Palamadai

Palamadai WELCOME TO ALL

22/09/2022
16/08/2022

நமது #பாலாமடை #தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் தொடர் மரணங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.

அரசு மணல் குவாரி நடத்துவதற்க்காக ஆற்றின் நடுவே ஏற்ப்படுத்திய செயற்க்கை சாலைகள் காரணமாக என்னற்ற மரனங்கள் நிகழ்ந்துள்ளன. வருமானம் வரும் போது சுயலாபத்திற்க்காக சாலை அமைத்த அரசு அதன் வேலை முடிந்தவுடன் பின்வரும் ஆபத்துகளை உணராமல் அந்த சாலைகளை அப்படியே விட்டுவிட்டது.
குறிப்பிட்ட இடத்தில் நீர் செயற்கை கரையின் மீது மோதி திரும்புவதால் சுழல் போல் நீர் சுழன்று அந்த பகுதி ஆழமாக மாறியிருக்கலாம். இனி ஒரு மரனம் நிகழாமல் தவிர்க்க ஆற்றின் நீரோட்டத்தை நேராக செல்லும் வகையில் ஒழுங்கு படுத்த வேண்டும். ஏற்கனவே அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள பாதையை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2007, 2008 காலகட்டத்தில் ஆற்றில் மனல் அள்ள செயற்கை பாதைகள் உருவாக்க பட்டது என நினைக்கின்றேன். அதற்கு பிறகு ஏற்பட்ட அத்தனை மரணங்களுக்கும் அரசும் நாமும் ஒரு வகையில் காரணம்தான். அந்த செயற்கை பாதைகளால்தான் ஒவ்வொரு மரணமும் நிகழ்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அன்று அதனால் நாம் ஒவ்வொருவரும் இந்த ஊரும் பயன் பெற்றது. அதே போல் அந்த செயற்கை பாதைகளை நீக்கி நீரோட்டம் நேரடியாக செல்ல வழி வகை செய்தால் ஆற்றின் எல்லா பகுதிகளும் சமமாக மாறலாம் மாற வாய்ப்புகள் உள்ளன.

ஊர் பெரியவர்கள் கலுந்து ஆலோசித்து இனி ஓர் உயிர் போகாத வன்னம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக!
03/04/2022

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக!

அனைவரும் வருக இறை அருள் பெறுக
15/03/2022

அனைவரும் வருக இறை அருள் பெறுக

பாலாமடை மக்களின் நீண்டநாள் கோரிக்கை கனவு நிறைவேற உள்ளது. பஞ்சாயத்து தலைவிக்கு நன்றிகள் தங்கள் பணி தொடரட்டும்.
07/02/2022

பாலாமடை மக்களின் நீண்டநாள் கோரிக்கை கனவு நிறைவேற உள்ளது. பஞ்சாயத்து தலைவிக்கு நன்றிகள் தங்கள் பணி தொடரட்டும்.

05/02/2022

வீடுகளில் கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் இன்னும் முறையாக தண்ணீர் வரவில்லை. ஏற்க்கனவே தெருக்களில் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடு தெரு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பஞ்சாயத்து கண்டுகொள்வதில்லை. இதில் குடிநீர் பைப்புகளை பதிப்பதெற்கென தோண்டப்பட்ட குழிகள் வேறு இன்னும் மூடப்படாமல் உள்ளது. பொது மக்கள் சுகாதாரமாக தெருக்களை வைத்துகொள்வது இல்லை அதனை முறைப்படுத்த வேண்டிய பஞ்சாயத்து கண்டுகொள்வதே இல்லை. சாக்கடைகள் தேங்கி துற்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் பரவுகிறது. பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னர் என்ன நிலைமையோ அதனை விட மோசமான நிலைமையே இன்னும் தொடர்கிறது.

முக்கியமாக குடிநீர் பிரச்சனை இன்னும் தீர்க்கபடாமலேயே உள்ளது. ஆற்று நீர் வராமல் அந்த பைப்புகளில் தண்ணீர் உவர்ப்பு தன்மையுடன் நீர் வருவதாக புகார்கள் எழுகின்றன. மக்கள் குறைகளை சொன்னால் அவர்களுக்கு அக்மார்க் முத்திரை குத்தி எதிராளி போல் சித்தரிப்பதால் யாரும் பிரச்சனைகளை கூற முன்வருவது இல்லை. வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் மக்களின் வேதனைகள் வெளியே வரும் போது அதன் தாக்கம் பெரிதாக இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு நிறைவேற்றப்பட்டாலும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முயற்ச்சி செய்யுமாறு நான் உங்களில் ஒருவனாய் பாலாமடை பஞ்சாயத்தில் ஒருவனாய் கேட்டு கொள்கிறேன்.

பாலாமடை பஞ்சாயத்து மக்கள் பாலாமடை பஞ்சாயத்திடம் எதிர்பார்க்கும் கோரிக்கைகள்.

1.வீடு தோறும் முறையான குடிநீர்
2. தெரு அனைத்திலும் குப்பை தொட்டி.
3. வாரம் தோறும் கொசு மருந்து தெளித்தல்.
4. மாதம் தோறும் கழிவுநீர் கால்வாய்களை தூர்விறுதல்.
5. தெருக்களை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
6. பஞ்சாயத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் மது விற்றலை தடுத்தல்.
7. தெருக்களை சீர்படுத்தி பராமரித்தல்.
8. அரசு கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துதல்.
9. நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் ஏற்க்கனவே உள்ள மரங்களை பராமரித்தல்.
10. அரசு சுவர்களில் நல்ல ஓவியங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள Map திருக்குறள் போன்ற நல்ல கருத்துக்களை வரைதல்.

மேற்கண்டவற்றில் எல்லாமே மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பஞ்சாயத்திற்க்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் மட்டுமே இதனை தாண்டி செய்ய வேண்டிய செயல்கள் உள்ளன அதனை கற்றரிந்த பெரியவர்கள் உதவியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

13/10/2021

2021 ஊரக உள்ளாட்சி தேர்தல் பாலாமடை ஊராட்சி வெற்றி வேட்பாளர்கள்♥

பாலாமடை பஞ்சாயத்து தலைவி : திருமதி இ. சுப்புலெட்சுமி

1 வது வார்டு உறுப்பினர் : திருமதி சு கலா

2 வது வார்டு உறுப்பினர் : திருமதி சு அனிதா

3 வது வார்டு உறுப்பினர் : திரு ச பலவேசம்

4 வது வார்டு உறுப்பினர் : திருமதி க சண்முகத்தாய்

5 வது வார்டு உறுப்பினர் : திருமதி ச சீதா

6 வது வார்டு உறுப்பினர் : திரு ச ஆறுமுகம்

7 வது வார்டு உறுப்பினர் : திருமதி ர இசக்கியம்மாள்

8 வது வார்டு உறுப்பினர் : திருமதி எஸ் துரைராணி

9 வது வார்டு உறுப்பினர் : திருமதி பொ சாந்தி

ஆழ்ந்த இரங்கல்😭😭😭 #பாலாமடை_ஊர்பொதுமக்கள்
19/06/2021

ஆழ்ந்த இரங்கல்😭😭😭
#பாலாமடை_ஊர்பொதுமக்கள்

Address

பாலாமடை
Tirunelveli
627359

Telephone

+916381564873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palamadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share