25/08/2026
#பிரார்த்தனை_செய்வோம் ...🙏
அன்று ஒரு சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக ..
உதவிட நாம் சென்ற போது தான்,
இந்த நிகழ்வு நடந்தது ...
மருத்துவமனை வாசலில் நம்மை இடைமறித்து ..
ஓரத்தில் கிடத்துப்பட்டு இருந்த நபரை காண்பித்து ...
இனி என் புருஷன் பிழைக்க மாட்டாங்கன்னு
ஆஸ்பத்திரில சொல்லிட்டாங்க சார் ...
நல்லபடியா வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க ..
இனி நான் என்ன செய்யப்போறேன்னு தெரில சார் ..
இரண்டு பசங்க சார் எனக்கு ..
எதாவது உதவி செய்யுங்க சார் என சொல்லி,
தாரை தாரையாக கண்ணீர் சிந்தினார் ...
முகம் தெரியாத ஒருவர்,
பொதுவெளியில் காலில் விழ எத்தனித்து கண்ணீருடன் கையறு நிலையில்
உதவி கேட்டது வருத்தமாக இருந்தது ..
#இருந்தாலும் ...
கள ஆய்வு செய்யாமல்,
உதவி செய்வதும் குழுவின் விதிமுறைக்கு உடன்பாடான விசியமில்லை ..
#ஆனாலும் ..
அந்த சூழ்நிலையை,
சக மனிதனாக கடந்து செல்லவும் மனமில்லாமல் ..
அந்த சகோதரிக்கு,
ஆறுதலுடன் தைரியத்தையும் சொல்லி ..
#சிறு_தொகையை கையில கொடுத்து,
ஒரு வாகனத்தை பிடித்து ..
அந்த சகோதரியுடன் ..
வாய் புற்று நோய் வந்து,
மரணத்தின் பிடியில் இருந்த ..
அவரது கணவரையும் அனுப்பி வைத்தோம் ..
சில நாட்களில் அவர்களின் சூழ்நிலையை நேரில் கள ஆய்வு செய்த போது ..
நிலமை வருத்தம் தரக்கூடியதாகவே இருந்தது ..
#உடனடியாக ...
மருந்து மாத்திரைகளுக்காகவும்
வாழ்வாதார தேவைக்காகவும் ..
மாதந்திர உதவி தொகை வழங்க திட்டமிட்டு
#உதவித்தொகையும் கொடுக்க ஆரம்பித்தோம் ..
#அத்துடன் ..
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ..
பள்ளி பிள்ளைகளுக்கு சீருடை, புத்தக பை
வழங்கினோம் ...
இந்த காட்சிகளை கண்ட சகோதரன் தெம்பாவே காணப்பட்டார் ..
வலி வேதனைகள் இருந்தாலும்,
சந்தோஷத்தை முகத்தில் காட்டினார் ..
#இந்த_சூழ்நிலையில் ..
மாத்திரைகளால் வாழ்ந்து கொண்டிருந்த
சகோதரன் இன்று மரணமடைந்தார் ...
நாங்களும் இருக்கிறோம் குடும்பத்தின் சார்பாக ..
இறுதி காரியங்களுக்காக,
சிறு தொகையும் வழங்கப்பட்டது ..
#எதுவாகினும் ..
குழுவின் தாயுமானவர்கள் தயவால்,
ஜந்து மாதங்கள் #நிம்மதியாகவே வாழ்ந்தார் என்பதை மறுக்க முடியாது ..
வாழும் போதே ..
ஒரு ஆன்மாவை மகிழ்வித்த,
குழுவின் அனைத்து தாயுமானவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் ..
சகோதரனின் ஆன்மா அமைதி கொள்ள
பிரார்த்தனை செய்வோம் ..🙏
பிரார்த்தனையுடன் ..
#நாங்களும்_இருக்கிறோம்_குடும்பத்தார்