25/11/2025
#மக்கள்_போராளி #வெண்மணி அவர்களின் பதிவிலிருந்து
விளிம்பு நிலை மக்களின் வரலாற்றை மறுப்பதும் மறைப்பதும் சாதிக்கு அடித்தளமானபார்ப்பனியம்
வரலாற்று சுவடுகளை தேடி கண்டுபிடித்து பதிவு செய்வது திராவிடம்
----------------------------------
18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய
தீரன் சின்னமலை அவர்களின் படைத்தளபதி
ஈரோடு மாவட்டம், அரசலூர் ஜெயராமபுரம் கிராமத்தில் பிறந்த அருந்ததிய சமூகத்தைச் சார்ந்தவர் பொல்லான்...
சிறுவயதிலிருந்தே
மற்போர்,
வாள்,
வில் போன்ற பயிற்சிகளில் சிறந்து விளங்கி தீரன் சின்னமலையின் படையில் தளபதியாகவும், ஒற்றர் படையிலும் முக்கியப் பங்காற்றி,
தீரன் சின்னமலை அவர்கள் வெற்றி கண்ட
காவிரி கரை
அரசலூர்
ஓடாநிலை
போர்களில் மிகச்சிறந்த அளவில் செயல்பட்டு வெற்றிக்கு துணை நின்றார்
இந்து வர்ண கோட்பாட்டால் இழிவு சுமத்தப்பட்ட சமூகத்தின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் அருந்ததிய சமூக மக்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் உள்ள இயக்கத்தினுடைய
தலைவர்கள்
திமுக கழகத்தின் தலைவர்
முன்னாள் முதல்வர்
கலைஞர்
அவர்களிடம் பொல்லானுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் அடிப்படையில் கலைஞர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின் தொடர்ச்சியாக தற்போது திராவிடம் மாடல் அரசின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை 26.12.25ல் குதிரையில் அமைந்துள்ள முழு உருவ சிலையும் மண்டபமும் திறந்து வைக்க உள்ளார்.
தற்போது ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ள சில இயக்கங்களும் தீர்த்தகிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த பொல்லானுக்குமணிமண்டபம் அமைந்துள்ள இடம்
பூமிதான இயக்கம் நிலம் என்றும் இடம் சம்மந்தமான வழக்கு நிலுவையில்
உள்ளதால் மணி மண்டபத்தை திறக்கக் கூடாது என்று வீடுகளில் கருப்பு கட்டியும் கடை அடைப்பும் நடத்துவதாக தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது...
1. பூமிதான இயக்கத்தை அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதில் சட்டபூர்வமாக எந்த தடையும் இல்லை மாறாக அரசு எடுத்துக் கொள்ளும் நிலத்திற்கு உண்டான மதிப்பு தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்...
2. நிலம் பொது பயன்பாட்டில் இருந்தால் நில அனுபவ சுவாதனத்தில் உள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்...
திராவிட மாடல் அரசு
1.செய்து மக்கள் தொடர்பு துறை
2.துறை மூன்றாவது
3.காவல்துறை
4.தீயணைப்பு துறை
5. மாநில நெடுஞ்சாலைத்துறை
உள்ளிட்ட துறைகளில்
அனுமதி பெற்று
அதன் பின்னர்
6.வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
7.தலைமைச் செயலாளர்
தலைமையிலும் கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன் பின்னர் தான் மண்டப பணிகள் சட்டபூர்வமாக தொடங்கியது...
எதிர்ப்பு காரணம் பூமிதான நீளம் அல்ல
1. 93.00 சென்று நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபம்
2. மண்டப முகப்பில் கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் மாவீரர் பொல்லான் அவர்களின் சிலை அமைப்பு
3.வரவேற்பு இடம்
4. உணவு அரை
5. தங்குமிடம்
6. திருமணம் அல்லது நிகழ்வுகள் நடக்கும் மேடை
7. லிப்ட் வசதி
உள்ளீட்டு அனைத்தும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட
8.CENTRLIZED AC மாற்றப்பட்டுள்ளது
9. சமையலறை தனியாகவும் அதன் பின்னர் சிறு பூங்கா
10. மண்டப முகப்பில் பிரமாண்டமான சிலை
11.பூங்கா
12. 100 கார்களுக்கு மேல் நிற்கும் அளவிற்கு பார்க்கிங் வசதி
13. மண்டபம் சென்று வர தார் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
தான் காரணமாய் இருக்கிறது அதற்குக் காரணம் சாதிய என்கிற மனநோய் அதற்கு நாமோ அரசோ மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
மக்கள் கோரிக்கையை ஏற்று மாவீரர் பொல்லான் அவர்களுக்கு குதிரையுடன் கூடிய முழு உருவ சிலையையும் மணிமண்டபமும் அமைத்துக் கொடுத்த திராவிட மாடல் அரசின் தலைவர்
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அருந்ததிர் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் மேற்கு மாவட்டங்களின் அடையாளமாய் உள்ள தந்தை பெரியார் பிறந்த மன்னான ஈரோடு மாவட்டம் அரசலூர் ஜெயராமபுரத்திற்கு நாளை காலை 8 மணிக்கு அருந்ததியர் மக்கள் அணி திரண்டு திரளாக வர வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
தோழமையுடன்
வெண்மணி
தலைவர்
திராவிட தமிழர் கட்சி - தமிழ்நாடு
| |
| | |
| | Venmani | |
| DMK ITWing | | #திதக
| #திராவிடத்தமிழர்கட்சி