Karungulam City

Karungulam City கிராம மக்கள் நலக்குழு, கருங்குளம்.

கருங்குளம் ஆசிரியை வனிதாவுக்குடாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுதூத்துக்குடி மாவட்டம் கருங்குளம்  ஒன்றியம் புனித வளன் துவக்கப்...
05/09/2025

கருங்குளம் ஆசிரியை வனிதாவுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார். இந்தவிருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசிரியை வனிதாவை பள்ளி தாளார் அருட்தந்தை ஜாக்சன், தலைமை ஆசிரியை சகாய செல்வி, மற்றும் சக ஆசிரியர்கள், கருங்குளம் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

24/05/2023
மக்களின் உயிரோடு விளையாடும் கருங்குளம் பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி.,தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் வட...
25/11/2021

மக்களின் உயிரோடு விளையாடும் கருங்குளம் பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி.,
தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் வட்டம் - கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் - கருங்குளத்தில் பல ஆண்டு காலமாக குப்பைக் கூளங்களோடும், சாக்கடையாகவும், இறந்த உயிரினங்களின் உடல்கள் வீசப்பட்ட, பயன்படுத்தாமலும் தூர்வாராமல் கிடந்த கிணற்றுத் தண்ணீரை கருங்குளம் காமராஜர் தெரு, பாரதியார் தெரு, சி.எம்.எஸ் தெரு, வ.உ.சி தெரு, வன்னியராஜா கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்குக் குடிதண்ணீர் இணைப்பு வழியாக கொடுத்து நோய்த் தொற்று உருவாகக் காரணமாகியிருக்கும் கருங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கருங்குளம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதைக் காரணமாகக் காட்டி கடந்த ஒரு வாரகாலமாக குடி தண்ணீர் விடாமலும் தண்ணீர் குறைந்த பின்னரும் ஆற்றிலிருந்து தண்ணீர் விட முயற்சி செய்யாமல் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களை உருவாக்கும் வகையில் தூர்வாரப்படாத கிணற்றுத் தண்ணீரை விநியோகிக்க முயற்சிக்கிறார்கள்.
மேலும் வெள்ளக் காலங்களில் தண்ணீர் விநியோகிப்பதற்காகவே 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆற்றங்கரைகளில் அரசே போர் போட்டு கொடுத்துள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகமோ அதனை பயன்படுத்தாமல் தூர்வாரப்படாத சாக்கடையும், மழை நீரும் கலந்த சுகாதாரக் கேடான கிணற்றிலிருந்து தண்ணீர் விநியோகிக்க முயற்சி செய்து மக்களைக் கொல்லப் பார்க்கிறார்கள். எனவே சுகாதாரக் கேடான அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரியும், ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஆற்றங்கரையில் உள்ள போர் பம்ப் களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், மேலும் இது போன்ற மக்களின் உயிரோடு விளையாடும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனுப்புநர் :
ச.உடையார்,
செயலாளர்,
கிராம மக்கள் நலக்குழு,
திமுக கருங்குளம் மத்தியக் கிளை அவைத் தலைவர்,
கருங்குளம்,
திருவைகுண்டம் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9488231026,
9659681888.

21/07/2020

கொரோனா கொடுமையிலும் மின் கட்டண உயர்வு, மற்றும் கருங்குளம் குடிதண்ணீர் பிரச்சனையை கண்டித்து கண்டன போராட்டம் ...

நன்றி : தமிழ் முரசு ( 20/08/2018 )
21/08/2018

நன்றி : தமிழ் முரசு ( 20/08/2018 )

முறையாக பணிக்கு வராத மருத்துவரை பணியிட மாற்றம் செய்யாமல் பாராட்டு விழாவா நடத்துவார்கள்.தலைமை மருத்துவர் முறையாக பணிக்கு ...
31/07/2018

முறையாக பணிக்கு வராத மருத்துவரை பணியிட மாற்றம் செய்யாமல் பாராட்டு விழாவா நடத்துவார்கள்.
தலைமை மருத்துவர் முறையாக பணிக்கு வரமாட்டார். முறையாக பணிக்கு வராத மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டார். துணை இயக்குநரிடம் புகார் அளித்தால் மிரட்டுவார். மருத்துவமனையில் மருத்துவர் இல்லையென விசாரித்தால் மிரட்டுவார். மருத்துவமனையில் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தமாட்டார். மின்விளக்கு வசதி ஏற்படுத்த மாட்டார். கேள்வி கேட்டால் நம்மையே மிரட்டுவார் பின்னர் பணியிட மாற்றம் செய்யாமல் பாராட்டு விழாவா நடத்துவார்கள்.
யார் அந்த கிராம மக்கள் ?
பெயரில்லா பிச்சையே...

நன்றி : தினகரன் ( 02/06/2018 )
03/06/2018

நன்றி : தினகரன் ( 02/06/2018 )

நன்றி : தினகரன் ( 17/05/2018 )
17/05/2018

நன்றி : தினகரன் ( 17/05/2018 )

நன்றி : தமிழ் முரசு ( 16/05/2018 )
17/05/2018

நன்றி : தமிழ் முரசு ( 16/05/2018 )

தினகரன் ( 10/05/2018 )
10/05/2018

தினகரன் ( 10/05/2018 )

நன்றி : தமிழ் முரசு ( 09/05/2018 )
09/05/2018

நன்றி : தமிழ் முரசு ( 09/05/2018 )

நன்றி : தமிழ் முரசு ( 04/05/2018 )
05/05/2018

நன்றி : தமிழ் முரசு ( 04/05/2018 )

Address

Srivaikuntam

Alerts

Be the first to know and let us send you an email when Karungulam City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share