Sub Collector Tirupattur

Sub Collector Tirupattur page of the Sub Collector and SDM, Tirupattur, Vellore District, Tamil Nadu

19.08.2017 4 pmஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் பகுதியில் உள்ள சுட்டகுண்டா மலைகிராமத்தில் இருளர் பழங்குடியினர் மக்களுடன் ஒர...
19/08/2017

19.08.2017 4 pm

ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் பகுதியில் உள்ள சுட்டகுண்டா மலைகிராமத்தில் இருளர் பழங்குடியினர் மக்களுடன் ஒரு கலந்துரையாடல். அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மீதான பற்றுதல், இயற்கையோடு இயைந்த வாழ்வு முறை, தமது இளம் தலைமுறை படித்து முன்னேற வேண்டும் என்ற வேட்கை, அதை பற்றிய முழுமையான புரிதலின்மையால் ஏற்பாடும் இயலாமை என பலதரப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்களுடனான உரையாடல் அமைந்திருந்தது இந்த நிகழ்வு நாம் மேலும் உத்வேகத்துடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அவர்களுக்கு அரசு வீடுகள், குடும்ப அட்டைகள், பழங்குடியினர் சாதி சான்றுகள் ஆகியன விரைவில் வழங்கப்பட உள்ளன.

An interaction with the people of an Irula tribal hamlet of Arangaldurgam village, Ambur Taluk. Their attachment to their traditional roots, life style, their dreams about the life of their children, the inability expressed by them due to lack of adequate knowledge on what to do for their children's future education, etc., made our team feel the need for even more active engagement with them. We are planning to give them PMAY houses, PDS cards to the left out, community certificates, etc. Fortunately, they have a 24 hours PHC and schooling available at an accesible distance.

இன்று அதிகாலையில் ஆம்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 49...
19/08/2017

இன்று அதிகாலையில் ஆம்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 49 நபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் காலை 5.30 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இவர்களில் 6 நபர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வண்டி மூலம் வைக்கப்பட்டனர். 3 நபர்களுக்கு உள் நோயாளியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 40 நபர்கள் சிகிச்சைக்குப் பின்னர் அனுப்பப்பட்டனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர் திரு. இந்திரானந்த் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளிப்பதில் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

71வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், தூர்வாரப்படும் திருப்பத்தூர் பெரிய ஏரியில் மரம் நடும் விழா மற்றும் மாடப்பள்ளி கிராம...
15/08/2017

71வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், தூர்வாரப்படும் திருப்பத்தூர் பெரிய ஏரியில் மரம் நடும் விழா மற்றும் மாடப்பள்ளி கிராமத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்.

71st Independence Day Celebrations, Inauguration of plantation drive at Tirupattur Big Tank, Special Gram Sabha Madapalli Village

06/08/2017

நமது கழிப்பறை நமது கெளரவம்

மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு . சி. அ. இராமன் இ.ஆ .ப அவர்கள் மற்றும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் ஆகியோர் தி...
06/08/2017

மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு . சி. அ. இராமன் இ.ஆ .ப அவர்கள் மற்றும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் ஆகியோர் திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு நடைபெறும் மையங்களில் நேரடி ஆய்வு செய்தனர்.

The District Collector Vellore, Thiru.Raman IAS and Sub Collector Tirupattur Dr. Karthikeyan IAS inspected TNPSC Group II Examination Centres at Tirupattur.

நமது வாக்கு நமது உரிமை. வாக்காளராகப் பதிவு செய்ய வாருங்கள்... சிறப்பு முகாம் நாள் 09.07. 2017ஆன்லைன் : www.elections.tn....
08/07/2017

நமது வாக்கு நமது உரிமை. வாக்காளராகப் பதிவு செய்ய வாருங்கள்... சிறப்பு முகாம் நாள் 09.07. 2017

ஆன்லைன் : www.elections.tn.gov.in
மொபைல் செயலி : TN Elections (Android & iOS)
நேராக படிவம் மூலம் விண்ணப்பிக்க : உங்கள் வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்லவும்

Come out and Register...Special drive to enroll new voters on 09.07.2017

Online - www.elections.tn.gov.in
Mobile app - TN Elections (Android & iOS)
Manual forms - at all election booths near your locality

28/06/2017

Registration Made Simple

Get... Set...Go...!Preparatory works in full swing for the Special Drive 2017 announced by TNElectionsCEO. Training prog...
27/06/2017

Get... Set...Go...!

Preparatory works in full swing for the Special Drive 2017 announced by TNElectionsCEO.

Training programs for Campus Ambassadors, Booth Level Officers and Supervisors at 47 Ambur, 48 Vaniyambadi, 49 Jolarpet and 50 Tirupattur Assembly Constituencies.

27/06/2017

SPECIAL DRIVE 2017

அனைவருக்கும் உளம் கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்!May the Spirit of Ramadan stay in our hearts and illuminate our ...
25/06/2017

அனைவருக்கும் உளம் கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்!

May the Spirit of Ramadan stay in our hearts and illuminate our soul from within.

Happy Ramadan!

சிம்மணப்புதூர் ஏரி, வெங்களாபுரம் ஏரி, புத்தகரம் ஏரி, தெக்குப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரி மற்றும் வெங்கடசமுத்திரம் ஏரி ஆகி...
24/06/2017

சிம்மணப்புதூர் ஏரி, வெங்களாபுரம் ஏரி, புத்தகரம் ஏரி, தெக்குப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரி மற்றும் வெங்கடசமுத்திரம் ஏரி ஆகிய இடங்களில் வேளாண் பணிக்காக வண்டல் மண் எடுக்கும் பணிகள் பார்வையிடப்பட்டு விவசாயிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. தங்கள் ஊரில் உள்ள பிற விவசாயிகளுக்கும் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வரும் நாட்களிலும் பணிகள் தொடரும்.

உங்களுக்குத் தெரிந்த விவசாயிகளிடமும் கூறி பயன்பெறச் செய்வீர்!

23/06/2017

வேளாண் பெருமக்கள் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் சிறப்பு முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24.6.2017 சனிக்கிழமை நடைபெறும். ஏராளமான ஏரிகளில் இருந்து மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் கீழ்காணும் ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணிகளும் நடைபெறும்.

திருப்பத்தூர் : (மண் எடுக்க JCB பணி இலவசம்)
சிம்மணப்புதூர், வெங்களாபுரம்

வாணியம்பாடி :
ரெட்டியூர், பூங்குளம், உதயேந்திரம்

நாட்றம்பள்ளி :
புத்தகரம் ஏரி, நாயணத்தியூர் ஏரி, அன்சாகரம் பெரிய ஏரி, தெக்குப்பட்டு ஏரி

ஆம்பூர்:
வெங்கடசமுத்திரம் ஏரி, சாணாங்குப்பம் ஏரி

உங்களுக்கு தெரிந்த வேளாண் பெருமக்களுக்கு தெரிவித்து பயன் பெற உதவுங்கள்.

Address

Government Garden
Tirupattur
635601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sub Collector Tirupattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share