Nellai Shri Krishna Trust

Nellai Shri Krishna Trust Service to the society
Regd No 7/2019/B4

11/05/2023

ராம நாம ரகசியம்
================

சிவபெருமான் ராமநாமம் சொல்கிறார் என்கிறது விஷ்ணுசகஸ்ரநாமம். சிவ வாக்கியர் ராம நாமம் மகிமை கூறிய ஒரே சித்த பெருமான்.

ராம நாமம் வார்த்தை அல்ல. அது சூரிய முடிச்சு எனும் மணிப்பூரக சக்கரத்தை தூண்டும் பீஜ மந்திரம். பீஜம் என்றால் விதை என பொருள். பீஜ மந்திரங்கள் ஆகர்சன சக்கரங்களை தூண்டக்கூடியவை. மணிபூரகம் என்ற ஆகர்சன சக்கரம் தூண்டப்பட்டால் உங்களை அதிர்ச்சி மற்றும் பய உணர்ச்சியிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரும். அதனால் தான் தனக்கு புத்திரசோகம் வரும் என்ற சாபத்தால் பயங்கொண்டிருந்த தசரனுக்கு, வசிஷ்டர் பலமாக யோசித்து தசரனின் முதல் புதல்வனுக்கு ராம் என்ற பீஜ மந்திரத்தையே பெயராக வைத்தார். அதனால்தான் அடிக்கடி தன் புதல்வனான ராமனின் பெயரை ராம் ராம் என அடிக்கடி கூறி புத்திரசோக பய உணர்வு போக்கி கொண்டார்.

ராம நாம மகிமை தெரிந்த மற்றொருவர் ஆஞ்சனேயர் ஆவார். தனக்குள் இருக்கும் சக்தியை ராம் என்ற பீஜ மந்திரம் கொண்டே அறிந்தார். ராம நாமம் ஒரு நபரின் பெயரல்ல...அது பீஜ மந்திரம்.

நன்றி

மணிகண்டன் பாரதிதாசன் சோதிடர்

Service to the society
Regd No 7/2019/B4

ஏழுகாளைகளை ஒரே நேரத்தில் தழுவி நப்பின்னையை மணந்த நம் கண்ணனின் வைபவம்......ஒன்றல்ல இரண்டல்ல ஏழு காளைகளை ஒருசேர அடக்கி,கண்...
26/01/2023

ஏழுகாளைகளை ஒரே நேரத்தில் தழுவி நப்பின்னையை மணந்த நம் கண்ணனின் வைபவம்......

ஒன்றல்ல இரண்டல்ல ஏழு காளைகளை ஒருசேர அடக்கி,கண்ணன் திருமணம் செய்த சரித்திரம்....

கண்ணனின் தாய் யசோதைக்கு கும்பன் என்ற சகோதரன் இருந்தான். அவன் மகளின் பெயர் நப்பின்னை. அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய நப்பின்னை பருவ வயதை அடைந்தாள்.

தன் அத்தை மகனான கண்ணனையே மணக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.முறைப் பையனான கண்ணனை முறைப்படி மணக்க ஆசைப்பட்டதில் தவறில்லையென்றாலும் ஒரு தடை இருந்தது. தடையா? அது என்ன? அந்தக் கும்பனே சிறந்த வீரன். அதுமட்டுமல்ல.அவன் ஏழு எருதுகளைச் (காளைகளை) செழிப்பாக வளர்த்து வந்தான். உண்டு மட்டுமே வளர்ந்து வந்ததால் அந்தக் காளைகள் முரட்டுக் காளைகளாக வளர்ந்தன. அந்த நாள்களில் மன்னர்கள் தன் மகளை, சிறந்த வீரனுக்கே மணமுடிக்க ஆசைப்படுவார்கள். மகளுக்குச் சுயம்வரம் என அறிவித்து அந்நாளில் அதற்காகப் போட்டிகள் வைப்பார்கள்.

அவ்வகையில் தன் ஏழு காளைகளை ஒரே நேரத்தில் அடக்கும் காளைக்கே தன் மகள் என அறிவித்தான் கும்பன்.
தன் சகோதரியின் மகன் என்ற காரணத்திற்காகவோ தன் மகள் விரும்புகிறாள் என்பதற்காகவோ கண்ணனுக்கு அவன் தன் மகளை மணம் முடித்து வைக்க விரும்பவில்லை. தன் அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை.

கேள்வியுற்ற இளைஞர்கள் நப்பின்னையை மணக்கும்
ஆசையில் காளைகளுடன் போரிட்டதில் உயிரை மாய்த்துக் கொண்டனர் சிலர். படுகாயமடைந்தனர் பலர்.

கண்ணன் காதிற்கும் செய்தி எட்டியது. நப்பின்னையின் மனத்தையும் அறிந்த அவன் போட்டிக்கு வந்தான். எல்லாரும் அவனைத் தடுத்தனர்.தாய் யசோதை அழுதே விட்டாள்.
அவள் கண்ணனை இன்னும் குழந்தையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் செய்த லீலைகளை எல்லாம் மறந்தவளாய் அவனைத் தடுத்தாள்.

நப்பின்னையோ தன்பொருட்டு கண்ணன் காளைகளால் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அதே நேரம் அவன் ஒருவேளை காளைகளை அடக்கிவிட்டால்? ஆசை யாரை விட்டது? கண்ணனின் கண்களைப் பார்த்தாள் அவ்வளவுதான்.

கண்ணன் தன்னை ஏழு உருவங்களாக மாற்றிக் கொண்டான். ஒரே சமயத்தில் அந்த ஏழு காளைகள் மீதும் பாய்ந்து
அவற்றுடன் உருண்டு புரண்டு அவற்றை அடக்கி அணைத்துக் கொண்டே நப்பின்னையை நோக்கினான். “இதுபோல் உன்னையும் அணைப்பேன்” என்பதுபோல் ஒரு காதல் பார்வையுடன்.

பிறகு கண்ணன்…. நப்பின்னை திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நப்பின்னைதான் நீளாதேவியின் அவதாரமாகப் பிறந்தவள்.

இந்த நிகழ்ச்சியைத்தான் நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் “எருதேழ் அடர்ந்த கள்ள மாயனே” என்று கண்ணனைப் புகழ்கிறார்.

திருமழிசை ஆழ்வாரோ தம் திருச்சந்த விருத்தத்தில் “ஆயனாகியாயர்மங்கை வேய தோள் விரும்பினாய்” என்கிறார்.

“நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!” என்கிறாள்
ஆண்டாள் தம் திருப்பாவையில். நந்தகோபனின் மகனாக வளர்ந்தவன் கண்ணன். நந்தகோபன் மருமகள் என்றால் கண்ணனின் மனைவி என்றுதானே பொருள்! அது மட்டுமா?

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்” என்று நப்பின்னையின் பெருமையைக் கூறித் துயில் எழுப்புகிறாள் ஆண்டாள் தம் திருப்பாவையில். கண்ணனின் பெருமைகளைக் கூறப் புகுந்த ஆண்டாள் ருக்மணியைப் பற்றியோ, சத்யபாமையைப் பற்றியோ கூறவில்லை,
நப்பின்னையைத்தான் குறிப்பிடுகிறாள்.

ஆயர்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியே ஆண்டாள் கூறுகிறாள். நந்தகோபன் மருமகள் என்று குறிப்பிடுகிறாள்.

பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை!ஜோதிடர் சொன்ன"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் ப...
08/01/2023

பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை!

ஜோதிடர் சொன்ன
"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை.

எதுவும் நடக்கலே..

இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –

பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

பரிகாரம் தொடர்பான குட்டி கதை.

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.

நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.

மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி,

வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து

“ஐயோ… அம்மா”

என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…

யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.

உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள்.

நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.

அறியாமல் நடந்த தவறு இது.

போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”

தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.

அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.

நான் தண்டிக்கப் படவேண்டியவன்.

பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.

நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.

இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.

அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்..”

என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?

மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது…

செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்….

“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர் கள் சரி தானே?

நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

“ஐய்யய்யோ
அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே

எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான்…

“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.

அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.

நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.

தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மை யாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.

அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.

ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.

நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.

மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…

எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா?

இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.

இந்த கதை கூறும் நீதி.

அந்த மன்னன் தான் நாம்.

நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.

அந்த விறகுவெட்டி தான் இறைவன்.

இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.

பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்,

ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.

ஆனால்,

இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,

ஆண்டவா,

மனதுக்குள் வேறு எந்த சிந்தனையு மின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,

அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இந்த ஒரு முறை மன்னித்து விடு !

என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.

ஆண்டவன் முன் நீங்கள் கண்
மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான்.
கருணை புரிவான். நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.

இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.

ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம்,

அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம்

என்பது இங்கே மிகவும் முக்கியம்.

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…

எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு பரிகாரம் என்பது கிடையாது.

" ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம்.

தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற,

சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி,

ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார்.
வந்தவர்களுக்கோ வாழ்த்தி அனுப்புவார் என எண்ணி வந்தோம், இவரோ பாகற்காயை தருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என எண்ணி வாங்கிக் கொண்டு சென்றனர்.

புண்ணிய நீராடி சில நாட்கள் கழித்து சாதுவிடம் வந்து தாங்கள் கொடுத்த பாகற்காயை எல்லா புண்ணிய நதிகளில் நனைத்து எடுத்து வந்துள்ளோம்,

எங்களை போன்றே இந்த பாகற்காயும் மிகவும் புண்ணியம் படைத்தது என கூறினர்

சாதுவோ தனது சீடரை அழைத்து இந்த காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வா என கூற,

அந்த பாகற்காய் துண்டுகளில் ஒன்றை சாது எடுத்துக் கொள்ள மீதியை மற்றவர்களிடம் நீட்ட அவர்களும் எடுத்து வாயில் போட்ட வேகத்தில் ஒரே கசப்பு என தரையில் துப்பினர்.


அப்போது சாது, புண்ணிய நதிகளில் நீராடிய பாகற்காயின் தன்மை எப்படி
மாறவில்லையோ
அது போன்றது தான் உங்கள் புனித நீராடலும் "

மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பாகற்காயை போன்றே தன்மை
மாறாது.

அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு பாவத்திற்கு பிராயச்சித்த மாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்த கால முன்ஜென்ம தவறுக்கு வருந்தி கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில் தான் ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.

மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்…
உடனடி பலன் நிச்சயம்

02/01/2023

ஓம் நமோ நாராயணாயா நமஹ

*சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்?*

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வத்தைத் திரும்பக் கூறினான். அது முடிந்ததும் இப்போது விஷ்ணு என்று மெல்லச் சொல்கையில் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி அவனுக்கு அசதியாக இருக்கும். மறுநாள் பார்க்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே நல்ல வேத வித்துக்களாக வளர்ந்தனர். இந்தப் பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம், புகழ், மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நல்ல வேத வித்துக்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எண்ணினார். அந்த பிராமணர் அதிர்ஷ்டவசமாக வசிஷ்ட முனிவரை சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூற வசிஷ்டர், உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் புரிந்தததினால்தான். மனதாலும், உடலாலும், ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாஸு தேவனை மட்டுமே இது குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தேவையில்லை. பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம், புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது. வேத வியாசர் மேற்கூறிய கதையைத் தன் கொள்ளுத்தாத்தாவான வசிஷ்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதை மனதில் கொண்டே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார்.


சர்வம் விஷ்ணு மயம்

திருநெல்வேலி நகர் ஸ்ரீ லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து முதல் நாள்  23-12-2022 முதல் 11-0...
14/12/2022

திருநெல்வேலி நகர் ஸ்ரீ லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து முதல் நாள் 23-12-2022 முதல் 11-01-2023 வரை தினமும் மாலை 5.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் அத்யயன காலம் நடைபெறுகின்றது.

மற்றும் மார்கழி மாதம்
முதல் நாள் முதல் தை திங்கள் முதல் நாள் வரை தினமும் காலை 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாடல்கள் பாடப்படும் பிறகு தீர்த்தம் கோஷ்டி நடைபெறும்.அனைவரும் வருக நரசிம்மன்அருள் பெறுக.

பிரபந்தம் சேவா காலத்தில் ததீயாராதனை (அன்னதானம்) நடைபெறுகிறது பொருளுதவி செய்ய விரும்பும் பக்தர்கள் கீழ்க்கண்ட

சிட்டி யூனியன்வங்கி கணக்கு எண்

500101012636632
IFSC CIUB0000048

SHRI KRISHNA CHARITABLE TRUST
TIRUNELVELI

என்ற வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கவும்

நன்கொடைகள் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும்

ஸ்ரீ கிருஷ்ணா சாரிட்டபிள் டிரஸ்ட்
திருநெல்வேலி நகர்

 #நினைவுகள் என்றும் மறக்காது..
23/10/2022

#நினைவுகள் என்றும் மறக்காது..

அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும்...
02/05/2022

அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும் அரண்மனையில் இருந்ததால், சீதைக்கு மாமியார்கள் பயம். அதனால், ராமனிடம் கூட பேச மாட்டாள். ஆனால், காட்டிற்குச் சென்றதும், ராமனிடம் கலகலப்பாகப் பேசி சிரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டே போட்டியாக மாறியது. யார் முதலில் கோதாவரி நதியில் நீந்தி கரையை தொடுகிறார்கள் என்பது தான் போட்டி. நடுவராக லட்சுமணன், நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டார். ராமன் கணப்பொழுதில் கரையை தொட்டுவிட வந்து விட்டார்.
இருந்தாலும், தொடுவதற்குள் சீதையைத் திரும்பிப் பார்த்தார். சீதை ஆரம்பித்த இடத்திலேயே நீந்திக் கொண்டிருந்தாள். ராமன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மூச்சடக்கி தண்ணீருக்குள் தலையை மறைத்துக் கொண்டார். சீதையும் அக்கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கரைசேர்ந்தாள்.
லட்சுமணனிடம், ""பார்த்தாயா? உன் அண்ணனை! இது தான் வசிஷ்டரிடம் கற்ற லட்சணமா?'' என்று கேலி செய்தாள். ஆனால்,
ராமனுக்கோ மனைவியிடம் தோற்றுப் போனதில் அவ்வளவு சந்தோஷம். இந்த விஷயத்தை சீதையைப் பிரிந்த நேரத்தில் ராமன் எண்ணிப் பார்க்கிறான். அதாவது, பிராட்டி சம்பந்தம் இல்லாமல் அவன் இல்லை. ராமபட்டாபிஷேக நேரத்திலும், வசிஷ்டர் அதை சாதாரண ராஜ பட்டாபிஷேகமாகக் காணவில்லை.
"கல்யாண குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்' என்று சொன்னார். அதனால் தான், சீதையை ராமனின் அருகில் இருக்கச் செய்தார். ராமனுக்கும் அப்படித்தான்..அயோத்தி என்பது அவனுக்கு சிறிய வஸ்து. பக்கத்தில் சீதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் குணத்தையே காட்டுகிறான்.
வாலி வதம் விஷயத்திலும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். ராமபாணம் பட்டு வாலி அடிபட்டு விழுந்ததும், ""ராமா...இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ராம என்ற மந்திரமே உயர்ந்தது என்கிறார்கள். இத்தனை பெருமை பெற்ற நீ, என்னை மறைந்திருந்து கொன்றாய். இதன்மூலம், நீ என்னைக் கொன்றதாக நினைக்காதே. இக்ஷ்வாகு குலத்தின் பெருமையைக் கொன்றிருக்கிறாய். சக்கரவர்த்தி தசரதரின் பெருமையைக் கொன்றிருக்கிறாய்,'' என்று கடுமையாகச் சொன்னான்.
ராமன் அவனுக்கு பல சமாதானங்களைச் சொன்னார். ஆனால், வாலி அவற்றை ஏற்க மறுத்துவிட்டான்.
""நீ என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்கமாட்டேன். ஆனால், நீ இவ்வாறு செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியும். சீதையைப் பிரிந்த பிறகு, நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. ஆவியாய் வந்த சீதையை (உன் உயிர் போன்ற சீதையை) அமிழ்தம் போன்ற சீதையை, ஜனகன் பெற்ற அன்னமாகிய சீதையை நீ பிரிந்த பிறகு, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்! என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தாயோ?'' என்று பதில் சொல்கிறான்.

18/04/2022
06/01/2022

திருநெல்வேலி நகர் ஸ்ரீ லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து முதல் நாள் 03-01-2022 முதல் 22-01-2022 வரை தினமும் மாலை 5.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் அத்யயன காலம் நடைபெறுகின்றது.

மற்றும் மார்கழி மாதம்
முதல் நாள் முதல் தை திங்கள் முதல் நாள் வரை தினமும் காலை 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாடல்கள் பாடப்படும் பிறகு தீர்த்தம் கோஷ்டி நடைபெறும்.அனைவரும் வருக நரசிம்மன்அருள் பெறுக.

பிரபந்தம் சேவா காலத்தில் ததீயாராதனை (அன்னதானம்) நடைபெறுகிறது பொருளுதவி செய்ய விரும்பும் பக்தர்கள் கீழ்க்கண்ட

சிட்டி யூனியன்வங்கி கணக்கு எண்

500101012636632
IFSC CIUB0000048

SHRI KRISHNA CHARITABLE TRUST
TIRUNELVELI

என்ற வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கவும்

நன்கொடைகள் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும்

ஸ்ரீ கிருஷ்ணா சாரிட்டபிள் டிரஸ்ட்
திருநெல்வேலி நகர்

 #குருக்ஷேத்திரத்தில், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாட்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட...
25/08/2021

#குருக்ஷேத்திரத்தில், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாட்கள் முடிந்துவிட்டன.

"ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். "தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்"என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார்.

அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. `பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.

பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் #கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தார்.

பாஞ்சாலியைப் பார்த்து, "சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றார். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தார். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறார் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, "சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினார். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.

பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், "பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றார்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், " #தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.

பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். "போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, "தீர்க்க சுமங்கலியாக இரு" என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், "அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தார். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது எல்லாமே புரிந்துவிட்டது.

"வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.

"ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றார் மாய கண்ணன்.

கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். "கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

"தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா" என்றார் கண்ணன்.
உடனை பீஷ்மர் குறுக்கிட்டு, "மாயவனே,! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று
நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசி மொழியாகச் சொல்லிவிட்டேன்.
நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’ என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் (பிதாமகர் பீஷ்மர்) போரில் அடிபட்டு அம்புப் படுக்கையில் விழுந்து மாண்டதை நம் பாரதம் சொல்லுமே..!

#கண்ணன் அவன்
#மாய_கண்ணன்..!
#சர்வம்_கிருஷ்ணார்ப்பணம்..!

 #ஆகஸ்ட்_1  #நண்பர்கள்_தினம்  #கிருஷ்ண_பக்திசுதாமா என்பது குசேலரின் இயற்பெயர். குசேலம் என்றால், கிழிந்த ஆடை என்று பொருள்...
01/08/2021

#ஆகஸ்ட்_1 #நண்பர்கள்_தினம் #கிருஷ்ண_பக்தி

சுதாமா என்பது குசேலரின் இயற்பெயர். குசேலம் என்றால், கிழிந்த ஆடை என்று பொருள்.

கிழிந்த ஆடையை உடுத்தியவர் என்ற பொருளில் சுதாமாவை, (கேலியாக) குசேலர் என்றனர். கண்ணனும் சுதாமாவும் சாந்தீப முனிவரின் குருகுலத்தில் தங்கி, கல்வி கற்றவர்கள்.

ஒருகாலகட்டத்தில் குருகுலப் படிப்பு முடிந்தவுடன் கண்ணன் துவாரகைக்குச் சென்றுவிட்டார்.

சுதாமன் தமது குலவழக்கப் படி பணிகளைச் செய்து வந்தார். அவருக்கும் சுசீலை என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்வாழ்க்கையில் பல பிள்ளைகள் பிறந்தனர்.

குடும்பம் பெரிதானதால் அதற்கேற்ற வருவாய் இல்லாமல் சுதாமன் மிகவும் சிரமப்பட்டார்.

குடும்பத்தில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. பல நாட்கள் பட்டினியாக இருக்க நேர்ந்ததால் குசேலரும் அவரது மனைவியும் மெலிந்து போனார்கள்.

பிள்ளைகளும் வாடிப்போயினர். இந்த நிலையில் ஒருநாள் அவரது மனைவி, "பால்ய பருவத்தில் உங்களது நண்பராக இருந்த கிருஷ்ணன் இப்போது துவாரகைக்கு அரசராக உள்ளார்.

அவரிடம் நேரில் சென்று நமது குடும்ப நிலையை எடுத்துக்கூறி ஏதாவது உதவியைப் பெற்றுவாருங்கள்'' என்று கணவனிடம் வேண்டினாள்.

இதைக்கேட்ட குசேலர் துவாரகைக்குச் செல்ல சம்மதித்தார்.

தன்னுடைய குடும்ப வறுமை நீங்கும் என்பதைவிட, நீண்ட நாட்களுக்குப்பிறகு தனது ஆருயிர் நண்பனை நேரில் காணும் ஆவலே அவர் சம்மதித்ததற்குக் காரணம். இதுதான் குசேலரின் உண்மையான நட்புக்கு எடுத்துக்காட்டாகும்.

ஒரு அரசரைப் பார்க்கச் செல்லும்போது வெறும் கையோடு செல்லாமல் ஏதாவது கொண்டு செல்லவேண்டும் என்னும் மரபை அறிந்த குசேலர்,

"கிருஷ்ணனுக்குக் கொடுக்க வீட்டில் ஏதாவது உள்ளதா?'' என்று கேட்டார். ஆனால் எதுவுமில்லை.

உடனடியாக அவரது மனைவி அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று கொஞ்சம் அவலை சேகரித்து வந்து ஒரு பழைய துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி கணவனிடம் கொடுத்தாள்.

பகவான் கிருஷ்ணனை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற மனமகிழ்ச்சியுடன் குசேலர் துவாரகை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அவர் துவாரகையை அடைந்தபோது அந்த நகரின் செழிப்பையும்- குறிப்பாக கிருஷ்ணருடைய அரண்மனையின் செல்வச் செழிப்பையும் கண்டு பிரமித்தார்.

தேவலோகம் போன்று காட்சியளித்த அந்த அரண்மனையின் உள்ளே, அந்தப்புரத்தில் தனது மனைவி ருக்மணியுடன் ஊஞ்சலில் வீற்றிருந்த கிருஷ்ணருக்கு குசேலர் வந்திருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்டதும் கண்ணன் குசேலரை வரவேற்க துள்ளிக் குதித்து அரண்மனையின் பிரதான வாயிலுக்கு ஓடிவந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது நண்பனைப் பார்த்தவுடன் ஆரத்தழுவிக்கொண்டார். அன்பின் மிகுதியால் இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் நலம் விசாரித்துக்கொண்டனர்.

பின்னர் குசேலரை உள்ளே அழைத்துச் சென்ற கண்ணன் அவரை ஒரு இருக்கையில் அமர்த்தி, தன் மனைவி ருக்மணியுடன் பாதபூஜை செய்து முறைப்படி வரவேற்றார்.

பின்னர் பலவிதமான பண்டங்கள் கொண்ட உயர்ந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தார். பணியாட்களைக்கொண்டு பரிமாறாமல், கிருஷ்ணனும் ருக்மணியுமே பரிமாறினர்.

பரம ஏழையான தனக்கு கிருஷ்ணன் காட்டிய தூய அன்பையும் மரியாதையையும் கண்டு திக்குமுக்காடிய குசேலர், மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டார்.

விருந்துக்குப் பின்னர், தன்னைக்காண நீண்ட தூரம் நடந்தே வந்ததால் களைப்புடன் இருந்த குசேலரை அழகிய கட்டிலில் அமர்த்தி,

அவரது கால்களை கிருஷ்ணர் தமது கைகளால் பிடித்துவிட்டார். குருகுல வாழ்க்கை சம்பவங்களை இருவரும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், கிருஷ்ணன் தன் நண்பனிடம்,

"எனக்காக என்ன கொண்டு வந்தாய்?''

என உரிமையுடன் கேட்டார். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் வடிவான ருக்மணியுடன் வாழும் கிருஷ்ணனுக்கு வெறும் அவலை எப்படிக் கொடுப்பதென்று குசேலர் தயங்கினார்.

அதையுணர்ந்த கிருஷ்ணன் குசேலரின் இடுப்பில் தொங்கிய சிறிய துணி மூட்டையைத் தானே எடுத்து, அதிலிருந்த அவலில் ஒருபிடி எடுத்து மகிழ்ச்சியுடன் உண்டார்.

அன்பின் பெருக்குடன் பக்தர்கள் கொடுக்கும் சாதாரணமான பொருளும் இறைவனுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும் என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் காட்டுகிறது.

அன்றிரவு குசேலரை அந்தப்புரத்திலிருக்கும் அறையில் தங்க வைத்தார் கிருஷ்ணன்.

தான் துவாரகைக்கு வந்த நோக்கத்தை மறந்து, கிருஷ்ணனின் அன்பையே நினைத்த வண்ணம் அன்றைய இரவைக் கழித்தார் குசேலர்.

மறுநாள் கிருஷ்ணனிடம் விடைபெற்றுச் செல்லும்போதும் கூட மனைவி சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனைக் கண்ட மனநிறைவுடன் ஊருக்குத் திரும்பினார்.

நடந்தே தன் ஊரை அடைந்த குசேலருக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனது குடிசை இருந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகை இருப்பதைக் கண்டு வியந்தார்.

சில பணியாட்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். மாளிகைக்குள் அவரது மனைவி,

பிள்ளைகளெல்லாம் புதிய பட்டாடை அணிந்து, பலவிதமான அணிகலன்கள் பூண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தான் ஏதும் கேட்காமலேயே தனது நண்பனான இறைவன் தனக்கு இத்தகைய பேருதவி செய்ததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவரது மாளிகையில் பொன்னும் பொருளும் குவிந்திருந்தாலும், குசேலர் மட்டும் ஆடம்பரத்தை நாடாமல் செல்வப்பற்றற்று பழைய நிலையிலே இருந்து,

எப்போதும் கிருஷ்ணனின் நினைவுடனே வாழ்ந்தார். தூய நட்புக்கு இலக்கணமாக கிருஷ்ணனும் குசேலரும் விளங்கினர்.

குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர் ..
அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் ,

அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .

சுதாமனும் கண்ணனும் சந்தித்த தினமே நமது நண்பர்கள் தினமாக கொள்ளலாம்.....

Address

Tirunelveli
627006

Opening Hours

Wednesday 5:30pm - 8:29pm
Thursday 5:30pm - 8:30pm
Saturday 5:30pm - 8:30pm

Telephone

+917010392942

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Shri Krishna Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nellai Shri Krishna Trust:

Share

Category