Sriperumbudur Revenue Division

Sriperumbudur Revenue Division Official page of Revenue Division, Sriperumbudur. About the service of Revenue Department, Sriperumbudur, Kanchipuram District, Tamilnadu.

All type of constructions and land புரொமோட்டர்ஸ்
09/01/2023

All type of constructions and land புரொமோட்டர்ஸ்

திருப்பெரும்புதூரில் கொரோனா பரிசோதனையின்போது.படத்தில் : பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் அவர்கள்- Sriperum...
07/05/2020

திருப்பெரும்புதூரில் கொரோனா பரிசோதனையின்போது.

படத்தில் : பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் அவர்கள்

- Sriperumbudur Revenue Division

05/05/2020

திருப்பெரும்புதூர் மணிக்கூண்டு அருகே
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.
#காணொலி

மக்கள் நலனுக்காக
களத்தில் வருவாய்த்துறை

நன்றி : திருப்பெரும்புதூர் ரோட்டரி சங்கம்

- Sriperumbudur Revenue Division

காஞ்சிபுரம் : புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பில்லை.- Sriperumbudur Revenue Division
05/05/2020

காஞ்சிபுரம் : புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பில்லை.

- Sriperumbudur Revenue Division

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், எழிச்சூர் ஊராட்சியில் உள்ள 840 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் ம...
02/05/2020

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், எழிச்சூர் ஊராட்சியில் உள்ள 840 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
#நிவாரணம்

- Sriperumbudur Revenue Division

தொழிலாளர்கள் பொழுதுபோக்க திரை கட்டி படம் ஒளிபரப்பு----------------------- #ஸ்ரீபெரும்புதுார் : விடுதியில் முடங்கி கிடக்க...
01/05/2020

தொழிலாளர்கள் பொழுதுபோக்க திரை கட்டி படம் ஒளிபரப்பு
-----------------------

#ஸ்ரீபெரும்புதுார் : விடுதியில் முடங்கி கிடக்கும் வடமாநில தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தேச பக்தியை வெளிக்காட்டும் படங்கள், வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, எழுச்சூர் கிராமத்தில், அரசு சார்பில், கட்டட தொழிலாளர் நல விடுதி உள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், தங்கும் இடவசதி இல்லாமல், வறுமையில் தவித்து வந்த வடமாநில தொழிலாளர்கள், 400 பேர், இந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல், விடுதியிலேயே தங்கிஉள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு, புத்துணர்வு அளிக்கும் நடவடிக்கையில், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திரை அமைத்து, ப்ரஜெக்டர் மூலம் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் உரையாற்றும் வீடியோ பதிவு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தேச பக்தி உணர்வை வெளிக்காட்டும் படங்களை, தினமும் மாலை, திரையிடப்படுகின்றன.

வடமாநில தொழிலாளர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, இந்நடவடிக்கையை மேற்கொண்டுஉள்ளார்.சமூக இடைவெளியில் அமர்ந்து, இந்த காட்சிகளை, வடமாநில தொழிலாளர்கள், ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்

Sriperumbudur Revenue Division

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அயராது உழைக்கும்  #வருவாய்த்துறை.விழிப்புணர்வும், மக்களின் ஒத்துழைப்பும் தேவை.- Sriperumbud...
30/04/2020

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அயராது உழைக்கும் #வருவாய்த்துறை.
விழிப்புணர்வும், மக்களின் ஒத்துழைப்பும் தேவை.

- Sriperumbudur Revenue Division

திருப்பெரும்பூதூரில்ஊரடங்கில் இயங்கிய தொழிற்சாலை.. சோதனை செய்த  #வருவாய்த்துறை அதிகாரிகள்.. சுவர் ஏறி தப்பித்த தொழிலாளர்...
30/04/2020

திருப்பெரும்பூதூரில்
ஊரடங்கில் இயங்கிய தொழிற்சாலை.. சோதனை செய்த #வருவாய்த்துறை அதிகாரிகள்.. சுவர் ஏறி தப்பித்த தொழிலாளர்கள்

திருப்பெரும்பூதூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில், இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை பராமரிப்பு பணிக்காக ஊழியர்களை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி இருந்தது. நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பத்து நபர்களை மட்டுமே பணியில் உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனமோ, சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலையை இயக்கி வந்துள்ளது.

இதை அறிந்த திருப்பெரும்பூதூர் #கோட்டாட்சியர் சம்பந்தபந்தப்பட்ட தொழிற்சாலையை நேரடியாக ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் கோட்டாட்சியரை நிறுவனத்தின் முன்னே 30 நிமிடங்களுக்கு மேலாக நிற்க வைத்து விட்டு, ஊழியர்களை சுவர் ஏறி தப்பித்துச் செல்ல வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது
பஞ்சாபில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு !

இதனையடுத்து தொழிற்சாலை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை சோதனை செய்தார் கோட்டாட்சியர். அப்போது 30 இரு சக்கர வாகனங்களும், நான்கு நான்கு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் தொழிற்சாலையில் 100 நபர்களுக்கு மேல் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி நிறுவனத்தை இயங்கியது குறித்த விளக்கத்தை மூன்று நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கி வந்த தொழிற்சாலையை சோதனையிட வந்த கோட்டாட்சிரை தடுத்தி நிற....

30/04/2020

விதிமுறையை மீறிய தொழிற்சாலைக்கு நோட்டீஸ்

திருப்பெரும்பூதூரை, வருவாய்த்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேற்றைய சோதனையில் விதிமுறை மீறி செயல்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

- வருவாய்த்துறை

கொரோனா விழிப்புணர்வுக்காக களத்தில்  #வருவாய்த்துறை:

 #குன்றத்தூர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போல் வேடமணிந்து...
28/04/2020

கொரோனா விழிப்புணர்வுக்காக களத்தில் #வருவாய்த்துறை:



#குன்றத்தூர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போல் வேடமணிந்து நூதனமான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கிராம நிருவாக அலுவலர்கள்.

கோட்டாட்சியர் அவர்களின் மேற்பார்வையில் தெருத்தெருவாக சென்று விழிப்புணர்வு.



காணொலி : https://youtu.be/rAa8xaUihxo

- Sriperumbudur Revenue Division

ARAM_NEWS குன்றத்தூர் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போல் வேடம் அணிந்து நூதன முறையில் கிராம நிர்.....

திருப்பெரும்பூதூரில்  #கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப...
27/04/2020

திருப்பெரும்பூதூரில் #கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த #திருப்பெரும்பூதூர் #வருவாய்த்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

திருப்பெரும்பூதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் மக்களிடையே சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக கடைகளில் மக்களை நெறிப்படுத்த திருப்பெரும்பூதூர் #வியாபாரிகளுடன் சந்திப்பு நிகழ்த்தப்பட்டு கடைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இச்சந்திப்பில் கடைகளுக்கு வரும் நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அரசு அறிவித்துள்ள கொரானா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பயனாக தற்போது வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பாக #நுகர்வோர் கைகள் கழுவ தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். அரசின் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்றினால் நிச்சயமாக பெரும் பாதிப்பிலிருந்து நம் சமூகத்தைக் காக்க முடியும். எனவே பொதுமக்களும் வியாபாரிகளும் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி திருப்பெரும்பூதூர் வருவாய்த் துறை கேட்டுக் கொள்கிறது.

- Sriperumbudur Revenue Division

 #கொரோனா #திருப்பெரும்பூதூர் தாலூக்காவில் அடித்தட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் வருவாய்த்துறை.படத்தி...
26/04/2020

#கொரோனா
#திருப்பெரும்பூதூர் தாலூக்காவில் அடித்தட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் வருவாய்த்துறை.

படத்தில் : வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அவர்கள்

Address

Sriperumbudur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sriperumbudur Revenue Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share