குருவிக்கரம்பை

குருவிக்கரம்பை யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! 🙏🏻♥️

07/09/2026
11/04/2026

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் #பேராவூரணிடவுன்

16/03/2026

🚨 பேராவூரணி பேரூராட்சியில் ரூ.65 லட்சம் ஊழல்! திமுக பேரூராட்சி தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு! 🚨
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
📌 முக்கிய குற்றச்சாட்டுகள்:
வாரிசு ஒப்பந்தம்: பேரூராட்சி தலைவரின் கணவர் மற்றும் மாமனார் பெயரில் விதிகளை மீறி ஒப்பந்தங்கள் எடுத்தது.
போலி ஆவணங்கள்: சாலை பணிகள் முழுமையாக முடியாத நிலையிலும், முடிந்ததாகக் கூறி ரூ.7.93 லட்சம் முறைகேடு.

பெரிய கையாடல்: தற்காலிக ஊழியர் மற்றும் அவரது கணவர் பெயருக்கு சுமார் ரூ.57 லட்சம் காசோலைகளை முன்னாள் அதிகாரி வழங்கியது.

👥 யார் மீது வழக்கு?

பேரூராட்சி தலைவர் எஸ். சாந்தி (திமுக), அவரது கணவர், மாமனார் மற்றும் முன்னாள் செயல் அலுவலர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

09/03/2026

பேராவூரணி அருள்மிகு ஶ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா 2026.
அன்புடன் அழைப்பது
❤️PERAVURANITOWN ❤️

09/03/2026

தஞ்சை மாவட்டத்தின் மிகச் சிறந்த இலக்கியவாதி குருவிக்கரம்பை சண்முகம்.
பன்முகத் திறமை வாய்ந்தவர் சண்முகம்.
பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பையில் ஜூலை 31 1942 ம் ஆண்டு ஏகாம்பரம்-பாலாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் மொழியின் மீது அதீத பற்று கொண்டிருந்த சண்முகம் அவர்கள் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். எம்லிட் பட்டமும் முனைவர் பட்டமும் சேர்ந்தே பெற்றிருக்கிறார்.
ஆயிரக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மேடை சொற்பொழிவுகள் என செந்தமிழை சீர்பட வளர்த்தவர் சண்முகம்.
1970 காலகட்டத்தில் பாப்பாநாடு ஒரத்தநாடு உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள் மேடை சொற்பொழிவுகளால் மக்களின் செவிகளை தேன் கொண்டு நிரப்பியவர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள்.
சென்னையில் பேராசிரியராக பணிபுரிந்த அவர் உலகத் தமிழ் மாநாட்டில் சிறந்த கவிதையை அரங்கேற்றம் செய்ததற்காக தங்கப்பதக்கத்தை பரிசாக பெற்றார்.
திரைத் துறையிலும் தடம் பதித்து பாடலாசிரியராக புகழ்கொடி நாட்டியவர் அவர்.
"கவிதை அரங்கேறும் நேரம்"
"குயிலே குயிலே பூங்குயிலே"
"ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்"
"சுகராகமே சுகபோகமே"
"இங்கே இறைவன் எனும் கலைஞன்"
"மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்"
"செங்கமலம் சிரிக்குது"
போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் சண்முகம் அவர்கள்.
தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்களிலும் சண்முகம் அவர்களின் படைப்புகள் இடம் பெற்று இருக்கின்றன.
மறைந்தாலும் தனது படைப்புகளால் இப்போதும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் குருவிக்கரம்பை சண்முகம்.

09/03/2026

பேராவூரணி வட்டாட்சியராக சி.பாலசுப்பிரமணியன் நியமனம்.

வாழ்த்துக்கள் Nimal Raghavan 💐
27/01/2026

வாழ்த்துக்கள் Nimal Raghavan 💐

15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🏻

Address

Kuruvikkarambai, Peravurani Taluk
Thanjavur
614802

Alerts

Be the first to know and let us send you an email when குருவிக்கரம்பை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share