06/09/2026
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாண்புமிகு கழக முதன்மை செயலாளர் ஐயா K.N.NEHRU அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, தலைமை கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மகிழ்ந்தார்.
காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்வதே நம் கழகத்தின் சிறப்பியல்பு. அதனால், நம் கழகம் மேற்கொண்ட மறு சீரமைப்பு பணிகளால் வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்க நம் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் என்பதையும் நிர்வாகிகளுக்கு அப்போது தெளிவுபடுத்தினார்.
நாம் தான் கழகம்; கழகம் தான் நாம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்!
உறுதிமிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம்!