27/09/2023
மாவீரன் வெங்கடேச பண்ணையார் 20 ம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்துக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சென்று வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் சுபாஷ் பண்ணையார் மற்றும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. விஷ்ணு பிரசாத் ஆகியோருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார், மாநில தொண்டரணி தலைவர் டி .எஸ்.வெங்கடேச ராஜா, சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் எம்.வைகுண்டராஜா,தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.எஸ்.டி.ரவிசேகர்,மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன்,பொருளாளர் மில்லை எஸ்.தேவராஜ்,அவைத்தலைவர் பொன் ரத்தினம்,தூத்துக்குடி சக்கமாள்புரம் ராஜ் நாடார்,நெல்லை ராஜ் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மதுரை பன்னீர்செல்வம்,மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் மா.சமுத்திரக்கனி,சுரண்டை நகரத்தலைவர் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வேப்பலோடை பகுதி நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அம்மன்புரம் சென்று மரியாதை செய்தனர்.