30/03/2025
அனைவருக்கும் வணக்கம்...
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் இருக்கக்கூடும்... இதற்கிடையில் உயர்மட்ட வளிமண்டல உதவியுடன் தமிழக உள் மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும்.. ஏப்ரல் 3 தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை.. தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் குறைந்தும் ... மழையின் தாக்கம் அதிகரித்தும் இருக்கும்... கிரகங்களின் இயக்கப்படி வங்கக்கடலில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்மண்டலம் உருவாகுவது உறுதி... ஆனால் அது எப்போது கரையை கடக்கும் என்பதுதான் பகுப்பாய்வில் தெரியவில்லை.. உயர்மட்ட வளிமண்டலத்தை பார்க்கும் போது இரண்டே வழித்தடம் தான் தெரிகிறது...
1) பெரும்பாலும் நிகழ்வு மியான்மர், வங்கதேசம் நோக்கி செல்வதற்கான வாய்ப்பு தெரிகிறது.. அதற்கு முன் வலு விழுந்த காற்றழுத்த தாழ் நிலையாக தமிழகத்தின் அருகிலோ அல்லது தென் வங்கக் கடல் பகுதியில் நிலவியோ இருக்கும்.. ஏப்ரல் 12 13 14 ஆகிய தேதிகளில் வலுப்பெற்று வடகிழக்கு பகுதி நோக்கி செல்லும்...
2) நிகழ்வு தோன்ற காலதாமதம் ஏற்படுமாயின் அரபிக்கடல் நோக்கி பயணித்து சவுதி அரேபியா ஓமன் ஆகிய கரைப்பகுதியை அடையும்... தொடர் கண்காணிப்பில் நிகழ்வு...