SDPI கட்சி தென்காசி மாவட்டம்

  • Home
  • India
  • Tenkasi
  • SDPI கட்சி தென்காசி மாவட்டம்

SDPI கட்சி தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டம் SDPI கட்சி அதிகாரபூர்வ தளம்

தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்.. 💐தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச...
24/08/2026

தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்.. 💐

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை (Kick Boxing ) போட்டியில் தென்காசியைச்சேர்ந்த முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகன் முஹம்மது ஒசாமா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக விடாமுயற்சியுடன்,வெற்றிக்கனியை எட்டிப்பறித்த சிறுவனுக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாஸ்டர் ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கும், பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்.. 💐

SDPI கட்சி
தென்காசி தெற்கு மாவட்டம்.

குறிப்பு : கடந்த 2024 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பென்காக் சிலாட் போட்டியில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

| |
| |

SDPI கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பாக Young democrats பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. SDPI கட்சியின் தெ...
23/08/2026

SDPI கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பாக
Young democrats பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. SDPI கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் k.திவான் ஒலி,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M.அப்துல் பாசித்
முன்னிலை வகித்தனர்,சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் AAA .ஷேக் நதீம்கலந்து கொண்டார் .
பயிற்சி வகுப்பில் புதிய உறுப்பினர்களுக்கு
ஜனநாயகத்தின் அடிப்படைகள், சமூகப் பொறுப்பு, இளைஞர்களின் பங்கு மற்றும் மக்களுக்கான களப்பணிகள் குறித்து பயனுள்ள கருத்துகள் பகிரப்பட்டன.

இளைஞர்களை ஜனநாயகப் பாதையில் ஒருங்கிணைத்து, சமூக மாற்றத்திற்கான பயணத்தை வலுப்படுத்தும் இந்த வகுப்பு ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது.

விழிப்புணர்வுடன் பயணிப்போம்
ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்ஸ
சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்! ✊

#தென்காசி #ஜனநாயகம் #இளைஞர்கள் #சமூகமாற்றம்

சுரண்டை நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகரச் செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தொகுதி செயலாளர் கோல்டன்...
23/08/2026

சுரண்டை நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகரச் செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தொகுதி செயலாளர் கோல்டன் செய்யது அலி பாதுஷா,முன்னாள் தொகுதி இணை செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் திவான் ஒலி,மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல் பாசித்,
மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி பாதுஷா அவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனைகுளம், பாபநாசபுரம், சாம்பவர் வடகரை ஆகிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாவட்ட தலைவர் முன்னிலையில் நகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.நகரத் தலைவராக ஜாகிர் உசேன், நகர செயலாளராக அமல்ராஜ், பொருளாளராக பொறியாளர் சித்திக், தொழில்நுட்ப பிரிவு நகர ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், கிளை நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் , கட்சியின் இளைஞரணி ( Young Democrats ) நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்தும், WIM மகளிரணி நகர கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும்விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுரண்டை நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் கொசுவை ஒழிப்பதற்காக,கழிவுநீர் ஓடைகளில் தங்கியுள்ள குப்பை மேடுகளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டி புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும்,

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் சுரண்டை நகரில் அதிக இடங்களில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் தொழில்நுட்ப பிரிவு நகர ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீத்சுப்ரீம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேற்றது.

SDPI கட்சியின் தென்காசி நகர நிர்வாகிகள் கூட்டம்  அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர தலைவர் அப்துல்காதர் தலைமையில் நடைபெ...
22/08/2026

SDPI கட்சியின் தென்காசி நகர நிர்வாகிகள் கூட்டம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர தலைவர் அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர துணைத்தலைவர் ஜாஹிர் ஹுசைன், நகர செயலாளர் ஷேக்மைதீன், நகர இணைச்செயலாளர் காஜாமைதீன், நகர பொருளாளர் அஹமதுகபீர் , நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் ஷாகுல்ஹமீது @ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல்பாசித், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்நதீம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், கிளை நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் , கட்சியின் இளைஞரணி ( Young Democrats ) நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கு , அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நன்றி தினகரன்.. 💐
19/08/2026

நன்றி தினகரன்.. 💐

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட...
18/08/2026

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்திலைவரிடம் கோரிக்கை மனு..!

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்சித்சிங் IAS அவர்களுடன் SDPI கட்சியின் தெற்குமாவட்ட தலைவர் திவான்ஒலி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

👉 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

👉அழிவின் விழும்பில் இருக்கின்ற தென்காசி மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் சிற்றாற்றை முறையாக தூர்வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉உலமாக்களுக்கு வழங்கப்படும் இருசக்கர வாகன மானிய தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 தென்காசி 21 வதுவார்டு ரேஷன்கடை ( கடை எண் : DL005PN ) இரண்டாக பிரித்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 வனவிலங்குகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும், வேளாண் நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதோடு, வன விலங்குகள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉புளியங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 புளியங்குடி காந்திமார்க்கெட் புதிய கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சந்திப்பின்போது கட்சியின் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சீனா, சேனா. சர்தார், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் உஸ்மானி, தென்காசி நகர தலைவர் அப்துல்காதர் @அபு, நகரதுணைத்தலைவர் ஜாஹிர்ஹுசைன், நகர செயலாளர் ஷேக்மைதீன், வடக்கு மாவட்டதலைவர் ஷேக்முஹம்மது ஒலி, மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதுமுஹம்மது உஸ்மானி ஆகியோர் உடனிருந்தனர்.

|
|
|

நன்றி மாலை முரசு💐
17/08/2026

நன்றி மாலை முரசு💐

நன்றி தினமணி.. 💐
17/08/2026

நன்றி தினமணி.. 💐

தென்காசி மாவட்டத்தில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - SDPI மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்....
16/08/2026

தென்காசி மாவட்டத்தில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - SDPI மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்...!

தென்காசி, ஆகஸ்டு.16

தென்காசி தெற்குமாவட்ட SDPI கட்சியின் செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் திவான்ஒலி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல்பாசித் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சீனா, சேனா.சர்தார்,மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் செய்யது அலி பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்நதீம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெற்குமாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு மற்றும் துணை அமைப்புகளின் பலப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துதல் மற்றும் மக்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வது சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

தென்காசி மாவட்டத்தில் ஏராளமான வக்ஃபு நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் வக்ஃபு சொத்துக்கள் உள்ள நிலையில், அவற்றின் நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளை அணுக வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக உலமாக்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் ஆகியோர் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க திருநெல்வேலி வரை செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
எனவே, வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை தடுப்பது, ஆவணங்களை முறைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மாவட்ட அளவிலான அலுவலகத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், அலுவலகம் அமைப்பதற்கான இடம், பணியாளர்கள் மற்றும் தேவையான நிர்வாக கட்டமைப்பை அரசு உடனடியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் -2

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வரும் (Monday Petition) மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
எனவே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை வெறும் பதிவுகளாகக் கருதாமல், ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சனைக்கும் பொறுப்பு அலுவலரை நியமித்து, தெளிவான காலக்கெடு நிர்ணயித்து தீர்வு காண வேண்டும்.
மேலும், தீர்வு காணப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட்டு, மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

தீர்மானம் - 3

சிலம்பு விரைவு ரயில் மற்றும் தாம்பரம்–செங்கோட்டை விரைவு ரயிலை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும்!
தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் நோயாளிகள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருவதற்கு ரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது.
தற்போது போதிய தினசரி ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சிலம்பு விரைவு ரயில் மற்றும் தாம்பரம்–செங்கோட்டை விரைவு ரயிலை வாராந்திர/குறிப்பிட்ட நாட்கள் சேவையிலிருந்து தினசரி சேவையாக மாற்றி இயக்க வேண்டும்.
மேலும், தென்காசி–செங்கோட்டை வழித்தடத்தில் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், ரயில் சேவைகளை விரிவுபடுத்தவும் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் - 4

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், பீடி சுற்றும் தொழிலை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆலங்குளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தரமான இலவச மருத்துவச் சேவையும், ESI திட்டத்தின் முழுமையான பயன்களும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம்; நாட்டின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் – தென்காயில் நட...
15/08/2026

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம்; நாட்டின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் – தென்காயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் SDPI மாவட்ட தலைவர் உரைசுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம்

தென்காசி, ஆக.15:

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தென்காசியில் SDPI கட்சியின் சார்பில் , மாவட்ட அலுவலகத்தில் வைத்து சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நகர தலைவர் அப்துல் காதர் @ அபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஷேக் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர செயலாளர் ஷேக்மைதீன், நகர இணைச் செயலாளர் ஹாஜா மைதீன், நகர பொருளாளர் அஹமதுகபீர், கிளை நிர்வாகிகள் ரஹ்மத்துல்லா, சாதிக் அலி, சதக்கத்துல்லா, பாதுஷா, ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் சீனா, சேனா, சர்தார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட பொருளாளர் செய்யது அலி பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் , தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing ) தொகுதிதலைவர் அப்துல் அமீர், தொகுதி செயலாளர் சலீம், மகளிரணி (WIM ) மாவட்ட
துணைத்தலைவி சுலைஹாள்
மாவட்ட பொதுச்செயலாளர் முபீனா ஆலிமா,
மாவட்ட பொருளாளர் சுஜிதாபீமா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிலோஃபர் நிஷா, நகர தலைவி ஷைபுந் நிஷா
நகர செயலாளர் ஆயிஷா
கிளை செயலாளர் ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
SDPI கட்சியின் தென்காசி தெற்குமாவட்ட தலைவர் திவான் ஒலி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தங்களது இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த தியாகிகளின் நினைவுகளைப் போற்றி, சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “சுதந்திரம் என்பது வெறுமனே அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதோடு முடிவடைவதல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை, சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதே உண்மையான சுதந்திரத்தின் அடையாளமாகும்” என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பன்முகத்தன்மை, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்… சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம்… வளமான, சமத்துவமான இந்தியாவை கட்டியெழுப்புவோம்!” என்ற உறுதிமொழியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக நகர துணைத் தலைவர் ஜாகிர் உசேன் நன்றி உரையாற்றினார்
நிகழ்ச்சியின் இறுதியாக நகரத் துணைத் தலைவர் ஜாகிர் உசேன் நன்றி உரையாற்றினார்

| | |

| | |

| | |

Address

Head Office No 52, Mount Road Tenkasi
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி தென்காசி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI கட்சி தென்காசி மாவட்டம்:

Shortcuts

Share