Tirunelveli District Police

Tirunelveli District Police Tirunelveli District Police Official FB page. IN PUBLIC SERVICE. Headed by Tr. Vishwesh Balasubramaniam Shastri, IPS.,
(1)

🚔 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை 🚔⭐ நடை ரோந்து (FOOT PATROL)🚨 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, மாவட்ட கா...
04/09/2026

🚔 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை 🚔

⭐ நடை ரோந்து (FOOT PATROL)

🚨 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர், மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

#திருநெல்வேலிகாவல்துறை
#தமிழ்நாடுகாவல்துறை
#நடைரோந்து
#தீவிரநடைரோந்து
#பொதுமக்களின்பாதுகாப்பு
#பாதுகாப்புவிழிப்புணர்வு
#மக்கள்நண்பன்காவல்துறை
#நல்லகாவல்பணி

🛡️ திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரக ஓய்வு பெற்ற அதிகாரிகள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற இணையவழி மோசடி விழிப்புணர்வு முகாம...
04/09/2026

🛡️ திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரக ஓய்வு பெற்ற அதிகாரிகள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற இணையவழி மோசடி விழிப்புணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று சிறப்புரை.

📅 திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரக ஓய்வு பெற்ற அதிகாரிகள் நலச்சங்கம் சார்பாக 5-ஆம் ஆண்டு விழா மற்றும் 🌐 இணையவழி மோசடி விழிப்புணர்வு முகாம் இன்று (04.09.2026) திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தெற்கு வாசல் கீழ்ப்புறம், தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள கிரீன் ஹால் பகுதியில் நடைபெற்றது.

👮‍♂️ இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

🔐 மேலும், இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இணையவழி மோசடிகளின் வகைகள், அவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மோசடி நடைபெற்றால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

👮‍♂️ இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முருகன் அவர்கள் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருநெல்வேலி #விழிப்புணர்வு

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 04.09.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிக...
04/09/2026

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 04.09.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.

🚨 அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.




🔖 ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று சிறப்புரை.📰 திருநெல்வேலி மாவட்டத்தில் “பொய் செய்...
04/09/2026

🔖 ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று சிறப்புரை.

📰 திருநெல்வேலி மாவட்டத்தில் “பொய் செய்தி நிருபராக மாறாமல் இருப்பது எப்படி?” என்ற தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

💻 ⚠️ அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சைபர் மோசடி குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வது காவல்துறைக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என்றும், ஒரு சிறிய அறையில் 4 அல்லது 5 செல்போன்களை பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல்கள் தினமும் ரூ.1 லட்சம் வரை மோசடி செய்வதாகவும் தெரிவித்தார். பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்ற சைபர் மோசடிகளில் பணம் பறிபோவதாகவும் கூறினார்.

👮‍♂️ மேலும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சாதி ரீதியான மோதல்கள் ஆகியவை பெரும் சவால்களாக உள்ளதாக தெரிவித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் மூளைச்சலவை செய்யப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 தொடர்ந்து, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலம் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதைத் தடுக்கவும், வளரிளம் பருவத்தினரை நல்வழிப்படுத்தவும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.

#திருநெல்வேலி_மாவட்ட_காவல்துறை
#ஊடகவியலாளர்_பயிலரங்கு
#சைபர்_குற்றம்
#சைபர்_விழிப்புணர்வு
#மாணவர்கள்_பாதுகாப்பு
#சமூகஊடக_விழிப்புணர்வு

💥திருநெல்வேலி மாவட்டம் - வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நோபல் மற்றும் காஸ்மிக் உலக சாதனை அமைப்பின் சார்பாக நடைபெற்ற சதுரங்கப...
03/09/2026

💥திருநெல்வேலி மாவட்டம் - வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நோபல் மற்றும் காஸ்மிக் உலக சாதனை அமைப்பின் சார்பாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி மாவட்டம், வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும், இப்போட்டியில் “நோபல் மற்றும் காஸ்மிக் உலக சாதனை” படைத்த மாணவர் முத்து பாலாஜிக்கு, நோபல் உலக சாதனை அமைப்பின் சார்பில் சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கப்பட்டன. சாதனை மாணவர் முத்து பாலாஜியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.

மாணவர் முத்து பாலாஜியின் திறமை மற்றும் சாதனையைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், இச்சாதனை மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், சர்வதேச சதுரங்கப் பயிற்சியாளர் திரு. மணிகண்டன் மற்றும் டாக்டர் ஆர். எஸ். கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 03.09.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிக...
03/09/2026

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 03.09.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.

🚨 அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.




💥திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்...
03/09/2026

💥திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வழக்கில் இருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதே வழக்கில் மேலும் ஒருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது – பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம், டாணா பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் மைதீன்ஹனிபா (21) என்பவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி நபர் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பிரபு பாஸ்கர் அவர்கள், மேற்படி எதிரி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்படி, மேற்படி எதிரி இன்று (03.09.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தாண்டில் இதுவரை மொத்தம் 101 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

🚨100th GOONDAS ACT – 2026 🚨🎯 திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தொடர் அதிரடி நடவடிக்கை..!! 🎯🔖 திருநெல்வேலி மாவட்டம், வி.க...
02/09/2026

🚨100th GOONDAS ACT – 2026 🚨

🎯 திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தொடர் அதிரடி நடவடிக்கை..!! 🎯

🔖 திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட இருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது..!!

📌 திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த இரத்தினசாமி மகன் கார்த்திக்சங்கர்ராஜா (37) மற்றும் காளிமுத்து மகன் மாரியப்பன் (42) ஆகிய இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

⭐ இந்நிலையில், மேற்படி இருவரும் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பிரபு பாஸ்கர் அவர்கள், மேற்படி எதிரிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

⚡அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்படி இருவரும் இன்று (02.08.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

💥 இந்தாண்டில் இதுவரை மொத்தம் 100 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#திருநெல்வேலி_மாவட்ட_காவல்துறை
#குண்டர்_சட்டம்
#சட்டம்_ஒழுங்கு
#குற்றத்தடுப்பு
#காவல்துறை_நடவடிக்கை
#பொதுமக்கள்_பாதுகாப்பு
#100வது_குண்டர்_சட்டம்

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tirunelveli District Police:

Shortcuts

Share