திண்டிவனம் நகரம் பாட்டாளி மக்கள் கட்சி

  • Home
  • India
  • Tindivanam
  • திண்டிவனம் நகரம் பாட்டாளி மக்கள் கட்சி

திண்டிவனம் நகரம் பாட்டாளி மக்கள் கட்சி மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருவோம்

அன்பார்ந்த விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு தலைமை அறிவிப்பு...
05/09/2026

அன்பார்ந்த விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு தலைமை அறிவிப்பு:

இன்று காலை 10 மணி அளவில் திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் திண்டிவனத்தில் மக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருந்த இரண்டு மதுபான கடைகளை (செஞ்சி பஸ் நிலையம், வாட்டர் டேங்க் கடை எண் :11552,11548) நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியும் அதில் வாட்டர் டேங்க் கடையை நிரந்தரமாக அகற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் "மாநில தலைவர்" அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களுக்கு நன்றி தெரிவித்து திண்டிவனம் நகர பா.ம.க சார்பாக பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவன் :

மொ. ப. சங்கர், B.Sc
மாவட்ட செயலாளர்

ஏ. சேது
மாவட்ட தலைவர்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம்

திண்டிவனத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இருக்கும் இடத்திலிருந்து இருந்த டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியருக...
01/09/2026

திண்டிவனத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இருக்கும் இடத்திலிருந்து இருந்த டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது தலைவர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

திண்டிவனம் நகராட்சியில் நடைபெறும் மாபெரும் முறைகேடு. ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் அதை நகர மன்ற உறுப்பினர...
28/08/2026

திண்டிவனம் நகராட்சியில் நடைபெறும் மாபெரும் முறைகேடு.

ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் அதை நகர மன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவைக்கு கொண்டு வர வேண்டும் அதன் மீது அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அந்த தீர்மானம் நகராட்சியால் நிறைவேற்றப்படும் இப்படி இருக்க.

இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில்

130 தீர்மானங்களை வெறும் ஐந்து நிமிடத்தில் எப்படி நிறைவேற்ற முடியும் திண்டிவனம் நகராட்சியில் நடைபெறும் மாபெரும் ஊழல் முறை கேட்டை தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவன்.
பாட்டாளி மக்கள் கட்சி
திண்டிவனம் நகரம்
விழுப்புரம் கிழக்கு மாவட்டம்

26/07/2026

📢 குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு அவசியம்!

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னெடுத்துள்ள இந்தச் சட்டம், 2027 ஜனவரி முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. 2026 செப்டம்பர் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியாது; ஏற்கனவே உள்ள கணக்குகளும் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய சட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடு பிரான்ஸ்.

குழந்தைகளின் உடல் நலம், மனநலம் மற்றும் கல்வியை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்கு முன்பே ஆஸ்திரேலியா குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. 2025 டிசம்பரில் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து கனடா, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இதுபோன்ற சட்டங்களை ஆய்வு செய்து வருகின்றன.

இந்தியாவிலும் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் ஆபாச உள்ளடக்கங்கள், இணையவழி சீண்டல்கள், கவனச் சிதறல், பதட்டம், மனஅழுத்தம், சுயமரியாதைக் குறைவு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

2025-26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமூக ஊடகங்களால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகளை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக 16 முதல் 24 வயதினரே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், ஆன்லைன் வகுப்புகளைக் கூட குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிலும் சமூக ஊடகப் பயன்பாட்டால் மாணவர்களின் கற்றல் திறன், கவன ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை குறைவதாக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து, 8 வினாடிகளுக்குள் கவராத காணொளிகளைத் தவிர்த்து அடுத்ததிற்கு செல்லும் மனநிலை உருவாகியுள்ளது. உடற்பயிற்சி, வெளிப்புற விளையாட்டுகள் குறைந்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துள்ளதால் உடல் பருமன், விட்டமின்-D குறைபாடு போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.

கர்நாடகம், ஆந்திரம், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அறிவித்திருந்தாலும், இந்திய அரசியலமைப்பின் படி தொலைத்தொடர்பு (Communication) மத்தியப் பட்டியலில் உள்ளதால், இதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது.

எனவே, குழந்தைகளின் உடல் நலம், மனநலம், கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

#தமிழகம் #குழந்தைகள்பாதுகாப்பு #மனநலம் #உடல்நலம் #சமூகஊடகம் #பாமக #அன்புமணிஇராமதாஸ்

பாமக தலைவர் வாழ்த்து மடல்..“உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும்” – அன்புமணி!உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வ...
30/04/2026

பாமக தலைவர் வாழ்த்து மடல்..

“உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும்” – அன்புமணி!

உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி என அன்புமணி கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "உலகை உயர்த்த உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாளான மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19-ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.

எந்த ஒரு இன்னலுக்கும் முடிவு உண்டு. அதேபோல், உழைக்கும் பாட்டாளிகள் மீது கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்ட சுரண்டலுக்கும் முடிவு உண்டு. அந்த முடிவு இப்போது நெருங்கி விட்டது என்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம் சுரண்டல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி, பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் பாட்டாளிகளுக்கு மீண்டும் ஒரு முறை மே நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

| | | |

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல... காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம்!2026-ஆம் ஆ...
30/03/2026

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல... காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம்!

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல... கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு நாமகரணங்களைச் சூட்டி புதிய வாக்குறுதிகளைக் காட்டி மோசடி செய்ய திமுக முயன்றிருக்கிறது. இது தோல்வியின் அடையாளம்.

2021-&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம்; அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம். ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பத் துப்பில்லாத திமுகவுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க எந்தத் தகுதியும் இல்லை.

தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அத்தகைய சட்டத்தையும் நிறைவேற்றவில்லை; 50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை. ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது திமுக. இத்தகைய மோசடிகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று வாக்குறுதி அளித்திருக்கிறது திமுக.

அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அதற்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வக்கில்லாத திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவையாகும்.

தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத திமுக அரசு, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87% வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் வாக்குறுத்க்களை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அதன் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான்.

அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் வணக்கம்...அதிமுக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் திண்டிவனம்...
29/03/2026

அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் வணக்கம்...

அதிமுக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் திண்டிவனம் துரோபதி அம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது இதனை அழைப்பாக ஏற்று அனைத்து பாட்டாளி சொந்தங்களும் மாநில மாவட்ட நகர நிர்வாகிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்..

இவன் :
திண்டிவனம் நகரம்...
விழுப்புரம் கிழக்கு மாவட்டம்...
பாட்டாளி மக்கள் கட்சி...

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி உறுதியாக வெற்றி பெறும் .. வெற்றி வேட்பாளர்  #அர்ஜுனன்வெற்றி சின...
28/03/2026

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி உறுதியாக வெற்றி பெறும் ..

வெற்றி வேட்பாளர் #அர்ஜுனன்
வெற்றி சின்னம் #இரட்டைஇலை.



15/02/2026

வாக்குறுதி 5.5 லட்சம் அரசு வேலை: காலியானது 2 லட்சம் வேலை, கொடுத்ததோ 94,191 வேலை - இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மா விடாது!

திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை.

அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 பேர், என மொத்தம் 94,191 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்திருக்கிறார். இது திமுக உறுதியளித்த வேலைவாய்ப்புகளில் வேலைவாய்ப்புகளில் 17% மட்டுமே.

2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் (வாக்குறுதி எண்:187), 4 வகையான பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் (வாக்குறுதி எண்:188,189, 190,191)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், வெறும் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல... தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகமும் ஆகும்.

திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தாண்டி, இயல்பாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யவில்லை என்பது தான் பெரும் துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த காலியிடங்கள் 2021&ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியானவையாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும், புதிதாக ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களையாவது திமுக அரசு நிரப்பியிருக்க வேண்டும்.

ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களில் பாதி கூட நிரப்பப்படவில்லை என்பதிலிருந்தே திமுகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆர்க்டிக் துருவத்திற்கும், அண்டார்டிகா துருவத்திற்கும் இடையிலான தொலைவை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் திமுக செய்தது துரோகம், துரோகம், துரோகம் மட்டுமே.

அதேபோல், தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை 5 லட்சம் வேலைவாய்ப்புகளைக்கூட வழங்கவில்லை. வழங்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கூட தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை; மாறாக அவை பிற மாநில இளைஞர்களுக்குத் தான் தாரைவார்க்கப்பட்டன. இதற்கு வசதியாகவே, தமிழக தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற இன்னொரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் கூடுதலான படித்த இளைஞர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற கவலையோ, அக்கறையோ திமுக அரசுக்கு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு அக்கறை காட்டியதெல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றில் மட்டும் தான். திமுகவின் இந்த ஊழல் பசியாலும், துரோகத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் தான்.

அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல... அரசுத்துறை பணிகளில் ஏற்கனவே சேர்ந்து விட்டவர்களுக்கும் திமுக அரசு பரிசளித்தது துரோகத்தை மட்டும் தான். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு, பகுதி நேர பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை திமுக நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலேயே மனசாட்சியும், மனிதநேயமும் இல்லாத ஆட்சி என்றால் அது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய, துரோகம் செய்த திமுக அரசுக்கு எதிரான அவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும்.

Address

Tindivanam
604001

Website

Alerts

Be the first to know and let us send you an email when திண்டிவனம் நகரம் பாட்டாளி மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share