்ற 11.30 லட்சம் பேரில் முதல் 1.30 லட்சம் பேருக்கும் மருத்துவ கல்லூரி இடம் என்று சொல்ல முடியாத* தேர்வு முறை சரியானதா?

d) *தனியார் மருத்துவ கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற 65000 பேர் சேர முடியும்*. இது சரியா?

e) *நல்ல மதிப்பெண் பெற்ற 10 லட்சம் மாணவர்களுக்கு காசு கொடுக்க முடியவில்லை என்றால் மருத்துவ கல்லூரி இடம் கிடையாது* என்று சொல்லும் தேர்வு முறை சரியானதா?

*அந்த 34500 கோடி ரூபாய் தான் (ஒரு வருடத்திற்கு) NEETக்கு பின்னால் இருக்கும் உண்மை*. இதற்காக தான் இத்தனை பேர் இந்த தேர்வு முறை சரியில்லை என்று தெரிந்தும் முட்டுக் கொடுக்கிறார்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பொ. சுரேஷ்
மாநில துணை செயலாளர்,
த. தொ. நு. பாசறை,
நாம் தமிழர் கட்சி,
கோபிசெட்டிபாளையம்

Address

Karatoor Road
Satyamangalam
638503

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTK ITwing GOBI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share