Anbin Illam

Anbin Illam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anbin Illam, Bishop Sargent Anbin Illam, No. 20, Guru Street, Murugankurichi Palayamkottai, Tirunelveli.

Official page for Bishop Sargent Anbin Illam managed by Tirunelveli Diocese Department of Counseling(TDDC).
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.

11/11/2025
11/11/2025
கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் 79-வது சுதந்திர தின விழாகோவிலூற்று, தென்காசி:CSI திருநெல்வேலி திருமண்டல...
15/08/2025

கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் 79-வது சுதந்திர தின விழா

கோவிலூற்று, தென்காசி:
CSI திருநெல்வேலி திருமண்டல நல் ஆலோசனைத் திருப்பணியின் கீழ் செயல்படும் Rev. வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் 79-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15, 2025, காலை 7.30 மணிக்கு தேசிய உணர்வோடு சிறப்பாக நடைபெற்றது.

விழா ஆரம்ப ஜெபத்தை சபை ஊழியர் Mr. ஜெபஸ்டின் நடத்தி, பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. வேதப்பகுதியாக உபாகமம் 8:7–10 வசனங்களை Miss. எஸ்தர் வாசித்தார். சமூக ஆர்வலர் Mr. G. வில்சன் தங்கராஜ் வரவேற்புரையாற்றினார்.

தென்காசி மாவட்ட அஇஅதிமுக மகளிரணி செயலாளர், கழக தலைமை செயற்குழு உறுப்பினர், கடையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி ஜனதா காமராஜ் தேசியக் கொடியை ஏற்றி, சிறப்பு உரையாற்றினார்.

உறுதிமொழியை Mr. மரிய கனகராஜ் வழிநடத்தினார். கலை நிகழ்ச்சிகளில் “எங்கள் பாரதம்” பாடலுக்கு ஆண்கள் நடனமாடினர்; “தேசியக் கொடியின் சிறப்பு” குறித்து Mr. ஜேக்கப், “சுதந்திரம் கடந்து வந்த பாதை” குறித்து Miss. காமாட்சி உரையாற்றினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவியம், வண்ணம் தீட்டுதல், நடனம், மேடை பேச்சு போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு விடுதி காப்பாளர் Mrs. சித்திரா பாராட்டு வழங்கி, நன்றியுரையையும் நிகழ்த்தினார்.

முடிவு ஜெபத்தை சபை ஊழியர் Mr. ஜான் பிரகாஷ் நடத்த, அனைவரும் தேசிய கீதம் பாடினர். ஒளி-ஒலி அமைப்பை Mr. பெஞ்சமின் மேற்கொண்டார்.

அன்பின் இல்ல அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு, விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்நிகழ்வை Rev. S. ஆமோஸ், இயக்குநர், நல் ஆலோசனைத் திருப்பணி, Rev. வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம், அன்புடன் ஏற்பாடு செய்தார்

திருநெல்வேலி பிஷப்  சார்ஜென்ட் அன்பின் இல்லம் மனநல காப்பகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம். சிறப்பு விருந்தி...
15/08/2025

திருநெல்வேலி பிஷப் சார்ஜென்ட் அன்பின் இல்லம் மனநல காப்பகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம். சிறப்பு விருந்தினர்களாக பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் சகாயராஜ் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மனநல பணியின் மருத்துவர் பாக்கியஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்பின் இல்லத்தின் இயக்குனர் அருள்திரு.S.ஆமோஸ் அவர்களும் பணியாளர்களும் செய்திருந்தார்கள்.

1. கடந்த எட்டு வருடங்களாக  வழி நடத்தி வந்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி நன்றி சொல்லுகிறோம்.2. இந்நாள் வரை இந்த இல்லத...
19/11/2024

1. கடந்த எட்டு வருடங்களாக வழி நடத்தி வந்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி நன்றி சொல்லுகிறோம்.
2. இந்நாள் வரை இந்த இல்லத்திற்காக ஜெபித்த, உதவி செய்த, பணி செய்த அனைவரையும் நினைத்து நன்றி சொல்லுகிறோம்.
3. தொடர்ந்து இல்லத்திற்காக ஜெபியுங்கள், பயன்படுத்துங்கள், உதவி செய்யுங்கள்.

கடந்த 28.02.2022 அன்று மகளிர் ஆதரவு மையத்தின் (Women Helpline) உதவியுடன் மீட்கப்பட்ட சகோதரி. சந்தியா (32) நமது அன்பின் இ...
19/11/2024

கடந்த 28.02.2022 அன்று மகளிர் ஆதரவு மையத்தின் (Women Helpline) உதவியுடன் மீட்கப்பட்ட சகோதரி. சந்தியா (32) நமது அன்பின் இல்லத்தின் அரவணைப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் குணமடைந்தார். மிஷனரிகளின் உதவியுடன் அவரது முகவரி கண்டறியப்பட்டு 09.11.2024 அன்று சட்டிஸ்கர் மாநிலம், நாகர்ஜித்தை சேர்ந்த அவரது தந்தையுடன் இணைக்கப்பட்டார். இவரது நல்வாழ்வுக்காக ஜெபித்துக் கொள்வோம்.

பிஹார் மாநிலம், ஹயா மாவட்டத்தை சேர்ந்த திரு.அமித்குமார் (மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) மனநல பாதிப்பின் காரணமாக 2...
07/08/2024

பிஹார் மாநிலம், ஹயா மாவட்டத்தை சேர்ந்த திரு.அமித்குமார் (மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) மனநல பாதிப்பின் காரணமாக 2018 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியவர், சுமார் 4 வருடங்களாக திசையன்விளை பகுதியில் சுற்றி திரிந்தார். சமாரியா திருச்சபையின் ஆயர் கொடுத்த தகவலின் பேரில், 2022 மார்ச் 25ஆம் தேதி திசையன்விளையில் காவல்துறை/ திருச்சபையார் உதவியுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து 2.5 வருடம் பராமரிப்பு பின்பு அவரது முகவரி உறவினர் அடையாளம் காணப்பட்டு. 26/07/2024 அன்று District Collector திரு.K.P.கார்த்திகேயன், DRO திருமதி.M.சுகன்யா, DDAWO திரு.சிவசங்கரன் ஆகியோர் முன்னிலையில் (Reunion) குடும்பத்தோடு சேர்க்கப்பட்டார்
இவருக்காக ஜெபித்த உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Rescued near Rani Anna college
07/08/2024

Rescued near Rani Anna college

REUNION                  28.01.2023 அன்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன...
25/01/2024

REUNION

28.01.2023 அன்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி திரு.நாகராஜ் என்பவரை, மனநல சிகிச்சைக்கு பின்பு முகவரி கண்டுபிடித்து, கயத்தாறு காவல் ஆய்வாளர் திரு.திருமுருகன் அவர்கள் முன்னிலையில் குடும்பத்தாரோடு இன்று 24.01.2024 சேர்க்கப்பட்டார். Reunionக்கு உதவிய காவல் ஆய்வாளர் திரு.திருமுருகன், உதவி ஆய்வாளர் திரு.அந்தோணி திலிப் மற்றும் காவலர்கள் அனைவருக்கும், இந்நாள் வரை உதவி செய்த நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், அன்பின் இல்ல பணியாளர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவனுக்கே மகிமை உண்டாவதாகஹைகிரவுண்ட் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில்  ஒருவர் பல நாட்களாக ஒரு காலில் எலும...
08/11/2023

தேவனுக்கே மகிமை உண்டாவதாக
ஹைகிரவுண்ட் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் பல நாட்களாக ஒரு காலில் எலும்பு முறிவடைந்த நிலையில், யாரும் உதவி செய்ய இல்லாத நிலையில் அங்கு செல்லும் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்தார், தற்போது நமது நல் ஆலோசனைத் திருப்பணி இயக்குனர் Rev. S. Amose மற்றும் ஊழியர்கள் உதவியுடன் ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Address

Bishop Sargent Anbin Illam, No. 20, Guru Street, Murugankurichi Palayamkottai
Tirunelveli
627002

Opening Hours

Monday 9:30am - 5:30am
Tuesday 9:30am - 5:30am
Wednesday 9:30am - 5:30am
Thursday 9:30am - 5:30am
Friday 9:30am - 5:30am
Saturday 9:30am - 5:30am

Telephone

+918754913437

Alerts

Be the first to know and let us send you an email when Anbin Illam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anbin Illam:

Share