தேங்கை சேவை

தேங்கை சேவை பொது மக்களுக்கான அரசு சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் இலவச பொது சேவை.

#தேங்கைசேவை

வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம்...* தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுத...
09/01/2026

வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம்...

* தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

* இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் Whatsapp நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.

* தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.

நிலத்தடி நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நிலநீர் ஆய்வு கருவி உள்ளது. விவசாயம் சார்ந்த தேவை மற்றும் விவசாயம் அல்லாத பண...
22/12/2025

நிலத்தடி நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நிலநீர் ஆய்வு கருவி உள்ளது. விவசாயம் சார்ந்த தேவை மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்கு இந்த கருவியை முன்பதிவு செய்து பொதுமக்கள் குறைந்த வாடகையில் நிலத்தடி நீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஊராட்சி செயலாளர் பதவிக்கு வேலை வாய்ப்பு. #தேங்கைசேவை
12/10/2025

ஊராட்சி செயலாளர் பதவிக்கு வேலை வாய்ப்பு.

#தேங்கைசேவை

கிராமப்புறங்களில் தொழில் உரிமம் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
29/07/2025

கிராமப்புறங்களில் தொழில் உரிமம் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

தலைப்பு: முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க கோருதல்ஐயா/அம்மா,நான் மேற்கண்ட மு...
22/07/2025

தலைப்பு: முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க கோருதல்

ஐயா/அம்மா,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து கொண்டு வருகிறேன் குடும்ப அட்டை எண் [ PHH - 3333165 ] மருத்துவ காப்பீடு அட்டை எண் [ URN; 0133356779753 ] எனது குடும்பத்தில் சேர்ந்த என் கணவர், மகன் மற்றும் மகளின் பெயர்கள் தவறுதலாக சேர்க்கப்படவில்லை. எனவே அவர்கள் பெயர்களையும் மருத்துவ காப்பீடு அட்டையில் இணைத்து தருமாறு தங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என் விபரம்:

பெயர்:

குடும்ப அட்டை எண்:

காப்பீட்டு எண்;

ஆதார் எண்:

சேர்க்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் விவரம்:

1. கணவர்

பெயர்:

பிறந்த தேதி:

ஆதார் எண்:

2. மகன்

பெயர்:

பிறந்த தேதி:

ஆதார் எண்:

3. மகள்

பெயர்:

பிறந்த தேதி:

ஆதார் எண்:

நகல் இணைப்பு:

குடும்ப அட்டை நகல்

காப்பீட்டு அட்டை நகல்

உறுப்பினர்களின் ஆதார் நகல்

இத்தகவல்களின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களையும் என் மருத்துவ காப்பீடு அட்டையில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தேதி:

இடம்:

மகளிர் உரிமைத் தொகை பெற யார் யாருக்கு விதிவிலக்கு - அரசு செயலாளர் அமுதா அவர்கள் விளக்கம்.
22/07/2025

மகளிர் உரிமைத் தொகை பெற யார் யாருக்கு விதிவிலக்கு - அரசு செயலாளர் அமுதா அவர்கள் விளக்கம்.

60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்...
08/07/2025

60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

#தேங்கைசேவை

கிராம உதவியாளர்கள் நியமனம்.
11/06/2025

கிராம உதவியாளர்கள் நியமனம்.

பட்டா மாறுதலுக்கு விடுபட்டுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் பட்டா மாறுதலுக்கு  விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் தகவல்.
23/05/2025

பட்டா மாறுதலுக்கு விடுபட்டுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் தகவல்.

தேங்காய்ப்பட்டணம் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வில்  "நெய்தல் படை" சார்பாக மரக்கன்றுகளை "தேங்கை சேவை" ஒருங்கிணைப்பாளர் ...
06/10/2024

தேங்காய்ப்பட்டணம் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வில் "நெய்தல் படை" சார்பாக மரக்கன்றுகளை "தேங்கை சேவை" ஒருங்கிணைப்பாளர் திரு. சமீர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

"தேங்கை சேவை" அமைப்பின் பொது மக்களுக்கான சேவையை பாராட்டி வழங்கப்பட்ட புத்தகத்தை "தேங்கை சேவையின்" உறுப்பினர் திரு. பிரசாத் அவர்கள் பெற்று கொண்டார்.
உடன் "தேங்கை சேவை" ஒருங்கிணைப்பாளர் திரு. சமீர் மற்றும் பைங்குளம் கிளை திருவருள் பேரவை தலைவர் திரு. விபின் மற்றும் உறுப்பினர் திரு. சேம் அவர்களுடன் மற்றும் பலர்.

Address

Thengapattanam
629173

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேங்கை சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category