SM.Rafeeq Ahamed For Cumbum

SM.Rafeeq Ahamed For Cumbum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SM.Rafeeq Ahamed For Cumbum, Political organisation, Bypass Junction, Uthamapalayam.

ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை மரியாதை! - மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவ...
11/07/2018

ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை மரியாதை! - மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்!
- SDPI தேசிய தலைவர் வலியுறுத்தல்
***************************
ஜார்கண்டில் முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்; “ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இறைச்சி வியாபாரி அலிமுதீன் அன்சாரி என்பவரை அடித்துப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, ஜார்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவால் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கொலைக் குற்றவாளிகளுக்கு, மத்திய பாஜக அரசின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வு கண்டனத்துக்குரியது. ஒரு மத்திய அமைச்சர் இப்படி வெளிப்படையாக கொலை குற்றவாளிகளை கவுரவப்படுத்திருப்பது மன்னிக்க முடியாத செயல்.கொலை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பவர்களை, பொறுப்பு மிக்க மத்திய அமைச்சர் ஒருவர் மரியாதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதன்மூலம் அவர்கள் எதை உதாரணப்படுத்த முயற்சிக்கிறார்கள்? உணர்ச்சிமிக்க பாமர மக்களின் மனதில் இதுபோன்ற செயல்கள் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய அமைச்சர் சின்ஹாவின் செயல் அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட, சட்டத்தின் ஆட்சி மீது சவாரி செய்யும் செயலாகும். இந்திய வரலாற்றில் இது கீழான, மட்டகரமான நிலையாகும்.

அமைச்சரின் இந்த செயல், பா.ஜ.க. அரசின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்குவதோடு அவரது கட்சியின் உண்மையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட, அறிவற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

ஜார்கண்ட் மாநிலம், அடித்துக் கொல்லும் குற்றத்தில் கைதேர்ந்த மாநிலம். புனிதமான பசு என்ற போர்வையில் இந்த கொடுஞ் செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கொலையாளிகளுக்கு நீதிமன்றங்கள் சுதந்திரம் அளிப்பது, நீதி மறுப்பே தவிர வேறில்லை. வலுவான சான்றுகள் இருந்தும் கூட, கொலையாளிகளை பிணையில் விடுவித்திருப்பது கொலையாளிகள் இலகுவில் தப்பித்துவிடலாம் என்ற சமிக்ஞையை மக்கள் மனதில் ஏற்படுத்தும்.

அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனபான்மையுள்ள அமைச்சர்கள் தேசத்தை அழித்துவிடுவார்கள். இதன் மூலம் வன்முறையும், சட்டமீறலும் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.”

மேற்கண்டவாறு தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

10/05/2016

மரியாதைக்குரிய வாக்காள பெருமக்களே!
உலகிலேயே பெருமைக்குரிய் பெரிய ஜனநாயக நாடு நமது இந்தியா .
ஜனநாயகத்தரன் உயிர் மூச்சாக அமைவது மக்களாட்சியாகும்.
மக்களாட்சியின் சிறப்பு என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காண தேர்தலில் போட்டியிடலாம் என்பதாகும் இதில் ஏழை பணக்காரன் என்றோ பட்டம் பல பெற்ற படிப்பாளி என்றோ அல்லது பாமரன் என்கிற பாகுபாடுகள் ஏதும் நம் ஜனநாயகத்தில் இல்லை ஆனால் நடைமுறைகள் இப்படியாக இருக்கிறதா?

1967க்கு பின் நம் கம்பம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த கூடிய திமுகவோ ,அதிமுகவோ ஏழை குடும்பத்திலிருந்து ஒருவரை வேட்பாளராக்கி சட்டமன்றம் அனுப்பி உள்ளார்களா?
பணபலம் இல்லாத தங்கள் கட்சியை சார்ந்த ஒரு உண்மை தொண்டனுக்கேனும் இது போல் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளார்களா?
இல்லை...இல்லை...இல்லை...
அப்படியானால் நமது ஜனநாயக அமைப்புக்கே விரோதமாக அரசியல் அதிகார்த்தின் வாய்ப்புகளை நிரந்தரமாக செல்வந்தர்கள் மட்உம் தான் அடைய வேண்டுமா? இது ஒரு வகையில் பணக்காரர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்குகின்ற மறைமுக ஏகாதிபத்தியமாகாதா?
சிந்தித்து பாருங்கள் மக்களே!
இந்திய குடிமங்களில் அனைவருக்கும் அரசியல் அதிகார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ப தற்காக அதற்கு செயல் வடிவம் தரும் முன்மாதிரியாகத்தான் SDPI கட்சி தமிழகத்தில் 30 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது இவர்களில் 3 பேர் மதகுருக்கள் [ஆலிம்கள்] 2பேர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினை சார்ந்தவர்கள் அதில் ஒருவர் சாதாரண ஆட்டோ ஓட்டுனர் மேலும் SDPI கட்சி 25 வயது இளைங்க்யாருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது இது போன்றோர்க்கு திமுகவோ அதிமுகவோ வாய்ப்பு வழங்க முன்வரமாட்டார்கள் என்பதே நாமனைவரும் அறிந்த உண்மை எனவே ஜனநாயகம் அனைவருக்கும் சமமானதே என்பதில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்ட வாக்காளப் பெருமக்களே!
உங்கள் வாக்குகளை SDPI கட்சியின் சிலிண்டர் சின்னத்திற்கு தாருங்கள்
இரண்டு கட்சிகள் தவிர ஏனையோர் போட்டியிடுவதை வாக்குகள் பிரிப்பதற்காகத்தான் என ஏளனம் செய்வோர் ஜனநாயகத்தின் மகத்துவத்திற்கு எதிரானவர்களே!
அரசியல் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம்!
பல கட்சி ஜனநாயகத்தையும் கூட்டணி மந்திரி சபையையும் வரவேற்போம்!!
உங்கள் வாக்குக்குகளை கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வழங்கிடுங்கள்....
நமது வேட்பாளர் SM.ரபீக் அகமது

SDPI மாநில தலைவர் KKSM.தெஹலான் பாக்கவி அவர்கள் கம்பம் தொகுதி வேட்பாளர் SM.ரபீக் அகமது அவர்களை ஆதரித்து கம்பம் ,உத்தமபாளை...
09/05/2016

SDPI மாநில தலைவர் KKSM.தெஹலான் பாக்கவி அவர்கள் கம்பம் தொகுதி வேட்பாளர் SM.ரபீக் அகமது அவர்களை ஆதரித்து கம்பம் ,உத்தமபாளையம் ,சின்னமனூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்...

இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ....
22/04/2016

இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ....

வேட்புமனு தாக்களுக்காக ஊர்வலமாக சென்ற போது...
22/04/2016

வேட்புமனு தாக்களுக்காக ஊர்வலமாக சென்ற போது...

21/04/2016

கம்பம் தொகுதி SDPI வெற்றி வேட்பாளர் SM.ரபீக் அகமது அவர்கள் இறைவன் நாடினால் தொண்டர்கள் புடை சூள நாளை காலை9;30 மணிக்கு உத்தம பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்து பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் மாற்றத்தை விரும்பும் அனைவரும் அவசியம் வருக......

21/04/2016
சுய நல அரசியலை வேரறுக்க பொதுநல அரசியலை பேணி காத்திடவாக்களிபோம் சிலிண்டர் சின்னத்தில்.....
20/04/2016

சுய நல அரசியலை வேரறுக்க
பொதுநல அரசியலை பேணி காத்திட
வாக்களிபோம் சிலிண்டர் சின்னத்தில்.....

தினத் தந்தியில்.....
17/04/2016

தினத் தந்தியில்.....

16/04/2016

சிலின்டரம்மா சிலின் டரு
கேஸ் அடைச்ச சிலின்டரு
அடுப்படியில் சமையல் செய்யும்
அக்காவோட சிலின்டரு
புகையில்லா சமையல் செய்யும்
புதுமையான சிலின்டரு
வகை வகையாவடித்து கொட்ட
வசதியான சிலின்டரு
போடுங்கம்மா ஓட்டு #கேஸ்சிலின்டர் சின்னத்த பாத்து
அக்கா போடுங்கக்கா ஓட்டு கேஸ்சிலிண்டர் சின்னத்த பாத்து.....

S.M.ரபீக் அகமது
கம்பம் தொகுதி வேட்பாளர்

16/04/2016

பசியை விரட்டும் SDPI
பயத்தை விரட்டும் SDP ,
மதுவை ஒழிக்கும் SDPI - மக்கள்
மானம் காக்கும் SDPI

தேர்தல் களத்தில் SDPI
தேசம் காக்கும் SDPI - அரசியல்
மாறுதல் தேடும் மக்கள் மனதில்
மறவாமல் இருப்பது SDPI

வெள்ளம் புயல் மழை
எதுவானாலும்
விரைந்து உதவிடும் SDPI

SDPI வேட்பாளர்களின் சின்னம் கேஸ் சிலின்டர்

என்றும் உங்கள் பசியை போக்கி ருசியாய் சமைக்க "கேஸ் சிலின்டர் சின்னத்திற்கு வாக்களிப்பீர்...

S.M.ரபீக் அகமது
கம்பம் தொகுதி வேட்பாளர்

SDPI கம்பம் தொகுதி வேட்பாளர் பயோ-டேட்டாபெயர்:S.M.ரபீக் அஹமதுவயது:62ஊர்:உத்தம பாளையம்தொழில்:ஆயத்த ஆடை தயாரிப்பகம் மற்றும்...
16/04/2016

SDPI கம்பம் தொகுதி வேட்பாளர் பயோ-டேட்டா
பெயர்:S.M.ரபீக் அஹமது
வயது:62
ஊர்:உத்தம பாளையம்
தொழில்:ஆயத்த ஆடை தயாரிப்பகம் மற்றும் விவசாயம் (ஆடு வளர்ப்பு)
கட்சி பொறுப்பு:மாநில செயற்குழு உறுப்பினர்.,மாநில பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் தற்போது மாநில துணைத் தலைவர்
பொது வாழ்க்கை:மது விலக்கு,முல்லை பெரியாறு உரிமை மீட்புப் போராட்டங்களில் கைதானவர்
மீத்தேன் திட்டம்,நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்,கூடங்குளம் அணுஉலை ஆகியவற்றிற்கு எதிராக போராடுபவர்,
மனித உரிமை செயற்பாட்டாளர்முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டிற்காக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர் சுனாமியின் போது குமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்,ஜமாஅத்துகளில் பல்வேறு பொறூப்புகளை வகித்தவர்

Address

Bypass Junction
Uthamapalayam
625533

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM.Rafeeq Ahamed For Cumbum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SM.Rafeeq Ahamed For Cumbum:

Share