TNPSC Notes

TNPSC Notes Unregistered NGO for aiding EWS to receive better TNPSC posts. Hi All,

I am a TNPSC ASPIRANT.I love and enjoy the process of being an Aspirant. Keep Travelling.

It is an wonderful feeling to follow one's dream! I joined several whatsapp groups for tnpsc preparations. The materials shared are excellent but very less useful. And I felt it would be great to have a platform to have all those shared materials in a common page which can help thousand of poor-hardworking-aspirants. So I created this page as SHP ( self help page). I request all to post o

nly materials and nothing else. And make use of the materials to reach your dreams. And don't stop at the Destination.

19/05/2022

All the very best for the upcoming GROUP 2 PRELIMS. Wish you all Success

02/09/2020

*🔥ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம், நான் படிக்கும் போது மட்டும் இத்தனை தடைகள் என யோசிக்காதீர்கள்🔥*
*🔥இந்த கொரானா முடக்கம் உங்களுக்கான முடக்கம் மட்டுமல்ல உலகிற்கே இது ஒரு சோதனையான காலகட்டம் தான்🔥*
*🔥கஷ்டத்தை யோசித்தால் கரையேற முடியாது🔥
*🔥கஷ்டத்தை முடிக்க கஷ்டப்பட்டு படித்து தான் ஆகவேண்டும்.
*🔥வினாத்தாளில் உள்ள ஒரு வினாவும் உங்கள் வாழ்வை மாற்றும் வல்லமை படைத்தது என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்🔥*
*🔥கல்வி ஒன்று மட்டுமே நாம் கரைசேர வழி என்பதை மனதில் வைத்து கவனமாகப் படியுங்கள்🔥*

30/08/2020

TNPSC தேர்வுகள் மீது முழு நம்பிக்கை வைத்து தயாராகுங்கள். உங்கள் வெற்றி மிகவும் அருகில் உள்ளது.

30/08/2020

உலகின் மிக வேகமான 'மனித கால்குலேட்டர்’ என்ற பட்டத்தை ஹைதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ் என்ற 20 வயது இளைஞர் பெற்றுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதம் படித்துள்ள இவர், மின்னல் வேகத்தில் கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் வல்லவர். தனது கணித திறமையால் இதுவரை நான்கு உலக சாதனைகள், 50 லிம்கா சாதனைகள் படைத்துள்ள இவர், இந்திய சுதந்திர தினத்தன்று, மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்டில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் மிக வேகமாக கணித சிக்கல்களுக்கு பதிலளித்து, உலகின் மிக வேகமான 'மனித கால்குலேட்டர்’ என்ற பட்டத்தை பெற்றார்.

இந்த போட்டியில், 13 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்ட சூழலில், அனைவரையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார் நீலகண்ட பானு பிரகாஷ். இந்த சாதனை குறித்து பேசியுள்ள அவர், "எனது மூளை, ஒரு கால்குலேட்டரின் வேகத்தை விட விரைவாக கணக்கிட்டது. உலக அளவிலான கணிதத்தில் இந்தியாவை முன்னிறுத்த நான் முயற்சி செய்தேன். நான் பங்குபெற்ற இந்த போட்டி, உடல்ரீதியான மற்ற விளையாட்டுகளுக்கு சமமானதாகவே இருந்தது. எனது திறனைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். என்னைப் போல் மற்ற குழந்தைகளுக்கும் கணிதம் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

30/08/2020

25-08-2020
தமிழ்நாடு
☛ “உலக தண்ணீர் விருது 2020” (Global Water Award 2020), சிறந்த கழிவுநீர் திட்ட பிரிவில் (‘Wastewater project of the year’) சென்னையிலுள்ள கோயம்பேட்டில், அமைக்கப்பட்டுள்ள ’மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு’ தொழில்நுட்பத்தின் மூலம் சுத்திகரிக்கும் ஆலைக்க்காக (Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plant) , அதனை செயல்படுத்தி வரும் ” வா டெக் வபாக் ” (Va Tech Wabag ) எனப்படும் நீர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
o கூ.தக. : சென்னையின் கோயம்பேடுவில் உள்ள ’மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை’ (Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plant ) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட நீர் மறுபயன்பாட்டு ஆலைகளில் ஒன்றாகும். இதன் மூலம் நாளொன்றிற்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.


☛ மத்திய அரசால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு பிராந்திய பகுதிக்கு, மதுரையைச் சோ்ந்த கோபி சங்கா் என்பவா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
☛ ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் செயல்படும் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற தமிழக ஆசிரியைகள் கீதா சீனிவாசன் மற்றும் தந்தரா ரெட்டி இருவர் இந்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
☛ தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான 2019-ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்‌ஷா பதக்” விருது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஸ்ரீதருக்கு (ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக) வழங்கப்பட்டுள்ளது.
o கூ.தக. :நீரில் மூழ்கி விபத்து, தீ விபத்து, மின்சார விபத்து, நிலச் சரிவுகள், விலங்குகளால் தாக்கப்படுதல் மற்றும் சுரங்க விபத்து போன்ற அபாயகரமான விபத்துகளில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் “ஜீவன் ரக்‌ஷா பதக்” என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையைக் கொண்டதாகும்.
இந்தியா
☛ இந்தியாவின் மிக நீளமான (1.82 கி.மீ.) ரோப்வே திட்டமான, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள “குவாஹாட்டி பயணிகள் ரோப்வே திட்டம்” (Guwahati Passenger Ropeway Project) 24-8-2020 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
☛ புதிய கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா அரசின் துணை முதல்வர் அஷ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.


☛ மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில் (National Council for Transgender Persons) உருவாக்கம். : (நன்றி: தமிழ் இந்து)
o மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019இன் (2019இன் 40 வது சட்டம்) பிரிவு 16இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 21 ஆகஸ்ட் 2020 தேதியிட்ட அறிவிக்கையின்படி 30 உறுப்பினர்களைக் கொண்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது.
o மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். அதேபோன்று சமூக நீதி, அதிகாரம் அளித்தல் இணையமைச்சர் துணைத்தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
o பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசியப் பெண்கள் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.


o அலுவல் சாராத உறுப்பினர்களைத் தவிர தேசியக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்.
இந்த தேசியக் கவுன்சிலானது கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும்:
o (அ) மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்,
o (ஆ) மாற்றுப் பாலினத்தவருக்கு சமநிலை மற்றும் முழுபங்கேற்பு கிடைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்,
o (இ) மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசுத்துறைகள் மற்றும் அரசு, அரசு சாராத நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
o (ஈ) மாற்றுப் பாலினத்தவரின் குறைகளைத் தீர்த்து வைத்தல்
o (உ) மத்திய அரசு பரிந்துரைக்கின்ற இத்தகைய ஏனைய செயல்களை நிறைவேற்றுதல்
சர்வதேச நிகழ்வுகள்
☛ பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்து வரும் நான்கு அதிநவீன டைப் -- 054 (Type 054A/P ) பிரிகேட்ஸ் ரக போர்க் கப்பல்களில் முதல் கப்பல் தயாராகிவிட்டதால், அதன் தொடக்க விழா சீனாவில் 24-8-2020 அன்று நடைபெற்றுள்ளது.
☛ 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
பொருளாதாரம்
☛ நிறுவனங்களுக்கான சரக்கு-சேவை வரி விலக்கு உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதன்மூலம், ரூ.40 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சரக்கு-சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.5 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 1 சதவீத சரக்கு-சேவை வரியை மட்டும் செலுத்தும் நோக்கில் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியின் முதலாவது நினைவு தினத்தன்று (ஆகஸ்டு 24) மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ ‘காபென்9 05’ (“Gaofen-9 05”) என்ற பெயரில், சீனாவின் புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோள் ‘மார்ச்2 டி கேரியர்’ ராக்கெட் மூலம் 24-8-2020 அன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
☛ ‘The Anywhere School’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் கல்விக்கான வசதியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
விளையாட்டுகள்
☛ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேம் ( International Cricket Council’s (ICC) Hall of Fame) அந்தஸ்தில் முன்னாள் வீரர்கள் ஜாக் காலிஸ் (Jacques Kallis) (தென்னாப்பிரிக்கா),லிசா ஸ்டாலேகர் (Lisa Sthalekar) (ஆஸ்திரேலியா) மற்றும் ஜாகீர் அப்பாஸ் (Zaheer Abbas) (பாகிஸ்தான்) ஆகியோர் 23-8-2020 அன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

30/08/2020

Todays Current Affairs 26-08-2020
தமிழ்நாடு
☛ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ”ChAdOx1 nCoV-19 ” (இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ (Covishield) என அழைக்கப்படுகிறது) கொரோனா தடுப்பூசி பரிசோதனை தமிழகத்தில் , சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இடங்களில் 25-8-2020 அன்று தொடங்கியது.
இந்தியா
☛ ”கோவிட் சுரக்‌ஷா திட்டம்” ( Mission Covid Suraksha') இந்தியாவில், கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்குவது மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக ரூ.3,000 கோடி தொகுப்பு நிதியுடன் “கோவிட் சுரக்‌ஷா” என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. உயிரிதொழில்நுட்பத் துறையின் தலைமையிலான இந்தத் திட்டமானது கரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை செய்யும் நிலையில் இருந்து, அதை நாடெங்கும் விநியோகிப்பதற்காக உற்பத்தி செய்யும் நிலை வரை கவனம் செலுத்தும்.அவசர தேவைக்காக கூடிய விரைவில் குறைந்தபட்சம் 6 விதமான தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றுக்கு உரிய உரிமம் வழங்கி சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
☛ நிதி அயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் சந்த் ( Ramesh Chand) தலைமையில், கரும்பு மற்றும் சர்க்கரைத் தொழில் (Sugarcane and Sugar Industry) தொடர்பான நிதி அயோக் அமைத்த பணிக்குழு தனது அறிக்கையை சமர்ப்பைத்துள்ளது. அதன்படி, கரும்பு விலையை சர்க்கரை விகிதத்துடன்(sugar rate) இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
☛ விவசாயிகளின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள் தரவுகளைப் (பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களிலிருந்து படங்கள்) பயன்படுத்தும் முதல் வங்கி எனும் பெருமையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) பெற்றுள்ளது.
☛ புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அணுகல் மற்றும் மேம்பட்ட எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஹரியானாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ”ரினிவ் பவர்” (ReNew Power) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) இடையே கூட்டு ஒப்பந்தம் 25-8-2020 அன்று கையெழுத்தானது.
o கூ.தக. : ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையிடம் கென்யா நாட்டின் நைரோபி ( Nairobi ) நகரில் அமைந்துள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய செயல் இயக்குநராக ( Executive Director) டென்மார்க்கை சேர்ந்த இங்கர் ஆண்டர்ஸன் ( Inger Andersen) உள்ளார்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
o கூ.தக. : ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
☛ 2019-20-ம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
விருதுகள்
☛ ”உலகின் மிக வேகமான மனித கணிணி” (‘World’s Fastest Human Calculator’) எனும் பட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலகாந்த பானு பிரகாஷ் (Neelakantha Bhanu Prakash) வென்றுள்ளார். இவர், 15-8-2020 ல் மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (Mind Sports Olympiad (MSO)) நடத்திய போட்டியில் ‘மனக் கணக்குக்கான தங்க பதக்கத்திற்கான உலக கோப்பையை’ (Gold Medal for India in Mental Calculations (MC) World Cup (MCWC) ) வென்றுள்ளார்.
நியமனங்கள்
☛ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) தலைவராக மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Defence Research & Development(DoDRD)) செயலாளராக பதவி வகித்து வரும் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டியின் பதவி காலம் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், இரண்டாண்டு காலத்திற்கு இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ”AUDFs01” விண்மீன் திரளிலிருந்து ”AUDFs01 Galaxy” அதி வலிமையான உற ஊதாக் கதிர்களை இந்தியாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோள் (India’s first multi- wavelength satellite observatory) ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT) கண்டறிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பூனேவிலுள்ள ’ பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வானியல் மற்றும் வானியற்பியல் மையம்’ (Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA)) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
விளையாட்டுகள்
☛ இந்திய அரசின் தயான்சந்த் விருது 2020 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெ.ரஞ்சித்குமார் , தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாற்றுத்திறனாளிகளின் தடகள பயிற்சியாளராக உள்ளார்...

30/08/2020

27-08-2020
தமிழ்நாடு
☛ ”முத்ரா கடன் திட்டத்தின்” (Pradhan Mantri Mudra Yojana (PMMY)) பெண் பயனாளிகளின் எண்ணிக்கையில் (31 மார்ச் 2020 வரையில்) , தமிழக பெண்கள் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2,3,4 மற்றும் 5 வது இடங்களை முறையே மேற்கு வங்காளம், கர்நாடகா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பெற்றுள்ளன.
கூ.தக. : பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் 2015-16 நிதியாண்டில் உருவாக்கப்பட்டது தான் இந்த . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கடன் வகைகள் :
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
o சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.


o கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
o தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
இந்தியா
☛ மின்-சஞ்சீவனி மூலம் தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் மத்திய அரசு 25.8.2020அன்று தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இந்தச் சேவைகள் டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள பயனாளிகளுக்குக் கிடைக்கும். இந்த மின்-சேவைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் கிடைக்கும்.சுகாதார அமைச்சகத்தின் ஏற்கனவே இருக்கும் மின்-சஞ்சீவனி தளத்தை CGHS-இன் தொலை-ஆலோசனை சேவைகள் பயன்படுத்துகின்றன. எளிதான பயன்பாட்டுக்காக பயனாளிகளின் அடையாள எண்ணுடன் இந்தத் தளம் இணைக்கப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு நோயாளி அடையாள எண் மற்றும் அனுமதிச் சீட்டுத் தகவல்கள் குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பப்பட்டு, ஆன்லைன் வரிசையில் அவர்களது எண் குறித்துத் தகவல் அளிக்கப்படும். அவர்களது முறை வந்ததும், 'தற்போது அழைக்கவும்' பொத்தான் செயலாக்கப்படும். அதைப் பயன்படுத்தி, பயனாளி காணொலி அழைப்பு மூலம் நிபுணரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ உலக சுகாதார அமைப்பு (WHO) ஆப்பிரிக்காவை வைல்டு போலியோ (Wild polio) வைரஸ் இல்லாத கண்டமாக ஆகஸ்ட் 25, 2020 அன்று அறிவித்துள்ளது.
o கூ.தக. : போலியோ வைரஸ் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
☛ ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index (EPI) 2020-ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் ( Institute of Competitiveness) இணைந்து நிதிஆயோக் (NITI Aayog ) 25-8-2020 அன்று வெளியிட்டது. ஏற்றுமதி தயார்நிலை மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய முதல் அறிக்கையான இது, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்; மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது ஆகும்.
o ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.


o நிலப்பரப்பு மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியானாவும் இருக்கின்றன.
o இமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், தில்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் உள்ளன.
☛ ரிசர்வ் வங்கி, தனது, 2019-2020 ஆண்டிற்கான ஆண்டறிக்கையில், 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி மைனஸ் (-) 4.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
விருதுகள்
☛ ’தூய்மையே சேவை விருது’ (Cleanliness is Service) எனப்படும் ஸ்வச்ச்தா ஹை சேவா 2019 விருதை (Swachhta Hi Seva 2019 award) நெய்வெலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) )வென்றுள்ளது . இந்நிறுவனம் தனது வளாகத்தை பிளாஸ்டிக் கழிவு இல்லாத மற்றும் பசுமை வளாகமாக மாற்றியுள்ளதற்காக இந்த விருது அறிவிக்கப்படுகிறது.
முக்கிய தினங்கள்
☛ உலக நீர் வாரம் (World Water Week ) 2020 - 24 - 28 ஆகஸ்டு 2020 | மையக்கருத்து (2020) : ‘நீர் மற்றும் காலநிலை மாற்றம்: செயல்பாடுகளை துரிதமாக்குதல்’ (‘Water and Climate change: Accelerating Action’)
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Indian Space Research Organisation (ISRO)) விண்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதுமை மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை ( Space Innovation Centre) ஒடிசாவிலுள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Veer Surendra Sai University of Technology (VSSUT)) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25-8-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
விளையாட்டுகள்
☛ இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவுலோமி கட்டக் (Poulomi Ghatak) டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . 37 வயதான, பவுலோமி கட்டக் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவராவர்.

30/08/2020

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவை

1983 - தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா, ஆக்ரா கோட்டை

1984 - மாமல்லபுரம்

1987 - தஞ்சை பெரிய கோயில், பட்டாடக்கல்

1993 - குதுப்பினார்

2016 - நாளந்தா

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

வங்காள சிங்கம் - நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்

வங்கப்புலி - வெல்லெஸ்லி பிரபு

மைசூர் புலி - திப்பு சுல்தான்

UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் - வருடங்கள்:-
🎯 அஜந்தா குகை - 1983
🎯 எல்லோரா குகை - 1983
🎯 ஆக்ரா கோட்டை - 1983
🎯 தாஜ்மகால் - 1983
🎯 சூரியனார் கோயில் - 1984
🎯 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1984
🎯 கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
🎯 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
🎯 ஃபதேபூர் சிக்ரி - 1986
🎯 எலிஃபென்டா குகைகள் - 1987
🎯 தஞ்சை பெரிய கோயில் - 1987
🎯 தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
🎯 ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
🎯 பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
🎯 சுந்தரவன பூங்கா - 1987
🎯 நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
🎯 சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
🎯 ஹுமாயூன் கல்லறை - 1993
🎯 குதுப்மினார் - 1993
🎯 இமாலயன் இரயில்வே - 1999
🎯 புத்தகயா மகாபோதி கோயில் - 2002
🎯 பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003
🎯 கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004
🎯 ஐராதீஸ்வரர் கோவில் - 2004
🎯 குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004
🎯 சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004
🎯 நீலகிரி மலை இரயில்வே – 2005

30/08/2020

28-08-2020
தமிழ்நாடு
☛ உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் 26-8-2020 அன்று காலமானார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த இவர் சட்ட ஆணைய தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்.
☛ திருச்சி மண்டலம் இந்திய தொல்பொருள் சர்வேயின் (Archaeological Survey of India) புதிய வட்டமாக (Circle) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. திருச்சியைத் தவிர ராய்கஞ்ச், ராஜ்கோட், ஜபல்பூர், ஜான்சி மற்றும் மீரட் ஆகியவையும் புதிய வட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னதாக மொத்தம் 29 வட்டங்கள் இருந்தது, தற்போது, 36 வட்டங்களாக உயர்ந்துள்ளது.


☛ தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்தியதில் அகில இந்திய அளவில் திருச்சி 102-வது இடத்துடன் மாநில அளவில் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகராட்சி 159-வது இடத்துடன் மாநில அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தியா
☛ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
☛ ஆதார் விவரங்களை மாற்ற புதிய கட்டணம் அறிவிப்பு : ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணங்கள், பயோமெட்ரிக்ஸையும் சேர்த்து புதுப்பிப்பதற்காக ரூ .100 மற்றும் புள்ளிவிவர விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டால் ரூ .50 என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அறிவித்துள்ளது. ஒரு பயனர் ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ அல்லது வலைத்தளத்தைப் மூலமாகவோ தங்கள் ஆதார் அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ளலாம்.


☛ பேராசிரியர் V ராமகோபால் ராவ் குழு (Prof V Ramagopal Rao Committee) : பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ( (Defence Research and Development Organization) கீழ் செயல்படும் 57 ஆய்வகங்களின் சாசனத்தை மாற்றியமைப்பதற்கான தில்லி ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் V ராமகோபால் ராவ் தலைமையிலான ஐந்து நபர் குழுவை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது.
☛ ”உடான்” (UDAN - Ude Desh ka Aam Naagrik) எனப்படும் வட்டார வான்வழி இணைப்புத் திட்டத்தின் (Regional Connectivity Scheme) நான்காவது கட்டத்தின் மூலம் புதிதாக 78 கூடுதல் வழிகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
o கூ.தக. : அனைத்து மக்களுக்கும் விமான போக்குவரத்து சேவை வழங்கும் நோக்கோடு புதிதாக உள்நாட்டு விமான வழித்தடங்களை உருவாக்குவதற்கான உடான் (UDAN) திட்டம் 27 ஏப்ரல் 2017 ல் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு உறவுகள்
☛ இஸ்ரேலிடமிருந்து ரூ.7,500 கோடியில் 2 அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்க இந்தியா முடிவு : அண்டை நாடுகளுடனான எல்லையைக் கடக்காமல் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போா் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் 2 அதிநவீன ஃபால்கன் கண்காணிப்பு கருவிகளை சுமாா் ரூ.7,500 கோடி செலவில் இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.
o இஸ்ரேலிடமிருந்து 3 ஃபால்கன் ரக கண்காணிப்பு கருவிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தது. தற்போது கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், மேலும் 2 அவாக்ஸ் ரக கண்காணிப்புக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய விமானப்படை முடிவெடுத்துள்ளது.


o தற்போதைய சூழலில் ஃபால்கன் ரக கண்காணிப்புக் கருவிகளானது ரஷியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இல்லுஷின்-76 போக்குவரத்து விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள் மூலமாக எதிரி நாடுகளின் எல்லைப் பகுதிக்குள் நுழையாமல் அவா்களின் போா் விமானங்கள், ஏவுகணைகள், படைகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய இயலும்.
விருதுகள்
☛ ”சர்வதேச புக்கர் பரிசு” ( International Booker Prize) ‘The Discomfort of Evening’ என்ற புத்தகத்திற்காக டச்சு எழுத்தாளர் மரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் (Marieke Lucas Rijneveld) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூ.தக. : சர்வதேச புக்கர் பரிசு , ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது.
o 2018 ஆம் ஆண்டு டச்சு மொழியில் வெளியான இந்த புட்த்தகத்தை மைக்கேல் கட்சிசன்(Michele Hutchison) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான ஹைபிரிட் குவாண்டம் கம்பியூட்டரை ( world’s largest and fastest hybrid quantum computer ) இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்காக ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் கவுண்சில் (Indian Institute of Technology’s (IIT) Alumni Council) , ரஷியாவின் லோமோனோசோவ் மாஸ்கோ பல்கலைக் கழகம் (Lomonosov Moscow State University (MSU)) மற்றும் ‘ரஸ்ஸோசாப்ட்” (Russoft) எனப்படும் ரஷிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கத்துடன் 26-8-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
☛ ‘ஹைப்பர் இம்முனெ குளோபுலின்’ (Hyperimmune Globulin) : கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த இன்டாஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலினை (Hyperimmune Globulin) தயாரித்துள்ளது.

11/05/2019

Flora and Fauna in News NBWL adds 4 species in Recovery Programme for Critically Endangered Species Northern River Terrapin: It is species of riverine turtle found in rivers that flow in Eastern India. It is hunted for its meat and It is hunted for its meat and carapace. It is native of Bangladesh,....

06/04/2019

தீவிரமாக GROUP 1 MAINS தேர்வுக்கு என்னுடன் சேர்ந்து தயாராக யாரேனும் இருக்கிறீர்களா?

Address

Vellore
632503

Telephone

8871171266

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC Notes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNPSC Notes:

Share