07/09/2026
இந்தக் கோயில் நிர்வாகம் தான் உண்மையான பக்தியோடு எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கின்ற முயற்சி எடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னார் . அப்படிப்பட்ட பக்தி மார்க்கத்தை தான் பஞ்சாபில் உள்ள ஒரு கோயிலிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் சிவலிங்கத்திற்கு ஊற்றப்படுகின்ற இந்தப் பாலை தரையில் ஊற்றி விரயம் செய்யாமல் அதை சேகரித்து வைத்து அப்பகுதியில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் கொடுத்து உதவுகின்ற ஒரு மகத்தான பணியை கோயில் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.