04/07/2026
கொஞ்சம் வித்தியாசமான பயண அனுபவம்... வண்டிகளை பார்க்கும் போது ஏற்படும் உணர்வு.. சென்னை டூ நெல்லை...!!
தநா-01 நான் ஊருக்கு கிளம்பிட்டேன்
தநா-22 ச்சே இன்னும் தாம்பரமே தாண்டலயா...
தநா-32 இவ்வளோ நேரத்துல விழுப்புரம் தான் வந்துருக்கா...
தநா-45 திருச்சி... பாதி கடலை தாண்டிய உணர்வு ஏற்படும்...
தநா-59 மதுரை... இதுக்கு மேல நமக்கு தூக்கம் வராது... ஜன்னல் வழியா பரக்க பார்ப்போம்... மைல் கல்லில் இன்னும் எத்தனை கிமீ இருக்கு என்பதை பார்ப்போம்...
தநா-67 மதுரைக்கு அப்புறம் திருநெல்வேலி இருந்தா நல்லா இருக்குமேன்னு தோனும்
தநா-69 கோவில்பட்டி... நம்ம ஊர நெருங்கியாச்சு... இந்த நேரத்துல நண்பன் எவனுக்காவது போன் பண்ணி ஊருக்கு வருவதை சொல்லிவிடுவோம்...
தநா-72 இது வரைக்கும் எத்தனை வண்டி நம்பர பாத்துருந்தாலும் ஏற்படாத ஒரு உணர்வு இதை பார்க்கும் போது ஏற்படும்... எங்க ஊருக்கு வந்துட்டேன் என்ற உணர்வு தநா72 வண்டியை பார்த்ததும் ஏற்படும்...