டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை செண்டங்காடு

  • Home
  • India
  • Thanjavur
  • டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை செண்டங்காடு

டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை செண்டங்காடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை செண்டங்காடு, Public Service, செண்டங்காடு கிராமம் பட்டுக்கோட்டை தாலுக்கா, Thanjavur.

தமிழ் வளக்க வந்த தாயே...பெருமை கொள்கிறது செண்டாங்காடு கிராமம்...ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட...
02/07/2026

தமிழ் வளக்க வந்த தாயே...
பெருமை கொள்கிறது செண்டாங்காடு கிராமம்...

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்...

சங்கம் வைத்து முத்தமிழ் வளர்ந்த...
தமிழ் மண்ணிலே...
தமிழை மென் மேலும் வளர்த்து மெருகூட்ட
கவிஞராய் செண்டங்காடு கிராம மண்ணிலே ஸ்ரீ மழை மாரியம்மன் தாயின் அருள் பெற்று திரு. J.ஞானசேகரன் கோபாலர் திருமதி. சாந்தி தம்பதியினருக்கு தவப்புதல்வியாய் வந்து உதித்த...
தமிழ் தாயே...

உன்னால் பெருமை கொள்கிறது செண்டங்காடு கிராமம்...

மென்மேலும் வளர்ந்து சாதனைகள் பல படைத்திட மனதார வாழ்த்துகிறது காவிரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை

24/12/2025
09/12/2025

அறிவிப்பு:

''இயலாமைக்கும் இயலாதவர்க்கும் இணைந்திருக்கும்''
-KDKVஅறக்கட்டளை

புதிய நிறுவனர் இணைப்பு (One More Founder Joined)

திருமிகு. க.சிதம்பரஹாசன் அவர்கள்
த/பெ. திரு. கலியமூர்த்தி Ex ஊ.ம.தலைவர்
வடக்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்

வழங்கி செண்டங்காடு காவேரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர்களின் (The Trust Founder) பட்டியலில் தன்னை இணைத்து கொண்டுள்ளார் என மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்படுகிறது... பரந்த மனப்பான்மை கொண்ட மேற்கண்ட திருவாளர் அவர்களுக்கு நம் அறக்கட்டளையின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!

இவண்...
செண்டங்காடு
காவேரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
KDKV-அறக்கட்டளை

மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திசெண்டங்காடு காவிரி டெல்டா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளையின் கூட்டு வங்கி கணக்கு  (Joint B...
08/12/2025

மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி

செண்டங்காடு காவிரி டெல்டா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளையின் கூட்டு வங்கி கணக்கு (Joint Bank Account opening) தொடங்குவது தொடர்பாக...

நமது அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவரும் (One of the Founder Trustee) மற்றும் கூடுதல் பொருப்பான அறக்கட்டளையின் நிதி மேலாண்மை (One of The Finance Management Controller) பொருப்பை வகிக்கும் நிர்வாகிகளுள் ஒருவருமான வீமன் (எ) திருமிகு சா.கருணாநிதி
த/பெ. சாமிநாதன் அவர்கள் நிதியை நிர்வாகம் செய்வதற்கான கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவதற்காகவே

Dec 17 ஆம் தேதி இரவு சிங்கபூரில் இருந்து கிளம்பி....
Dec 18 ஆம் தேதி பகலில் திருச்சி விமானநிலையம் வந்தடைகிறார்..

முன்னர் 22 Nov 2025 தேதியில் அறிவிப்பில் எந்தவித மாறுதலும் இல்லாமல் நிதி மேலாண்மை பிரிவின் கீழ்....

1). திரு. வீமன் (எ) சா.கருனாநிதி
த/பெ. திரு சாமிநாதன் அவர்கள் வடக்கு தெரு
செண்டங்காடு

2). திரு. த.கரிகாலன்
த/பெ. திரு.தம்பிஅய்யன் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு

3). திரு.சி.தமிழரசன்
த/பெ. திரு. சிதம்பரம் அவர்கள்
நடுத்தெரு
செண்டங்காடு

4). திரு.கு.ரவிச்சந்திரன்
த/பெ. குருநாதன் அவர்கள்
இலுப்பைதோப்பு
செண்டங்காடு

ஆகிய நான்கு திருவாளர்களின் பெயரில் ஸ்ரீ மழைமாரியம்மன்
ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் திருவருள் பெற்று நம் ஊர் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடனும் மற்றும் நம் ஊர் கிராமவாசிகளின் ஒத்துழைப்போடும் வங்கியில் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்கி வரவு செலவு நிர்வாகம் செய்து அறக்கட்டளையின் நிதிமேலாண்மை பிரிவில் பொதுநல தொண்டு புரிவார்கள் என்று ஒரு மனதாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

மிக முக்கிய குறிப்பு:-
அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெறும் வரை மேற்கண்ட நபர்களின் பெயரில் கூட்டுக் கணக்கு (Joint Account) வங்கியில் தொடங்கி நடைமுறையில் இருந்து வரும்...

அறக்கட்டளை அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறக்கட்டளைக்கான அரசு பதிவு எண் பெற்றபின்னர் அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு நடைமுறையானது நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் படுத்தப்படும்...

அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் அறக்கட்டளையின் தடையில்லா நிரந்தர வளர்ச்சிக்காகவும் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகிகளை மாற்றியமைக்க அறக்கட்டளை நிர்வாகத்திற்கு (Council Board) முழு அதிகாரம் உண்டு

இவண்...
செண்டங்காடு
காவிரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
அறக்கட்டளை

அறிவிப்பு:ஒன்றினைந்து இயலாதவர்களுக்கு உதவுவது மட்டுமே நம் அனைவரின் ஒரே நோக்கம்யார் மனதும் சங்கட படாதபடி நம் அறக்கட்டளையா...
06/12/2025

அறிவிப்பு:

ஒன்றினைந்து இயலாதவர்களுக்கு உதவுவது மட்டுமே நம் அனைவரின் ஒரே நோக்கம்

யார் மனதும் சங்கட படாதபடி நம் அறக்கட்டளையானது செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக குழுவின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்தாய்வு செய்து கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது...

செண்டங்காடு காவேரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் ( One of The Founder) ஆவதற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை தகர்த்து... நிறுவனர் ஆவதற்கான வழியினை இலகுவாக்கி அறக்கட்டளையின் வங்கி கணக்கில் ஒவ்வொரு நபரும் தனது பங்காக (Fixed Deposit Assert) தலா 10,000 பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டும் போதும் என அறிவிக்கப்படுகிறது

1). திரு. சி. தமிழரசன் அவர்கள் ₹ 10 ஆயிரம்

2). திரு வீமன் (எ) சா.கருணாநிதி அவர்கள் ₹ 1 லட்சம்

3). திரு ச.ரவிக்குமார் அவர்கள் ₹ 1 லட்சம்

4). வீருகன்னு (எ) திரு. தி.வீரையன் அவர்கள் ₹ 10 ஆயிரம்

5). திரு. A.C.கண்ணதாசன் அவர்கள் ₹ 1 லட்சம்

6). திரு. A.C.அன்புதாஸ் அவர்கள் ₹ 1 லட்சம்

7). திரு. S.V. விக்னேஷ் திரு. S.V. விஜய் Brothers அவர்கள் ₹ 10 ஆயிரம்

முன்னர் Nov 24 2025 தேதி அன்று அறிவித்த மேல் கண்ட திருவாளர்களுக்கு நன்றி கூறி மேற்கண்ட தலா ₹1 லட்சம் கொடுத்த 4 நபர்களின் தொகையிலிருந்து தலா ₹ 10 ஆயிரம் மட்டும் நிறுவனர் நிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து நபர்களையும் அறக்கட்டளையின் நிறுவனர்கள் பட்டியலின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது...

மீதமுள்ள தலா ₹ 90 ஆயிரம் நன்கொடையில் கீழ் இணைக்கப்படுகிறது

முக்கிய குறிப்பு:-

வருகின்ற April 2026 ல் பதிவு செய்யப்பட உள்ள நமது அறக்கட்டறையில் நிறுவனராக ஆவதற்கு விருப்பமுள்ளவர்கள் ₹ 10,000.00 பத்தாயிரம் மட்டும்செலுத்தி நிறுவனராக தம்மை பதிவு செய்துகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்படுகிறது... மேலும் அறக்கட்டளையின் வளர்ச்சி நிதியாக நன்கொடையாளர்கள் அவர் அவர்கள் தங்களால் இயன்ற தொகையாக ஒரு ரூபாயிலிருந்து அதற்கு மேல் திருவாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நன்கொடை அளிக்கலாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது ...

அறக்கட்டளையின் நிறுவனர்கள் மற்றும் அறங்காவலர்கள் அனைவரும் அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது

இவண்...
செண்டங்காடு
காவேரி டெல்டா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை

24/11/2025

3). திரு. M.S.V. சகோதரர்கள் (M.S. விக்னேஷ் M.S.விஜய்)
த/பெ. திரு. சுப்பிரமணியன் அவர்கள்
வடக்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்

என்ற முகவரியை சார்ந்த நன்கொடை திருவாளர்
அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்கள் கொடை வள்ளல்களுக்கு செண்டங்காடு காவேரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை சிரம் தாழ்த்தி வணங்கி தனது நன்றியை தெறிவித்துக் கொள்கிறது

இவண்...
செண்டங்காடு
காவேரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
அறக்கட்டளை

24/11/2025

அறிவிப்பு:

செண்டங்காடு
காவேரி டெல்டா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர்கள் ஒவ்வொருவரும் தலா ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய் வீதம் கீழ்கண்ட நான்கு திருவாளர்கள் இணைந்து மொத்தம் ₹ 4,00,000.00 ரூபாய் நான்கு லட்சம் கொண்டு இந்த அறக்கட்டளையை நிறுவி நமது செண்டங்காடு கிராமத்துக்கு மட்டும் அல்லாது அனைத்து காவேரி டெல்டா கிராமங்களுக்கும் தம்மால் இயன்ற சேவையை செய்ய மேற்கண்ட அறக்கட்டளையானது வருகின்ற ஏப்ரல் மாதம் 2026 -ல் பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்று அரசு பதிவு எண் கொண்டு தனது பொது நலத் தொண்டை செயல்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது

இதைத் தொடர்ந்து நன்கொடையாக ₹ 10,000.00 தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்த கொடை வள்ளல்களான திருவாளர்களின் பெயரும் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது

நிறுவனர்களின் பெயர்கள் மற்றும் முகவரி

1). திரு. வீமன் (எ) சா.கருணாநிதி
த/பெ. சாமிநாதன் அவர்கள்
வடக்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்

2). திரு. ச. ரவிக்குமார்
த/பெ. சண்முகம் அவர்கள்
நடுத்தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்

3). திரு. A.C.கண்ணதாசன்
த/பெ. திரு. சந்திரராஜ் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்

4). திரு. A.C.அன்புதாஸ்
த/பெ. திரு. சந்திரராஜ் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்

நன்கொடையாளர்கனின் பெயர்கள் மற்றும் முகவரி

1). திரு. சி.தமிழரசன்
த/பெ. திரு. சிதம்பரம் அவர்கள்
நடுத் தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்

1). திரு. வீருகன்னு (எ) தி. வீரைய்யன்
த/பெ. திரு. திருமேனி அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்

அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்

மிக முக்கிய தகல்:
இந்த அறக்கட்டளையால் திட்டமிடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செண்டாங்காடு கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றி கண்ட பின்னரே அடுத்த கிராமங்களில் தமது சேவையை செய்ய இந்த அறக்கட்டளையானது திட்டமிட்டு செயல் படுத்தும்.... நாங்கள் பிறந்த நமது கிராமத்தின் வளர்ச்சியே எங்களின் தலையாயக் கடமையும் முதல் தொண்டுமாகும்...

இவண்
செண்டங்காடு
காவேரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
அறக்கட்டளை

22/11/2025

அறிவிப்பு:

நிதி மேலாண்மை (Finance Division ) அறக்கட்டளைக்கு மேலும் வலு சேர்க்க கலந்து ஆய்வு செய்து அறக்கட்டளை நிர்வாக சபையில் மாற்றம்

நிதி மேலாண்மை பிரிவின் கீழ் செயல்படும் நிர்வாகிகளின் பெயர்கள்

1). திரு. வீமன் (எ) சா.கருனாநிதி
த/பெ. திரு சாமிநாதன் அவர்கள் வடக்கு தெரு
செண்டங்காடு

2). திரு. த.கரிகாலன்
த/பெ. திரு.தம்பிஅய்யன் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு

3). திரு.சி.தமிழரசன்
த/பெ. திரு. சிதம்பரம் அவர்கள்
நடுத்தெரு
செண்டங்காடு

4). திரு.கு.ரவிச்சந்திரன்
த/பெ. குருநாதன் அவர்கள்
இலுப்பைதோப்பு
செண்டங்காடு

ஆகிய மேற்கண்ட நான்கு திருவாளர்களின் பெயரில் வங்கியில் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்கி வரவு செலவு நிர்வாகம் செய்து அறக்கட்டளையின் நிதிமேலாண்மை பிரிவில் பொதுநல தொண்டு புரிவார்கள் என்று ஒரு மனதாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

மிக முக்கிய குறிப்பு:-
அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெறும் வரை மேற்கண்ட நபர்களின் பெயரில் கூட்டுக் கணக்கு (Joint Account) வங்கியில் தொடங்கி நடைமுறையில் இருந்து வரும்...

அறக்கட்டளை அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசு பதிவு எண் பெற்றபின்னர் அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு நடைமுறையானது நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் படுத்தப்படும்...

அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் அறக்கட்டளையின் தடையில்லா நிரந்தர வளர்ச்சிக்காகவும் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகிகளை மாற்றியமைக்க அறக்கட்டளை நிர்வாகத்திற்கு (Council Board) முழு அதிகாரம் உண்டு

இவண்...
செண்டங்காடு
காவிரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
அறக்கட்டளை

🙏கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!🙏ஸ்ரீ மழைமாரியம்மன் தாயே சரணம்!!! அனைவருக்கும்  வணக்கம் ...
17/11/2025

🙏கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!

🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!

🙏ஸ்ரீ மழைமாரியம்மன் தாயே சரணம்!!!

அனைவருக்கும் வணக்கம் 🙏

நிதி மேலாண்மை பிரிவின் கீழ் செயல்படும் நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிப்பு

1). திரு. வீமன் (எ) சு.கருனாநிதி
த/பெ. திரு சுவாமிநாதன் அவர்கள் வடக்கு தெரு
செண்டங்காடு

2). திரு. த.கரிகாலன்
த/பெ. திரு.தம்பிஅய்யன் அவர்கள் தெற்கு தெரு
செண்டங்காடு

3).
திரு.சி.தமிழரசன்
த/பெ. சிதம்பரம் அவர்கள்
நடுத்தெரு
செண்டங்காடு

ஆகிய மூன்று நபர்களின் பெயரில் வங்கியில் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்கி வரவு செலவு கணக்குகளை நிர்வாகம் செய்து அறக்கட்டளையின் நிதிமேலாண்மைக்கு பக்கபலமாக செயல்படுவார்கள் என்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது...

மிக முக்கிய குறிப்பு:

அறக்கட்டளையானது பதிவு (Register) செய்யும் வரை மேற்கண்ட 3 மூன்று திருவாளர்களின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு வரவு செலவு கணக்குகள் நிதி மேலாண்மைனது செயல்பட்டு வரும்...

அறக்கட்டளையானது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு எண் (Trust Register No) பெற்றபின் அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு நிரந்தர வரவு செலவு கணக்குகள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்

இவண்...
செண்டங்காடு
காவிரி டெல்டா
கிராமபுற வளர்ச்சி
அறக்கட்டளை

அனைவருடைய குல தெய்வத்தின் துணை!ஸ்ரீ மழைமாரியம்மன் துணை!நமது அறக்கட்டளையின் கொள்கை பற்றிய முதல் தகவல்... கொள்கை (Principl...
15/11/2025

அனைவருடைய குல தெய்வத்தின் துணை!
ஸ்ரீ மழைமாரியம்மன் துணை!

நமது அறக்கட்டளையின் கொள்கை பற்றிய முதல் தகவல்...

கொள்கை (Principle) என்பது ஒரு குறிப்பிட்ட (Target) இலக்கை அடையப் பின்பற்றப்படும் (Instructions) வழிமுறைகள் மற்றும் (Rules & Regulations) ஒழுக்க விதிகளைக் குறிக்கிறது.

• கொள்கை: இது ஒரு உறுதியான நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதல்.

• கொள்கையை உறுதியாக முன்வைக்கப்பட்டு, எந்தவித எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்ப்புகளையும், சூழ்ச்சிகளையும் சமாளித்து எந்த ஒரு சூழ்நிலையாக இருந்ததாலும் கையில் எடுத்த திட்டம் வெற்றி பெரும் வரை அதனைப் பின்பற்றி திட்டத்தை வெற்றி அடையச் செய்வதே கொள்கை எனப்படுகிறது.

நமது செண்டங்காடு காவிரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளையின் கொள்கைகள் என்ன என்ன என்பது அறக்கட்டளையானது அறங்காவலர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அறங்காவலர்கள் ஒன்று கூடி கலந்து ஆய்வு செய்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டு அணைத்து அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் செண்டங்காடு காவிரி டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளையின் கொள்கைகள் என்ன என்ன என்பது புத்தகமாக வெளியிடப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்
செண்டங்காடு கிராம வளர்ச்சி அறக்கட்டளை

Address

செண்டங்காடு கிராமம் பட்டுக்கோட்டை தாலுக்கா
Thanjavur
614901

Website

Alerts

Be the first to know and let us send you an email when டெல்டா கிராமபுற வளர்ச்சி அறக்கட்டளை செண்டங்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category