CPIM Thiruvengadam

CPIM Thiruvengadam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIM Thiruvengadam, Political Party, Tiruvengadam.

ஒன்றிய பி.ஜே.பி அரசே மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி கனிமவளம் எடுக்காதே...
06/01/2024

ஒன்றிய பி.ஜே.பி அரசே மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி கனிமவளம் எடுக்காதே...

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள்...
16/11/2023

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் 15.11.2023 அன்று 102 வயதில் காலமானார்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் சிபிஐ(எம்) தாலுகா செயலாளர் தோழர் எஸ்.கருப்பசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.உச்சிமாகாளி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.மாடசாமி, தாலுகா குழு உறுப்பினர் வி.சுப்ரமணியன், வழக்கறிஞர் ராகவன், சி.பி.ஐ மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன், தாலுகா செயலாளர் ஜெ.அந்தோனிராஜ், ம.தி.மு.க பேரூர் செயலாளர் சுரேஷ், விசிக ஒன்றிய செயலாளர் கனியமுதன், தி.மு.க முன்னாள் பேரூர் கழக செயலாளர் பவுல்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை திருவேங்கடத்தில் பொதுக்கூட்டம் அனைவரும் வருக.....
27/08/2023

இன்று மாலை திருவேங்கடத்தில் பொதுக்கூட்டம் அனைவரும் வருக.....

09/02/2023

இந்த ஆண்டு உளுந்து, பாசி, நெல், மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் பெற உடனடியாக கீழ்க்கண்ட ஆவணங்களை விவசாயிகள், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் (VAO) ஒப்படைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1) கம்ப்யூட்டர் பட்டா
2) ஆதார் கார்டு
3) வங்கி கணக்கு புத்தகம்

இப்படிக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
திருவேங்கடம் தாலுகா குழு.

மிச்சமுள்ள பிற்போக்கு சிந்தனைகளையும், ஆணாதிக்கத்தையும், சாதி அழுக்குகளையும் போகியில் பொசுக்கி, நல்லதொரு முன்னேற்றமான எதி...
15/01/2023

மிச்சமுள்ள பிற்போக்கு சிந்தனைகளையும், ஆணாதிக்கத்தையும், சாதி அழுக்குகளையும் போகியில் பொசுக்கி, நல்லதொரு முன்னேற்றமான எதிர்காலத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு முன்செல்வோம்! பொங்கல் நல்வாழ்த்துக்கள்! #பொங்கல் https://bit.ly/3Xc60qU

களப்பாளங்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதி வசூல் இயக்கம்...மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க....மக்களைத் தே...
13/12/2022

களப்பாளங்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதி வசூல் இயக்கம்...
மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க....

மக்களைத் தேடிச் சென்றதில் மக்களுக்கான கோரிக்கை முன் வந்தது...

அதில் ஒன்று குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் - களப்பாளங்குளம் ஊராட்சி - களப்பாளங்குளம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்பாக. மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

CPIM Thiruvengadam CPIM Tenkasi District Collector Tenkasi

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணியான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவேங்கடம் தாலுகா தலைவர் தோழர் R.ராமம...
12/12/2022

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணியான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவேங்கடம் தாலுகா தலைவர் தோழர் R.ராமமூர்த்தியின் மனைவி மீனா அவர்கள் இன்று சென்னையில் காலமானார்....

அன்னாரின் இறுதி சடங்கு நாளை காலை 11 மணிக்கு செவல்குளத்தில் நடைபெறுகிறது.
#ஆழ்ந்த_இரங்கல்கள்..

இன்று  #செவல்குளம் பகுதியில் கட்சி நிதி வசூல் நடைபெற்றது.வசூலுக்கு வீடு வீடாக சென்ற இடத்தில் மகேஸ்வரி க/பெ காளிதாஸ் என்ப...
10/12/2022

இன்று #செவல்குளம் பகுதியில் கட்சி நிதி வசூல் நடைபெற்றது.

வசூலுக்கு வீடு வீடாக சென்ற இடத்தில் மகேஸ்வரி க/பெ காளிதாஸ் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2022 வரை, அதாவது 870 நாட்களில் வேலை கொடுத்ததோ 34 நாட்கள் அந்த 34 நாட்களுக்கான ஊதியம் வரவில்லை என கூறினார்.

ஊதியமும் வரவில்லை, இதனால் வேலைக்கு வர வேண்டாம் என சொல்லிட்டாங்க என கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த ஆவணங்களை வாங்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மக்களிடம் செல்வோம்...
மக்களிடம் கோரிக்கைகளையும், நிதியையும் பெறுவோம்...
மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்போம்.....

#குருவிகுளம் #செவல்குளம் CPIM Thiruvengadam District Collector Tenkasi CPIM Tenkasi

வடக்கு குருவிகுளம் மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு வாசல் தெருவில் கழிவு நீரை தெருவில் விடாமல் உறிஞ்சிக்குழாய் மூலம் பூமிக்...
09/12/2022

வடக்கு குருவிகுளம் மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு வாசல் தெருவில் கழிவு நீரை தெருவில் விடாமல் உறிஞ்சிக்குழாய் மூலம் பூமிக்கு அடியில் விட ஏற்பாடு செய்வது தொடர்பாக மனு கொடுக்கபட்டது..
District Collector Tenkasi CPIM Tenkasi

திருவேங்கடம் பேரூராட்சி 13 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு..வணக்கம்,திருவேங்கடம் பேரூராட்சி 13 ஆவது வார்டு...
08/12/2022

திருவேங்கடம் பேரூராட்சி 13 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு..

வணக்கம்,
திருவேங்கடம் பேரூராட்சி 13 ஆவது வார்டு, NGO காலனியில் சாலை வசதியும், கடைசி தெருவில் குடிநீர் 10 வருடங்களுக்கும் மேலாக தரையில் இருந்து 4 அடிக்கு கீழ் இறங்கி எடுக்கின்ற மாதிரி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். மேலும் தெரு விளக்கு முறையாக மாட்டாமல் கீழே தொங்க விட்டுள்ளனர்.
இப்படியாக அந்த பகுதி மக்கள் பிரச்சனைகள் குறித்து வார்டு உறுப்பினரிடம் தெரிவித்தாலும் அலட்சியம் காட்டுகின்றனர். மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

District Collector Tenkasi

அனுப்புநர் :K.மாடசாமி,CPIM மாவட்டக்குழு உறுப்பினர்,தாலுகாகுழு அலுவலகம்,63,A1 குருவிகுளம் ரோடு,திருவேங்கடம்,திருவேங்கடம் ...
07/12/2022

அனுப்புநர் :
K.மாடசாமி,
CPIM மாவட்டக்குழு உறுப்பினர்,
தாலுகாகுழு அலுவலகம்,
63,A1 குருவிகுளம் ரோடு,
திருவேங்கடம்,
திருவேங்கடம் தாலுகா,
செல் - 9566468642.

பொருள் : திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில் வாறுகால் வசதி கேட்டு..

வணக்கம்,
திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில் குருவிகுளம் ரோட்டில் தினகரன் பிரஸ் அருகில் இருந்து கடை வீதிகள் வழியாக திருவேங்கடம் பேருந்து நிறுத்தம் வரை சாக்கடை கழிவு நீர் செல்லுவதற்கு வாறுக்கால் வசதி ஏற்படுத்தி தறுமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

அனுப்புநர் :S.கருப்பசாமி,CPIM தாலுகா செயலாளர்,தாலுகாகுழு அலுவலகம்,63,A1 குருவிகுளம் ரோடு,திருவேங்கடம்,திருவேங்கடம் தாலுக...
07/12/2022

அனுப்புநர் :
S.கருப்பசாமி,
CPIM தாலுகா செயலாளர்,
தாலுகாகுழு அலுவலகம்,
63,A1 குருவிகுளம் ரோடு,
திருவேங்கடம்,
திருவேங்கடம் தாலுகா,
செல் - 6369974491.

பொருள் : திருவேங்கடம், வடக்கு குருவிகுளத்தில் சர்க்கார் புறம்போக்கு ரோட்டின் ஓரங்களில் கடைகள் வைத்திருப்பவர்ளை அப்புறப்படுத்த வருவாய் துறை சார்பாக அறிவிப்பு வழங்கியது சம்பந்தமாக..

வணக்கம்,
திருவேங்கடம் தாலுகா, வடக்கு குருவிகுளம் 531 அளவை எண் கொண்ட சர்க்கார் புறம்போக்கு ரோட்டின் ஓரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் ஏழை, எளிய சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்திற்காக கடைகள் அமைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

தற்போது 1905 ஆம் ஆண்டு சென்னை ||| ஆவது சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ், 7 நாட்களுக்குள் தங்கள் கடைகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் வருவாய்த் துறையால் தீர்வை வசூல் செய்து அனுமதிக்க தக்க உகந்த இடமாக இருப்பதால், வருவாய்துறை சார்பில் அவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கி தீர்வை ரசீது போட்டு எந்த இடையூறும் இல்லாமல் கடை நடத்த ஏற்பாடு செய்து ஏழை, எளிய, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு செய்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி...

Address

Tiruvengadam
627719

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Thiruvengadam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share