16/04/2026
தத்து பித்து
_____________
கொள்கை என்றும்
ஆந்தம் என்றும்
சித்தாந்தம் என்றும்
பேசிக்கொண்டே
அதற்கு சம்மந்தம் இல்லாமல்
வாழும்
தலைமைப் பண்பு இல்லாத
ஒரு தல இருக்கிறது
வீட்ல இருந்து இருந்தால் தறுதலை
அதுவே கொள்ளை கூட்டம் என்பதால்
தலைவன் என்பதை தலைவர் என்று சொல்கிறார்கள்.
வளர்ச்சி என்றாலும்
வளம் என்றாலும்
வருங்கால/அடுத்த
தலைமுறைக்கு
சொந்தமானது என்று
தான் அர்த்தம்.
இதை ஒவ்வொருவரும்
தன் குடும்பத்திற்கு என்றால்
சரி என்பதும்
பிறருக்கு என்றால்
அதை மறப்பதும்
அறம் இல்லை.
பிறருக்காக
வாழ்வோர் யார்
என்று இந்த
தலைமுறை
உற்று நோக்கி
அலசி ஆராய்ந்து
தெளிவான முடிவு எடுக்க
ஆயிரம் வழிகள் உள்ளன.
அங்கு எல்லாம்
உணர்வு வயப்படச் செய்ய
ஒரு பெருங் கூட்டம்
குழிகளை பறித்து வைத்து உள்ளது.
அதில் வீழாமல்
தெளிந்த சிந்தனை
உடையவராக வாழ்வதே
பெரும் சவால் தான்
அந்த சவாலை வெல்லும்
இளம் தலைமுறையினரே
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
_ துறையூர் கிமூ 16.4.26 காலை 8.40