சுவாமிமலை பேரூர் திமுக

சுவாமிமலை பேரூர் திமுக கழக செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்?

15/08/2026

சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் நம் அன்பு தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்
15/08/2026

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்

பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!

நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!

அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳

 #கலைஞர்  Episode 1
11/08/2026

#கலைஞர்

Episode 1

Every great journey begins with a question.In 2026, a young resea...

முரசொலிக்கு 85 - ஆவது பிறந்தநாள்  வாழ்த்துகள்.
10/08/2026

முரசொலிக்கு 85 - ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்.

07/08/2026
07/08/2026
உடன்பிறப்புகளின்நெஞ்சங்களின் உளமார்ந்த தமிழர்களின்உயிரனைய தலைவரே!நின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்கவே!
07/08/2026

உடன்பிறப்புகளின்
நெஞ்சங்களின் உளமார்ந்த தமிழர்களின்
உயிரனைய தலைவரே!
நின் புகழ்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!

06/08/2026

வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் .

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!

06/08/2026

இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது -அரசின் திட்டங்களின் Remake Version budget!

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

Address

Swamimalai
612302

Alerts

Be the first to know and let us send you an email when சுவாமிமலை பேரூர் திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share