Sivagangai Seemai

Sivagangai Seemai Official sivagangai district page includes sivagangai news, sivagangai events and sivagangai district information's.
(498)

For further details mail us [email protected]

 #சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் 2023PC:  DD PHOTOGRAPHY
06/07/2023

#சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில்
தேரோட்டம் 2023

PC: DD PHOTOGRAPHY

தண்ணீர் தேடி வந்த மான்கள் வாகனம் மோதி பலி..!மானாமதுரை அருகே, தண்ணீர் தேடி வந்த 2 புள்ளி மான்கள் சாலையை கடக்க முயன்றபோது ...
03/07/2023

தண்ணீர் தேடி வந்த மான்கள் வாகனம் மோதி பலி..!

மானாமதுரை அருகே, தண்ணீர் தேடி வந்த 2 புள்ளி மான்கள் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக பலியாகின.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சுற்றியுள்ள எம்.கரிசல்குளம், தீயனூர், மேலப்பசலை, கால்பிரவு, வேலூர், பெரியகோட்டை, கிருங்காகோட்டை உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன.

சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் காட்டுப்பகுதி நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதை அடுத்து புள்ளி மான்கள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு வருகின்றன. அப்படி வரும்போது, சில நேரம் நாய்களிடம் சிக்கும் மான்கள் பலியாகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை எம்.கரிசல்குளம் அருகே தண்ணீர் தேடி வந்த 2 புள்ளிமான்கள் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகின.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலையடுத்து மருத்துவருடன் வந்த வனத்துறை அதிகாரிகள், மான்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

சிறப்பாக நடைபெற்று முடிந்த  #சிவகங்கை சீமை  #பனங்குடி  #மஞ்சுவிரட்டு!PC: டிஜே போட்டோகிராபி
03/07/2023

சிறப்பாக நடைபெற்று முடிந்த #சிவகங்கை சீமை #பனங்குடி #மஞ்சுவிரட்டு!

PC: டிஜே போட்டோகிராபி

02/07/2023

கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்..! சிவகங்கை சிறுகூடல்பட்டியில் களைகட்டிய மீன் பிடித் திருவிழா
| |

சிவகங்கை: அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு!
02/07/2023

சிவகங்கை: அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு!

பனங்குடி தேர்த்திருவிழா புகைப்படங்கள்-2023!PC: முத்துக்காளையன்‌ போட்டோகிராபி #திருவிழா  #சிவகங்கை  #பனங்குடி
02/07/2023

பனங்குடி தேர்த்திருவிழா புகைப்படங்கள்-2023!

PC: முத்துக்காளையன்‌ போட்டோகிராபி
#திருவிழா #சிவகங்கை #பனங்குடி

 #காளையார்கோவில் தெப்ப திருவிழா புகைப்படங்கள்! 🙏😍PC: VKV Photography
11/06/2023

#காளையார்கோவில் தெப்ப திருவிழா புகைப்படங்கள்! 🙏😍

PC: VKV Photography

சிவகங்கை | பழமையான பள்ளி கட்டிடத்தை நவீன அரங்கமாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்!சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்க...
11/06/2023

சிவகங்கை | பழமையான பள்ளி கட்டிடத்தை நவீன அரங்கமாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடியில் பழமையான பள்ளிக் கட்டிடத்தை நவீன கூட்டரங்கமாக முன்னாள் மாணவர்கள் மாற்றி உள்ளனர்.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 1962-ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 650 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 27 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள பல கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருந்தன.

இந்நிலையில், இப்பள்ளியில் 1968-69-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 பேர் ஒன்று சேர்ந்து ஒரு கட்டிடத்தை புதுப்பித்து கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வாட்ஸ்ஆப் குழுவை ஏற்படுத்தி ரூ.3 லட்சம் வரை நன்கொடை திரட்டினர். அந்தப் பணம் மூலம் பழமையான ஒரு கட்டிடத்தைப் புதுப்பித்து நவீன கூட்ட அரங்கமாக மாற்றியுள்ளனர். மேலும், அரங்கு முழுவதும் வண்ண மயமாக மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை தலைமை ஆசிரியர் பிரிட்டோ தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து, ஊராட்சித் தலைவர் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அருணாச்சலம் முன்னிலையில், முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியுமான மெய்யப்பன் திறந்து வைத்தார்.

இது குறித்து தலைமைஆசிரியர் பிரிட்டோ கூறியதாவது: பள்ளியில் மொத்தம் 13 கட்டிடங்கள் உள்ளன. இதில் நான் பொறுப்பேற்றதில் இருந்து 7 கட்டிடங்களைப் புதுப்பித்துள்ளோம். ஒரு கட்டிடத்தைச் சீரமைத்து நூலகமாக மாற்றினோம். அந்த நூலகத்தில் 40 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம்.

படிப்படியாக ஒவ்வொரு கட்டிடமாகச் சீரமைத்து வருகிறோம். இதற்கு முன்னாள் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால், பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

11/06/2023

சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான #சிவகங்கை மாணவி

போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்! விழிப்புடன் இருப்போம்!
29/05/2023

போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!
விழிப்புடன் இருப்போம்!

சிவகங்கையில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை: 10 மின்கம்பங்கள், 100 மரங்கள் சாய்ந்தன!
29/05/2023

சிவகங்கையில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை: 10 மின்கம்பங்கள், 100 மரங்கள் சாய்ந்தன!

ஆன்லைனில் இழந்த 82 ஆயிரம் ரூபாயை உடனடியாக மீட்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார்!காரைக்குடி இளைஞர் ஆன்லைனில் இழந்த ரூ.82,0...
26/05/2023

ஆன்லைனில் இழந்த 82 ஆயிரம் ரூபாயை உடனடியாக மீட்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார்!

காரைக்குடி இளைஞர் ஆன்லைனில் இழந்த ரூ.82,000-த்தை சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக மீட்டனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (24). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் இருந்தது. இதையடுத்து ராமமூரத்தி முதலில் குறைவான பணத்தை முதலீடு செய்துள்ளார். அவரது பணம் இரட்டிப்பானது. இதனால் சந்தோஷம் அடைந்த ராமமூர்த்தி பணத்தை எடுக்காமல் தொடர்ந்து 16 தவணைகளில் ரூ.82,400 வரை முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தா்.
தொடர்ந்து மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக செயல்பட்டு, பணபரிவர்த்தனை நடத்த வங்கி கணக்கை முடக்கினர். தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் பேசி வங்கி கணக்கில் இருந்து ரூ.82,400-யை மீட்டு ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு வெகுமதி அளித்து எஸ்பி பாராட்டினார். மேலும் ஆன்லைன் மோசடி குறித்து உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் செய்தால், உடனடியாக குற்றவாளிகளின் வங்கி கணக்கை முடக்கி, பணத்தை மீட்க முடியும் என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

Address

Aranmanai Vaasal, Sivaganga
Sivagangai
630561

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai Seemai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sivagangai Seemai:

Share

Sivagangai Seemai Story

Official Sivagangai district page includes sivagangai news, sivagangai events and sivagangai district information. For further details mail us [email protected]