25/08/2025
தோழர் அருண் Arun Emp போராட்டத்தின் முஸ்திகள்!
ஒன்பதாம் வகுப்பு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பத்தாம் வகுப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் பள்ளி மாணவர் மாநில உபக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 11ஆம் வகுப்பில் அவரது தலைமையில் பள்ளிகள் முழுவதும் உள்ள மாணவர்களை கலைத்து 600க்கும் மேற்பட்ட மாணவர்களின் போராட்டங்களில் தலைமை ஏற்று வெற்றி பெற்றது அவரது முதல் போராட்டமாகும்.
அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரியின் முதலாம் ஆண்டில் காலகட்டத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட பேரவையில் மாவட்ட துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு. பின்பு தென்காசியின் முதல் மாவட்ட செயலாளராக வரலாறு பெற்ற போராட்டங்களை தலைமையற்று நடத்தியவர்...
தென்காசி மாவட்டத்தில் தோழரின் கால்கள் பயணிக்காத கல்வி வளாகங்களை இல்லை, காவல்துறையின் நெருக்கடிகளையும் பொய் வழக்குகளையும் சிறைபிடிப்புகளையும் உடைத்து எறிந்து தனது இளங்கலை பட்டத்தை வெற்றியோடு பெற்று, மாநில செயற்குழு அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான நிகழ்ச்சிகளிலும் திறம்பட செயலாற்றி தென்காசி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி, பயணித்தவர் இன்று 27 வது தமிழ் மாநில மாநாட்டில் மாநில செயற்குழுவில் இருந்து விடை பெற்றார்.
தோழரின் புரட்சி பயணம் தொடர்ந்து முன்னேற வாழ்த்துவோம்!
தோழர் செய்த தியாகங்கள் வீண்போகாது!