தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகமங்கலம் கிளை

  • Home
  • India
  • Tiruchirappalli
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகமங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகமங்கலம் கிளை kudpudeen

31/08/2025

TNTJ திருச்சி மாவட்டம் நாகமங்கலம் கிளை சார்பாக (31/08/25) அன்று மாலை நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் நிறேவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

*அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு*

1. இந்திய ஏற்றுமதி பொருளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% விதியினால் தூத்துக்குடியின் இறால் ஏற்றுமதியும் , திருப்பூரின் ஆடை ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இதனால் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது வாய்ச்சவடால் மட்டும் விடும் மோடியின் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்

*NO SIR_நம்பிக்கையளிக்கும் சுப்ரீம் கோர்ட்*

2. Special Intensive Revision (SIR) மூலம், பிஹாரில் சுமார் 65 இலட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு குட்டு வைத்து ஆதார் கார்ட்டையும் ஒரு ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டலை இந்த கூட்டத்தின் வாயிலாக வரவேற்கிறோம்

*இட ஒதுக்கீடு கோரிக்கை*

3.*இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை பன்னெடுங்காலமாக இஸ்லாமியரகள் வைத்து வருகின்றனர், சென்ற தேர்தல் அறிக்கையிலும் , தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார், தான் சொன்ன வாக்குறுதியை காக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை இந்த கூட்டத்தின்
வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*

*பசியால் துடிக்கும் காசா மக்கள்*

4. *பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட கடும் பஞ்சத்தில் சிக்கி உள்ளதாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது வரும் நாட்களில் நிலைமை இன்னும் கடும் மோசாமாகும் என எச்சரித்துள்ளது, இந்திய அரசு பசியால் இறக்கும் பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக உரிய அழுத்தத்தை உலக அரங்கில் தர வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.*

*5.திருச்சி மாவட்டம் நாகமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலே பல நாட்களாக இடத்திற்கான பட்டா வழங்கப்படாமலேயே இருக்கிறது. பல முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இன்னும்

நாகமங்கலம் தெருமுனை கூட்டம் தலைப்புகள்: *1. இன்றைய இளைஞர்களின் நிலையும் இஸ்லாம் கூறும் தீர்வும்**2. நபிகளாரின் நற்பண்புக...
31/08/2025

நாகமங்கலம் தெருமுனை கூட்டம் தலைப்புகள்:

*1. இன்றைய இளைஞர்களின் நிலையும் இஸ்லாம் கூறும் தீர்வும்*

*2. நபிகளாரின் நற்பண்புகள் & மௌலூது பாடல்களும் மீலாது விழாக்களும் ஒரு வழிகேடாகும்*

18/02/2025
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் நாகமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் இன்று மக்ரிப்  தொழுகைக்கு பிறகு நட...
19/01/2025

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

நாகமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

தலைப்பு *தொழுகையின் அவசியம்*
நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் *இரவு உணவு* வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... அஸ்ஸலாமு அலைக்கும்.. திருச்சி மாவட்டம் *நாகமங்கலம் கிளையின்* மசூரா நடைபெற்றது. அல்ஹம்துல...
01/12/2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

திருச்சி மாவட்டம் *நாகமங்கலம் கிளையின்* மசூரா நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..

சென்ற மாத வரவு செலவு; இந்த மாத தாவா மற்றும் சமுதாய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... அஸ்ஸலாமு அலைக்கும்.. திருச்சி மாவட்டம் *நாகமங்கலம் கிளையின்* மர்க்கஸ் அமைப்பதற்கு உண்டான...
01/12/2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

திருச்சி மாவட்டம் *நாகமங்கலம் கிளையின்* மர்க்கஸ் அமைப்பதற்கு உண்டான இடத்தில் சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு நடைபெற்றது.

கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

அல்ஹம்துலில்லாஹ்..

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் *நாகமங்கலம் கிளை...
24/11/2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் *நாகமங்கலம் கிளை* சார்பாக மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் இணைந்து *இல்லந்தோறும் இப்ராஹிம் நபி* என்கின்ற தலைப்பில் எம்ஜிஆர் நகரில் தனிநபர் தாவா / அழைப்பு பணி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

சுன்னத்துல் ஜமாத் நிர்வாகி மற்றும் இமாம் அவர்கள் உட்பட இந்த பகுதியில் மக்களை சந்தித்து ளௌ தாவா செய்யப்பட்டது.

மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

*தற்காலிக மர்க்கஸ்* அமைப்பதற்கான இடத்தை மாநில , மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டது ..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் வாராந்திர *பெண்கள் பயான் நிகழ்ச்சி* 22/11/24 - வெள்ளிக்கிழமை  *நாகமங்கலம் கிளை*தலைப்பு:*...
23/11/2024

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

வாராந்திர *பெண்கள் பயான் நிகழ்ச்சி* 22/11/24 - வெள்ளிக்கிழமை

*நாகமங்கலம் கிளை*

தலைப்பு:
*நபிகளாரின் நற்குணங்கள்*

இறைவனின் கிருபையால் பயானில் கலந்து கொண்டவர்களுக்கு *இரவு சிற்றுண்டி* வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

புகழ் அனைத்தும் இறைவனுக்கே...

இதற்காக பொருளாதார உதவி செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...

Address

Nagamangalam
Tiruchirappalli
620020

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகமங்கலம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category