Tirupattur District Community

Tirupattur District Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tirupattur District Community, Public & Government Service, Tirupattur.

இன்று 01.06.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்.
01/06/2025

இன்று 01.06.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்.

*வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 17 வயது சிறுவன் கைது. 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.*திருப்பத்தூர் ...
01/06/2025

*வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 17 வயது சிறுவன் கைது. 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.*

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவனை
காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன் பெயர் முஜம்மில்(17) என்பதும், ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியை சேர்ந்தவன் என்று தெரிய வந்தது.மேலும் அவன் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து அவனிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நீதமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரது கூட்டாளியான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று 31.05.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்.
31/05/2025

இன்று 31.05.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்.

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வாணியம்...
24/03/2024

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி,மார்ச்.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சல்மான் கான்.இவர் பெங்களூரிலிருந்து 60 புடவைகளை வாங்கிக்கொண்டு ஆம்பூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் கூட்டு சாலையில்
புவனேஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர்
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இல்லாமல் 60 புடவைகள் காரில் எடுத்து வந்தது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புடவைகளை தேர்தல் பறக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 :இனி உதய் விரைவு (Train No. 22665 / 22666) வண்டி  தினசரி திருப்பத்தூரில் இருந்து பெங்களூர் செல்ல காலை 9:40 க்கு நின்று ...
24/03/2024

:

இனி உதய் விரைவு (Train No. 22665 / 22666) வண்டி தினசரி திருப்பத்தூரில் இருந்து பெங்களூர் செல்ல காலை 9:40 க்கு நின்று செல்லும்!!!

Uday Express என்பது கோயம்பத்தூர் - பெங்களூர் இடையே திருப்பத்தூர் வழியாக செல்லும் காலை 09:40 க்கு திருப்பத்தூருக்கு வரும் மதியம் 12:30 க்கு பெங்களூர் சென்று சேரும்!

மீண்டும் பெங்களூரில் இருந்து மதியம் 02:15 கிளம்பும் உதய் விரைவு திருப்பத்தூருக்கு மாலை 04:15 வந்தடையும்
கோயம்புத்தூருக்கு இரவு 09:00 மணிக்கு சென்று அடையும்...

பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது 06 மாதத்திற்கு சோதனை நிறுத்தம் என்பதால் நாம் அனைவரும் பயன் படுத்திக் கொண்டு இதனை நிரந்தரமாக நிற்க ஆவன செய்ய வேண்டும்!!!

இந்த தகவலை‌ திருப்பத்தூர் சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களும் forward செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

05/11/2022
 #எப்பொழுதுமுழுமையாக திருப்பத்தூர் மாவட்டமாக மாற்றப்பட்டடு நான்கு வருடம் ஆகியும்,  இன்றும் வேலூர் மாவட்டமாக பெயர்!!திருப...
14/10/2022

#எப்பொழுதுமுழுமையாக

திருப்பத்தூர் மாவட்டமாக மாற்றப்பட்டடு நான்கு வருடம் ஆகியும், இன்றும் வேலூர் மாவட்டமாக பெயர்!!

திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை!!!!

திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
28/06/2022

திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது

22/02/2022

திருப்பத்தூர் நகராட்சி மொத்தம் 36 வார்டுகளில்...

திமுக-22
அதிமுக-5
பாமக -1
விசிக-1
சுயேட்சை-5
மதிமுக -1
காங்கிரஸ்-1

 #நகராட்சி_பூங்காவா_நோய்_உற்பத்தி_தொழிற்சாலையா?70 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு பூங்காவ...
17/12/2021

#நகராட்சி_பூங்காவா_நோய்_உற்பத்தி_தொழிற்சாலையா?

70 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு பூங்காவை உருவாக்கி பராமரித்த வாணியம்பாடி நகராட்சியில்தான் இந்த அவலநிலை...

சமீபத்தில் பெய்த மழையால் பல வருடங்களாக பராமரிப்பு இன்றி பாழடைந்து பூட்டி வைக்கப்பட்ட நகராட்சி மகளிர் பூங்காவில் தண்ணீர் தேங்கி புழுக்கள் உருவாகி குப்பைகள் மட்கி துர்நாற்றம் வீசுகிறது...

மட்டுமல்லாமல் நிறைய பாம்புகளும் சுற்றுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மட்டும் அல்லாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சுழலும் உள்ளது.

வீடுகளில் உரல், பக்கெட்களில் ஓரிரு புழுக்கள் இருந்தாலும் பதறி வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து அகற்றி டெங்கு நோய்க்கு எதிராக போராடும் நிர்வாகம் லட்சக்கணக்கான புழுக்கள் இருக்கும் பூங்காவை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்??

சாமானியனுக்கு ஒரு சட்டம் நகராட்சி நிர்வகத்துக்கு ஒரு சட்டமா இருக்கிறது???

© வடிவேல் சுப்பிரமணியம்

@வடிவேல்சுப்பிரமணியம்

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால்  கிராம மக்கள் பீதி.வாணியம்பாடி டிஸ் 03 : திருப்பத்தூர...
03/12/2021

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பீதி.

வாணியம்பாடி டிஸ் 03 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 29 ம் தேதி 3.5 ரிக்டர் அளவு நிலஅதிர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் ஆம்பூர் அடுத்த வெங்கேட சமுத்திரம், அத்திமாகுலப்பள்ளி,
ராலகொத்தூர், வேலூர் மாவட்டம்
பேரணாம்பட்டு அடுத்த டி.டி மோட்டூர் கமலாபுரம், சிந்தகணவாய் ஆகிய மலைகிராம பகுதியில் சத்ததுடன் நில அதிர்வுகள் பகுதி மக்கள் உணரப்பட்டுள்ளனர்.

மேலும் அத்திமாகுலப்பள்ளி பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று தினங்கள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் அதே போன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

cc : vnb news

Address

Tirupattur
635853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupattur District Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share