Enlightening Candles

Enlightening Candles as a government high school teacher, i would like to create a page for my students.

this is a place to enlighten a healthy relationship between students and teachers. this is a place to share the thoughts to improve the level of the pillars of our future.

10/05/2022

சிறு அகலின் துணை கொண்டு உலகின் இருளை போக்க இயலுமா?

இயலும்!

அவ்பகலைக் கொண்டு பலநூறு கோடி விளக்குகளை ஏற்றினால்.

ஆசான்

25/12/2015

இது ஒரு உண்மைச் சம்பவம்!...
கடவுள் இருக்கிறாரா?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான்.
'கடவள் நல்லவரா?'
'ஆம் ஐயா'
'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?
'ஆம்'
'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்?
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.........நாம் மீண்டும் ஆரம்பிப்போம், கடவுள் நல்லவரா'?
'ஆம் ஐயா'
'சாத்தான் நல்லவரா?'
'இல்லை'
'எல்லாரும் கடவுள் படைப்புதான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்'?
கடவுளிடமிருந்துதான்'
'சரி இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா'?
'ஆம்'
'அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்'?
(மாணவர் பதில் சொல்லவில்லை)
'இவ்வுலகதில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?'
(மாணவர் மௌனமாய் நிற்கிறார்)
விஷமங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல், கடவுளை கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா? வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?'...............................(மௌனம்)
'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித்தானே?'
'ஆம் ஐயா'
'நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, கடவுள் இல்லை என்று இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?'
'ஒன்றுமேயில்லை, எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது'
'ஹம்ம்......நம்பிக்கை..........அதுதான் இப்போது பிரச்சனையே...'
ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
'ஐயா............வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?'
'நிச்சயமாக உள்ளது.'
'அதே போல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?'
'நிச்சயமாக.'
'இல்லை ஐயா, நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.'
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது)
'ஐயா................வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்ப நிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல குளிரை அளக்க முடியுமா? வெப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது.
வெப்பம் இல்லை என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே – 240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.
(குண்டூசி விழும் சப்தம்கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
'சரி, இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா, அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?' 'ஆமாம் தம்பி, இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.'
'நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா, இருட்டு என்பதே வெளிச்சத்தின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணை கூசச் செய்யும் ஒளி என பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்க முடியும். அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது, இல்லையா?'
'சரி தம்பி, நீ என்னதான் கூற வருகிறாய்?'
'ஐயா........நான் கூறுகிறேன், கடவுளைப்பற்றிய உங்கள் கருத்து பிழையானது.'
'பிழையா? எப்படி என்று விளக்கிக் கூற முடியுமா?'
'ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள் கெட்ட கடவுள், இருட்டு – வெளிச்சம், வெப்பம் - குளிர்.
நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள். அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்க முடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத் தூண்டல்களினால்தான். மின்சாரத்தை அளக்க முடிந்த உங்களால் காந்தத் தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை. இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் 'வாழ்வு இனி இல்லை' என்ற தன்மையே இறப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சரி, இப்பொழுது சொல்லுங்கள் ஐயா, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?' – கேட்டான் மாணவன்.
'இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமோனால், ஆம் அதுதான் உண்மை, குரங்கிலிருந்து மனிதன் உருவானான்' பேராசிரியர் பதிலுரைத்தார். 'உங்கள் கண்களால் மனிதப்பரிணாம வளர்ச்சியை கண்டிருக்கிறீர்களா– மடக்கினான் மாணவன்.
(பேராசிரியர் தன் தலையை இல்லை என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்)
மாணவன் தொடர்ந்தான், 'அப்படியென்றால். யாருமே மனிதப் பரிணாம வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒரு வகையான அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உங்கள் கருத்து. அதை நிரூபிப்பதற்கு உங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப்படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள் இல்லையா? அப்படியானால், நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?'
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
'இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?'
(வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்கிறது)
'மாணவர்களே யாராவது நமது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையாவது நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் நமது பேராசிரியரின் மூளையை தொட்டதோ, பார்த்ததோ, நுகர்ந்ததோ இல்லை அல்லவா, அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை! என்று. மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால் வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போகிறது)
'நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி' என்றார் பேராசிரியர்.
'அதுதான் ஐயா........ இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. பார்க்க முடியவில்லை என்றாலும், தொடமுடியவில்லை என்றாலும் உணர முடிந்த கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இதுதான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக்கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை'
இவ்வாறாக விவாதம் நிறைவுற்றது. இது ஒரு உண்மைச் சம்பவம்!
இறுதி வரை பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்,
வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் -நமது முன்னாள் குடியரசுத்தலைவர்.. அவர்கள்!!!..... Real வழிகாட்டி ... சு.அமுதன்,TESTF.

24/12/2015

ஒரு நிறுவனம் ...
வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது,
அதன்படி_
நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள்.
அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்...
அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது.
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்,
இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.
உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.
அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும்.
தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்,
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின்,
அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.
விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள்.
மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்,
அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.
வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள்.
எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.
(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா? )
அதற்கு அந்த மேலாளர் சொன்னார்,
எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்,
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்,
அந்த பத்தாவது கேள்வி இது தான்..
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்,
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
சிந்தனைக்கு :
இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர,
நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை...

23/12/2015

Published on 22-12-2015
இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார். அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், வர் தயாரித்த சில முக்கிய நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.

23/12/2015

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

23/12/2015

Departmental Exams

தமிழ் நாடு அரசு ஊழியர்கள்
எழுத வேண்டிய
துறை தேர்வுகள் விபரம்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

23/12/2015

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

பிடித்திருந்தால் share செய்யுங்க
Good morning
Pughazh

23/12/2015

This is from Dr. Geetha Krishnaswamy, Please give your 2min and read this:-

1 Let’s say it’s 7.25pm and you’re going hcome (alone of course) after an unusually hard day on the job.

2 You’re really tired, upset and frustrated.

3 Suddenly you start experiencing severe pain in your chest that starts to drag out into your arm and up in to your jaw. You are only about five km from the hospital nearest your home.

4 Unfortunately you don’t know if you’ll be able to make it that far.

5 You have been trained in CPR, but the guy who taught the course did not tell you how to perform it on yourself.

6 HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE?
Since many people are alone when they suffer a heart attack without help, the person whose heart is beating improperly and who begins to feel faint, has only
about 10 seconds left before losing consciousness.

7 However, these victims can help themselves by coughing
repeatedly and very vigorously. A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest.

A breath and a cough must be repeated about every two
seconds without let-up until help arrives, or until
the heart is felt to be beating normally again.

8 Deep breaths get oxygen into the lungs and coughing
movements squeeze the heart and keep the blood circulating. The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital.

9 Tell as many other people as possible about this. It could save their lives!!

10 A cardiologist says If everyone who gets this mail
kindly sends it to 10 people, you can bet that we’ll save at least one life.

11 Rather than sending jokes, please..contribute by forwarding this mail which can save a person’s life….

12 If this message comes around you ……more than once…..please don’t get irritated……U need to be happy that you have many friends who care about you & being reminded of how to tackle….Heart attacks….AGAIN…

From:
DR.N Siva
(Senior Cardiologist)

Copy and paste...u might save lives 😊Pl don't mind repetition☺

19/12/2015

☑டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?.....................................................
🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!......................................................
☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?...................................................................
🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?....................................................................
☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?...................................................................
🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?.......................................................................
☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗புக்கை மூடிடுவேன்!.......................................................................
🔘காலில் என்ன காயம்?
🔗செருப்பு கடித்து விட்டது
🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!.............................................................
☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!......................................................................
🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!..........................................................................
☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗என்னிடம் சுத்தமா இல்ல
🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!...................................................................
🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!.............................................................
☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!................................................................
🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!....................................................................
☑மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

19/12/2015

ஆண்கள் கவனத்திற்கு:
===============
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.
®
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)்

19/12/2015

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

★ இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்

19/12/2015

An excellent inspirational message

A famous writer was in his study room. He picked up his pen and started writing :

**Last year, I had a surgery and my gall bladder was removed. I had to stay stuck to the bed due to this surgery for a long time.

**The same year I reached the age of 60 years and had to give up my favourite job. I had spent 30 years of my life in this publishing company.

**The same year I experienced the sorrow of the death of my father.

**And in the same year my son failed in his medical exam because he had a car accident. He had to stay in bed at hospital with the cast on for several days. The destruction of car was another loss.

At the end he wrote: Alas! It was such bad year !!

When the writer's wife entered the room, she found her husband looking sad lost in his thoughts. From behind his back she read what was written on the paper. She left the room silently and came back with another paper and placed it on side of her husband's writing.

When the writer saw this paper, he found this name written on it with following lines :

**Last year I finally got rid of my gall bladder due to which I had spent years in pain....

**I turned 60 with sound health and got retired from my job. Now I can utilize my time to write something better with more focus and peace.....

**The same year my father, at the age of 95, without depending on anyone or without any critical condition met his Creator.....

**The same year, God blessed my son with a new life. My car was destroyed but my son stayed alive without getting any disability......

At the end she wrote:

This year was an immense blessing of God and it passed well !!!

The writer was indeed happy and amazed at such beautiful and encouraging interpretation of the happenings happened in his life in that year !!!

Moral : In daily lives we must see that its not happiness that makes us grateful but gratefulness that makes us happy.

friends...Think positive.....Be happy...Stay Blessed

Address

K. K. Nagar
Tiruchirappalli
620021

Telephone

7845260299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enlightening Candles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Enlightening Candles:

Share