Pmk It Wing Thiruvarur North

Pmk It Wing Thiruvarur North Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pmk It Wing Thiruvarur North, Political organisation, Thiruvarur.

11/04/2026
08/04/2026
🚨 JOB VACANCY 🚨KADUVETTI GURU PVT LTDWe are hiring for Earth Movers & Highway Road Works:---Available Positions:🚜 HEAVY ...
01/12/2025

🚨 JOB VACANCY 🚨

KADUVETTI GURU PVT LTD

We are hiring for Earth Movers & Highway Road Works:

---

Available Positions:

🚜 HEAVY DRIVER
(Bus / Lorry / Earth Mover Vehicles)

🛠️ HELPERS & FIELD WORKERS

---

Requirements:

✔ Valid Heavy License (For Drivers)
✔ Experience Preferred – Fresher Also Considered
✔ Hardworking & Responsible Candidates Only

---

Benefits:

💰 Good Salary
🥘 Food & Accommodation Option
📍 Work Location: Highway Road Construction & Earth Moving Sites

---

📞 Contact Now:
📱 6379803400
📱 8531065643

17/11/2025

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு (Career Advancement Scheme - CAS) எனப்படும் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த 2021&ஆம் ஆண்டு ஜனவரி 11&ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் அதே ஆண்டு மே மாதம் 4&ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த உரிமை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில் 4 ஆண்டுகளிலும், இல்லாவிட்டால் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கேற்ற வகையில் ஊதியத்தின் அளவும் ஒரு நிலை உயர்த்தப்பட வேண்டும். அதன்பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை உதவிப் பேராசிரியர்களுக்கு தேர்வு நிலை உதவிப் பேராசிரியர்களாகவும், அந்த நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் நிலை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.

பொதுவாக கல்லூரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப் படுவதில்லை. அதனால், அவர்கள் இணைப் பேராசிரிரியர்கள், அதற்கு அடுத்தபடியாக முதல்வர்கள் என்ற நிலையில் திருப்தியடைய வேண்டியுள்ளது. இதுவும் கூட உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும். சில கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு விதிகளின்படி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், எந்த நாளில் இருந்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதோ, அதே நாளில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பெரும்பாலான உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சென்னை. திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.

ஊதிய உயர்வுடன் கூடிய முழுமையான பதவி உயர்வு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப் படவில்லை; மாறாக மாணவர்களின் உயர்கல்வி ஆராய்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது, அது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பில் (IFHRMS) சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் பதவி உயர்வுக்கான நிதிப் பயன்களும், அதிகாரங்களும் கிடைக்கும். இந்த அமைப்பில் சேர்க்கப்பட்ட இணைப் பேராசிரியர்களால் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இணைப் பேராசிரியர் பதவி உயர்வு இந்த அமைப்பில் சேர்க்கப் பட்டிருந்தால், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து அரசு செய்த துரோகத்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை கடந்த ஜூன் 23&ஆம் தேதி அழைத்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஜூலை மாத ஊதியப் பட்டியலில் அவர்களின் ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக அரசுக்கே உரிய மோசமான இலக்கணத்தின்படி அந்த வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.

இவை அனைத்தும் இயல்பாகவோ, இயலாமையாலோ நடந்தவையாகத் தோன்றவில்லை. உதவிபெறும் கல்லூரிகளை திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் அரச சதியின் அங்கமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் ஆபத்தான சட்டத்தை திமுக கொண்டு வந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்றது. அந்த சட்டத்தை திமுக கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ, அதே நோக்கம் தான் ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்காமல் முடக்கி வைப்பதற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முழுமையான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை திசம்பர் 12&ஆம் தேதி முதல் நடத்தவிருக்கும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

17/11/2025

திசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்: நமது வலியையும், வலிமையையும் சமூக அநீதியாளர்களுக்கு புரிய வைப்போம்!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் திசம்பர் 17&ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர் என்பதை நான் அறிவேன்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் அழிக்க முடியாத இன்னொரு முத்திரையை பதிக்கவிருக்கும் நமது போராட்டத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதை நினைவூட்டுவதற்காகவும், எரியும் தீபத்தின் திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டுவதைப் போல, சமூகநீதிப் போராட்டத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் தான் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் சாபம், குறிப்பாக சமூகநீதியின் சாபம் தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள். சமூகநீதி என்ற சொல்லின் உணர்வையும், பொருளையும் அறியாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நம்பிக்கைத் துரோகம் தான். அவர்களது உடலின் அணுக்களில் பொதிந்திருப்பது எல்லாம் அது மட்டும் தான். நம்பிக்கைத் துரோகத்தின் எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள் என்பதை அனுபவித்தவர்கள் நாம்.

கடந்த ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் வாங்கிய வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு செல்லாது என்று, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனால் நாம் அடைந்த மனக்காயங்களுக்கு மருந்து போட்டது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு தான். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியும், மருத்துவர் அய்யா அவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022&ஆம் நாள் தீர்ப்பளித்தது. அன்றே சமூகநீதிக்கான போராட்டங்களை நாம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நாம் நம்பினோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான இரண்டாம் நாள் சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ நமக்கான சமூகநீதியை நாம் எப்போதும் போராடிப் பெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த முறை நாம் போராடத் தேவையில்லை. நாம் போராடாமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்குவார்’’ என்று நம்பிக்கைத் தெரிவித்தார். நாமும் அப்படியே நம்பினோம். அதைத் தொடர்ந்து எனது தலைமையில் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு மே 8&ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது நமது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,‘‘ இப்போது நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தால் என்ன? சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 2022&ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன்’’ என்று வாக்குறுதி அளித்தார். அதையும் நாம் நம்பினோம்.

அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் 10 முறை கடிதம் எழுதினார்; 10 முறை தொலைபேசியில் பேசினார்; ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நான் 3 முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினேன். நமது கட்சி நிர்வாகிகள் குறைந்தது 50 முறையாவது ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளித்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நம்ப வைத்த ஆட்சியாளர்கள், கடைசியாக 2024&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதே கோரிக்கையை வலியுறுத்திய போது தான், ஆட்சியாளர்கள் அவர்களின் உண்மை முகத்தைக் காட்டினார்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்தனர்.

ஆட்சியாளர்கள் பரிசாக அளித்த நம்பிக்கைத் துரோகம் என்ற வலி இன்னும் என்னையும், உங்களையும் வருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் நமது தலைமுறைகள் அனுபவிக்கக் கூடாது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தான் வலிகளையும் தாங்கிக் கொண்டு நான் போராடத் தயாராகிறோம்.

தமிழகத்தை ஆளும் திமுகவினர், சென்னை மாகாணத்தில் நூறாண்டுக்கு முன் 100% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த நீதிக் கட்சியின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்வார்கள். வள்ளலார் அவர்களால் வஞ்சகர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் கொண்டோர் அவர்கள். பொதுவெளிக்கு வந்தால், சமூகநீதி தான் தங்களின் உயிர்மூச்சு என்று மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால், அதிகாரம் அவர்களின் கைகளில் கிடைத்தால் சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள். அதுவும் வன்னியர்களுக்கான சமூகநீதி என்றால், அதன் தடமே தெரியாமல் அழிக்க நினைப்பவர்கள் தான் இந்த சமூக அநீதியாளர்கள்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, இன்றுடன் 1327 நாள்கள் நிறைவடைந்து விட்டன. திமுக அரசு நினைத்திருந்தால் 27 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், கூடுதலாக 1300 நாள்களாகியும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இது தான் ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல சமூகநீதிக்கு எதிரான திமுக அரசு, சமூகநீதிக்கு எதிரான பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1040 நாள்கள் ஆகி விட்டன. ஆனால், இன்று வரை அதற்கான பரிந்துரையை ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், பதவியில் இல்லாத இந்த ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை வழங்குவதற்காக அடுத்த ஆண்டு ஜூலை 16&ஆம் நாள் வரை அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. இதைவிட சமூகநீதி பித்தலாட்டம் இருக்க முடியாது.

திமுக அரசின் இந்த சமூகநீதி நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்; தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் திசம்பர் 17&ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான போராட்டம் மட்டும் அல்ல. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும், அனைத்து இயக்கங்களிலும் உள்ள சமூக அநீதியால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்கான போராட்டம் தான் இதுவாகும்.

திமுக அரசின் சமூக அநீதிகளைக் கண்டு திமுகவில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதேபோல், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் வரும் திசம்பர் 17&ஆம் தேதி நாம் நடத்தவிருக்கும் ‘‘வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்’’ நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் திசம்பர் 17&ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்.

26/10/2025

அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை: உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு!

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளையும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பருவமழைக்கு முன்பாகவே நெல்லை கொள்முதல் செய்யுங்கள்; நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பாட்டாளி மக்கள் கட்சியும் உழவர் அமைப்புகளும் பல முறை வலியுறுத்தியும் அவற்றை செய்யத் தவறியதன் மூலம் உழவர்களுக்கு அரசு துரோகம் செய்துள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது குறித்தும், கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு சென்ற நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் கடந்த 10&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கி நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், நல்வாய்ப்புக்கேடாக உழவர்கள் இவ்வளவு துயரத்தை அனுபவித்து வரும் போதிலும், அதைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதே நிலை தான் இன்னும் தொடர்கிறது. உழவர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் தீபாவளி இருளாகத் தான் அமைந்தது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் 6.13 லட்சம் ஏக்கர் பரப்பில் சுமார் 70% அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அறுவடை செய்யப்படாத வயல்களில் நெல் மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள் குறுவை நெல் அறுவடை முற்றிலுமான முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலாக வரும் நெல்லும் கொள்முதல் நிலையங்களில் கிடத்தப்பட்டு மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க திமுக அரசு என்ன செய்யப்போகிறது?

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கியிருப்பதற்காக தமிழக அரசு இல்லாத காரணங்களையெல்லாம் கூறி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், உழவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக பெற திமுக அரசு தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் வழிகாட்டுதல்களை ஜூலை 29&ஆம் தேதி வழங்கிய நிலையில், அதன்பின் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்ய 71 நாள்கள் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லை உழவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் கொள்முதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டு, இல்லாத காரணங்களைக் கூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்வது அரசுக்கு அழகல்ல.

கொள்முதல் நிலையங்களில் நெல் அதிக அளவில் தேங்கிக் கிடப்பதற்கு இன்னொரு முதன்மைக் காரணம் போதிய எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது ஆகும். 10 காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இரு மடங்கு, அதாவது 1805 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இம்மாவட்டங்களில் 2156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன; 2022&23 ஆம் ஆண்டில் 2094 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் கிட்டத்தட்ட 350 கொள்முதல் நிலையங்கள் குறைவாகவே திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 599 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 292 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 535 நிலையங்களை விட குறைவாக 173 நிலையங்களும், நாகை மாவட்டத்தில் 176 கொள்முதல் நிலையங்களுக்கு பதிலாக 124 நிலையங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 179 நிலையங்களுக்கு பதில் 144 மையங்களும் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 25% ஆக உயர்த்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் பேசி ஒப்புதல் பெற வேண்டும் என்று கடந்த 10&ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்த நிலையில், மிகவும் தாமதமாக 18&ஆம் தேதி தான் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதா? என்பது கூட தெரியாத நிலையில், மத்திய அமைச்சர் அல்லது அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது உழவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை மூட்டை கட்டி கிடங்குகளுக்கும், ஆலைகளுக்கும் அனுப்புவதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து சாக்குகள் வாங்கப்பட்டிருப்பதாக அரசு கூறி வரும் நிலையில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சாக்குகளுக்கு பெருமளவில் பற்றாக்குறை நிலவுவதாக கொள்முதல் நிலையப் பணியாளர்களும், உழவர்களும் கூறுகின்றனர். அதேபோல், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல போதிய எண்ணிக்கையில் சரக்குந்துகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இவ்வளவு குறைகளை வைத்துக் கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்று வெற்று வசனங்களை மட்டுமே திமுக அரசு பேசிக் கொண்டிருக்கிறது. இதனால் யாருக்கும், எந்த பயனும் இல்லை. இதனால், இத்தகைய விளம்பர நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து, குறுவை நெல் மேலும், மேலும் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்கும் வகையில், கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தேங்கிக் கிடக்கும் நெல் முழுவதையும் அடுத்த ஒரு வாரத்தில் கொள்முதல் செய்து முடிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க வேண்டும்.

26/10/2025

முன்னேற்பாடுகளை செய்வதில் படுதோல்வி: காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் கிடைக்கும் அவல நிலை தான் இன்னும் நீடிக்கிறது. உழவர்களின் கண்ணீரைத் துடிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வழக்கத்தை விட நடப்பாண்டில் விளைச்சலும் அதிகமாக கிடைக்கும் சூழல் நிலவிய நிலையில், அதைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய அளவில் விற்பனைக்கு வரும் நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது.

காவிரி பாசன மாவட்டங்களில் ஏக்கருக்கு சராசரியாக 2.5 டன் நெல் விளைச்சல் கிடைத்திருக்கிறது. அப்படியானால், 6.50 லட்சம் ஏக்கரில் கிட்டத்தட்ட 16.25 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு வரக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 5.65 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 14 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 914 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு கூறுவதைப் போல ஒரு நாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள், அதாவது 40 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தீப ஒளி திருநாள் வரையிலான 50 நாள்களில் குறைந்தது 18 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்திருக்கலாம். முதல் 20 நாள்களை கணக்கில் கொள்ளாமல் கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் கூட சுமார் 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 5.66 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாத்தியமாகக் கூடிய அளவில் பாதியளவு கூட நெல் கொள்முதல் செய்யப்படாதது தான் உழவர்களின் துயரத்திற்கு காரணம் ஆகும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 59 கிடங்குகள் உள்ளன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 7.41 லட்சம் டன் மட்டுமே. அவற்றில் கடந்த ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 2 லட்சம் டன்னுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்தக் கிடங்குகளில் புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல்லில் அதிகபட்சமாக 5 லட்சம் டன் நெல்லை மட்டும் தான் சேமிக்க முடியும். இந்த மாவட்டங்களில் மொத்தம் 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மீதமுள்ள நெல்லை எங்கு சேமித்து வைக்கலாம் என்பதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு செய்யவில்லை.

செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காதது தான் அனைத்து சிக்கலுக்கும் காரணம் என்று பழி போட்டு தமிழக அரசு அதன் தோல்விகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலுக்குத் தேவையான சாக்குகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல போதிய எண்ணிக்கையில் சரக்குந்துகள் இல்லை. இவற்றை போதிய எண்ணிக்கையில் தயார்படுத்த திமுக அரசு தவறி விட்டது.

காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், 15 லட்சம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த நான்,‘‘கடந்த சில நாள்களாக பெய்த மழையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாள்களில் பெரிய அளவில் மழை பெய்தால் நெல்லுக்கு ஏற்படும் பாதிப்பும், உழவர்களுக்கு ஏற்படும் இழப்பும் மதிப்பிட முடியாதவையாக இருக்கும்” என எச்சரித்திருந்தேன். அப்போதே திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, உழவர்களின் கண்ணீரை தடுத்திருக்க முடியும். ஆனால், அதன் பிறகும் எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாத திமுக அரசு தான் உழவர்களின் கண்ணீருக்கு பொறுப்பேற்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன் மீதும் தமிழக அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்கள் நலனில் திமுக அரசு எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடனாளிகளாக மாறாமல் தடுப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது. உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Address

Thiruvarur
610001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pmk It Wing Thiruvarur North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share