21/08/2026
தென்காசி மாவட்டம் வடகரை நகரத்திற்கு உட்பட்ட பெரிய வாசல் தெரு, மெயின் ரோடு, கரிசல்குடியிருப்ப ரோடு ஆகிய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. பள்ளிக்கூடம் அரசு, அரசு மருத்துவமனை,வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை இந்த சாலைகளில் அமைந்துள்ளது.
👉 கரிசல் குடியிருப்பு சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மருத்துவமனை இருக்கும் முக்கியமான சாலை, இதில் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் நூற்றுக்கணக்கான மருத்துவ சிகிச்சைக்காக பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள்,நோயாளிகள், ஆம்புலன்ஸ் ஆகிய முக்கியத்துவம் கொண்ட சாலை.
👉 வடகரை மெயின் ரோடு தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லக்கூடிய முக்கியமான சாலை,(பள்ளி பேருந்துகள் உள்பட ).இந்த சாலை வழிபாட்டு தலம்,வர்த்தகங்கள் நிறைந்த சாலை, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தினமும் கீழே விழுந்து பாதிக்க படுகிறார்கள்.ஏற்கனவே குறுகிய சாலை இப்போது சாலை பழுதாகி இருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்கள் அதிகம் பாதிக்க படுகிறார்கள்.
👉 பெரியபள்ளி வாசல் தெரு ஊருக்குள்ளே முக்கியமான சாலை.வழிபாட்டுத் தலங்கள் வியாபாரக் கடைகள்,இருக்கும் அதிக மக்கள் பயன்படுத்தும் முக்கியமான சாலை.இந்த தெருவில் இரு சக்கர வாகனம்,மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவுமே பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது.இந்த தெருவில் பள்ளிவாசல் இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை இந்த சாலையில் தடுக்கி விழக்கூடிய அளவில் தான் உள்ளது.
👉 அம்ருத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிசெய்யாமல் அரைகுறையாக போடப்பட்டதன் விளைவுதான் இந்த சாலைகளின் அவல நிலை,
ஆகவே நெடுஞ்சாலை துறையும்,பேரூராட்சி நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தி வெகு விரைவில் போர்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்து தர வேண்டும்.தாமதித்தால் SDPI கட்சியின் நகரம் சார்பில் வடகரை ஊரில் உள்ள அத்தனை பொதுமக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
அப்துர் ரஹ்மான்
நகரத் தலைவர் (SDPI கட்சி)
வடகரை நகரம்
தென்காசி வடக்கு மாவட்டம்