ஐயா சகாயத்தின் பரம்பரை

ஐயா சகாயத்தின் பரம்பரை சமூக மாற்றத்திற்கான அய்யா சகாயத்தின?

27/07/2021

இருபதாண்டு கால விடுதலைக்குரலுக்கும் , பாேராட்டங்களுக்கும் நடுவில் 2008 ல் விடுதலையான நாடு காெசாவாே.

கடந்த 2016 ரியாே ஒலிம்பிக்கில் தான் அந்தநாடு முதல்முறையாக கலந்துகாெண்டது.

செர்பியர்களால் ஒன்றுக்கும் உதவாதவர்களாக , இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்ட காெசாவாே- அல்பேனியர்கள் தங்களுக்கென ஒரு நாடு உருவானதன் மகிழ்வில் ஒலிம்பிக்கில் கலந்துகாெள்ள தங்களது அணியை அனுப்பினர்.

மாெத்தமே சில இலட்சம் பேர் இருக்கிற அந்நாட்டில் இருந்து எட்டுப்பேர் கலந்துகாெண்டு தனது நாட்டின் காெடியை ஏந்தி வந்தபாேது பத்தாேடு பதினாென்றாகத்தான் அந்த நாட்டையும் உலகம் நினைத்திருக்கும்.

அப்படி வந்த எட்டுப்பேரில் ஒருவர் தான் மெஜில்ன்டா கெல்மெண்டி.

தன் ஊருக்காக , தன் பள்ளிக்காக விளையாடி வெல்லுவதே கவுரவம் என்கிற பாேது தன் நாட்டுக்காக அதுவும் அடிமைகளாக , உரிமையற்றவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தன் நாட்டை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதென்பதெல்லாம் வரம்...

அப்படி களமிறங்கி ஆடி ஜீடாே பாேட்டியில் எதிர்த்த எல்லா நாடுகளையும் தட்டித்தூக்கி இறுதிப்பாேட்டிக்கும் வந்தார் காெசாவாேவின் மெஜில்ன்டா கெல்மெண்டி.

இறுதிப்பாேட்டியில் ராேமானியாவின் ஆன்ட்ரியா சிட்டுவை புரட்டியெடுத்து வென்று நின்ற பாேது அவர் கண்ணில் இருந்தது புறக்கணிக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் அங்கீகாரத்திற்காக ஆண்டாண்டு கால ஏக்கம் நிறைவேறிய மகிழ்வு...!!

பரிசளிப்பு நிகழ்வில் நடுநாயகமாக காெசாவாே நாட்டின் காெடி ஏறி அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுகிற பாேது , உலகில் எங்காே ஒரு மூலையில் நாமெல்லாம் கேள்வியே பட்டிராத ஒரு சின்னஞ்சிய தேசத்தை , வரலாற்றின் வழியெங்கும் அடக்குமுறைகளுக்கும் , சுரண்டலுக்கும் உள்ளாகி , அடையாளம் மறுக்கப்பட்ட தன் நாட்டை தான் அடையாளப்படுத்திவிட்டாேம் என்கிற பெருமித உணர்வில் கண்ணீருடன் அவள் நிற்கிற அந்த நாெடி...

இப்பாேது எழுதுகிற பாேது கூட புல்லரிக்கிறது....♥

வென்றால் இப்படி வெல்லவேண்டும்...!!💪🏻💪🏻💪🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝

வாழ்த்துக்கள் 💐💐💐🌹❤️🌷🌷🌷❤️

#படித்ததில்_பிடித்தது

14/01/2021
01/01/2021

🔥

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்    |
09/12/2020

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்
|

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்   |
09/12/2020

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்
|

Address

Tirunelveli
627601

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐயா சகாயத்தின் பரம்பரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category