14/08/2016
ஒரு மனிதன் தன் 25 வயதிற்குள் செய்து விட வேண்டிய விஷயங்கள்..
அனுபவம் #1 ஒருநாளாவது டேட்டிங் சென்று வந்துவிட வேண்டும். குறைந்த பட்சம் உணவருந்திவிட்டு வருமளவாவது.
அனுபவம் #2 முன்பின் அனுபவமில்லாத வெளியூருக்கு சென்று முகவரி தெரியாமல் தவிப்பது போன்ற ஓர் பயணம்.
அனுபவம் #3 ஸ்மார்ட் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு ஓர் நாளாவது வாழ வேண்டும்.
அனுபவம் #4 நண்பர்களின்றி தனியாக ஒரு பயணம். கலகலப்பு இருக்காது எனிலும், சுவாரஸ்யம் நிறைந்த பயணமாக அமையும்.
அனுபவம் #5 உங்களை எப்போது பார்த்தலும் கலாய்த்து கடுப்படிக்கும் அந்த நபருக்கு ஒரு நாளாவது மூக்கை அறுக்கும் வண்ணம் பதிலளிக்க வேண்டும்.
அனுபவம் #6 வேலையில் ஒருமுறையாவது ரிஸ்க் எடுத்து ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.
அனுபவம் #7 வீட்டை விட்டு பிரிந்து தனியான ஓர் வாழ்க்கை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்.
அனுபவம் #8 உங்கள் வருமானத்தை நீங்களே கணக்கிட்டு, வரவு செலவு பார்த்து பொறுப்பாக இருக்க வேண்டும்.
அனுபவம் #9 உங்களுக்கு பிடித்த ஒரு பொருளை விலை உயர்ந்ததாக இருப்பினும், வாங்கிவிட வேண்டும்.
அனுபவம் #10 வெளி மாநிலமோ, வெளி மாவட்டமோ, வெளிநாடோ நண்பர்களுடன் ஓர் உல்லாச பயணம்