Inamkulathur Makkal Kural IMK

Inamkulathur Makkal Kural IMK “ஊர் செய்திகள் | மக்கள் பிரச்சினைகள் | வளர்ச்சி தகவல்கள் | இளைஞர் செயல்பாடுகள்”

05/07/2026

இனாம்குளத்தூர் நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சாலை

11/06/2026

📢 இனாம் குளத்தூர் கிராம வளர்ச்சி குழு அறிவிப்பு
நேற்று ஆவாரங்காடு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலை குறித்து கிராம வளர்ச்சி குழு சார்பாக உடனடியாக பதிவு செய்யப்பட்டு கிராம நிர்வாகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று உடனடி நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டதற்கு கிராம நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் இனாம் குளத்தூர் கிராம வளர்ச்சி குழு சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இது போன்ற பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது.
🙏 கிராம வளர்ச்சி – நம் பொறுப்பு, நம் ஒற்றுமை
📍 இனாம் குளத்தூர் கிராம வளர்ச்சி குழு

08/06/2026

வீடு சரியாக இருந்தால் நாடு சரியாக இருக்கும் கடலூர் அரங்கூர் ஊராட்சிமன்ற தலைவர்‌ இனாம்குளத்தூரில் விழிப்புணர்வு பேச்சு
#கிராமவளர்ச்சிக்குழு

📰 இனாம்குளத்தூரில் பிரமாண்ட மக்கள் ஆலோசனைக் கூட்டம்!திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் கிராம வளர்ச்சி குழு சார்பில் மக்க...
08/06/2026

📰 இனாம்குளத்தூரில் பிரமாண்ட மக்கள் ஆலோசனைக் கூட்டம்!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் கிராம வளர்ச்சி குழு சார்பில் மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ரயில்வே மேம்பாலம், குடிநீர், சாலை வசதி, பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு. அ. ராஜா, மக்கள் பங்கேற்பே ஊர் வளர்ச்சியின் அடித்தளம் என வலியுறுத்தினார். இனாம்குளத்தூரின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட உறுதி எடுக்கப்பட்டது.

இன்று
07/06/2026

இன்று

📢 இனாம்குளத்தூர் கிராம வளர்ச்சி குழு 📢அன்புடையீர்,நமது ஊரின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் நீண்டகால கோரிக்...
05/06/2026

📢 இனாம்குளத்தூர் கிராம வளர்ச்சி குழு 📢
அன்புடையீர்,
நமது ஊரின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
🗓️ 07.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕕 மாலை 6.00 மணி
📍 AJ மளிகை மாடி, அண்ணா நகர், இனாம்குளத்தூர்
👨‍👩‍👧‍👦 அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
✊ "மக்கள் குரலே மகேசன் குரல்"
✊ "ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்"
📞 தொடர்புக்கு:
93456 27911
95664 34121
90033 00983
🏡 கிராம வளர்ச்சி குழு
இனாம்குளத்தூர்

.🙏 மனமார்ந்த நன்றி!இனாம்குளத்தூர் அல்அமீன் நகரில் ஏற்பட்ட மின்கம்ப விபத்தை தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ...
03/06/2026

.🙏 மனமார்ந்த நன்றி!

இனாம்குளத்தூர் அல்அமீன் நகரில் ஏற்பட்ட மின்கம்ப விபத்தை தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்து, மின்விநியோகத்தை விரைவாக மீட்டெடுத்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் சிரமத்தை உணர்ந்து துரித நடவடிக்கை எடுத்த உங்கள் சேவை பாராட்டுக்குரியது.

⚡ மக்கள் சேவையே மகேசன் சேவை!
#கிராமவளர்ச்சிக்குழு





இனாம்குளத்தூர் அல்அமீன் நகரில் டாடா ஏஸ் வாகனம் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.⚡ அதிகா...
03/06/2026

இனாம்குளத்தூர் அல்அமீன் நகரில் டாடா ஏஸ் வாகனம் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
⚡ அதிகாலை 3 மணி முதல் மின்தடை நீடித்து வருகிறது.
🔧 மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பழுதுகளை சரிசெய்து, மின்விநியோகத்தை உடனடியாக சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
— இனாம்குளத்தூர் கிராம வளர்ச்சிக்குழு




📢 இனாம்குளத்தூரில் அமைச்சர் திரு. ரமேஷ் வருகைவாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அறநிலை...
31/05/2026

📢 இனாம்குளத்தூரில் அமைச்சர் திரு. ரமேஷ் வருகை
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரமேஷ் அவர்கள் இனாம்குளத்தூர் வருகை தந்தார்.
🤝 பொதுமக்களை நேரில் சந்தித்த அமைச்சர் அவர்களிடம், ஊரின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டன.
🚌 பேருந்து நிலையம் அமைத்தல்
🛣️ சாலை வசதிகளை மேம்படுத்துதல்
💧 குடிநீர் வசதிகளை விரிவுபடுத்துதல்
🚦 போக்குவரத்து மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
👥 மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் வெளிப்படுத்தினர்.
❓ மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறுமா?
❓ இனாம்குளத்தூரில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்குமா?
என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
📍 இனாம்குளத்தூர் கிராம வளர்ச்சிக்குழு
#இனாம்குளத்தூர்
#ரமேஷ்
#மக்கள்கோரிக்கை
#கிராமவளர்ச்சிக்குழு
#மக்கள்குரல்
#வளர்ச்சிவேண்டும்


29/05/2026

📢 பேருந்து நிலையமே இல்லாமல்
மக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது
நம் இனாம்குளத்தூரில்!

🚌 வேகமாக வளர்ந்து வரும் பகுதிக்கு
அடிப்படை தேவையான
பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
என்பது மக்களின் கோரிக்கை.

🤝 இனாம்குளத்தூர் கிராம வளர்ச்சிக்குழு
#இனாம்குளத்தூர்
#பேருந்துநிலையம்
#மக்கள்குரல்
#மக்கள்மனசு
#கிராமவளர்ச்சிக்குழு




Address

Inamkulathur
Tiruchirappalli
620009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inamkulathur Makkal Kural IMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share