29/07/2026
அனைவருக்கும் காலை வணக்கம் !
நேற்று 28 .7 .2026 செவ்வாய்க்கிழமை நம்முடைய சங்கத்தின் அரையாண்டு கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. சங்க நிறுவனர்கள் மூவரும் தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டு தொடங்கியது. நம்முடைய சங்கத்தின் நிகழ்கால தலைவராக இருந்த திரு. கிருஷ்ண திலக் குடும்ப சூழல் காரணமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சங்க நிறுவனர்களில் ஒருவரான திரு. ஆனந்த் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கனரா வங்கியின் மேலாளர் திரு பிரேம் நிஷாந்த் அவர்கள் MSME மற்றும் வங்கியில் கடன் பெறுவது எப்படி என்பதை தெளிவாக எடுத்துரைத்தது சங்க உறுப்பினர்களிடையே வரவேற்பு பெற்றதாக இருந்தது, இவரை சங்கத்திற்கு அறிமுகம் செய்த சங்க பொருளாளர் திரு அலாவுதீன் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திரு பிரபு மற்றும் திருமதி சிவப்ரியா அவர்களின் AI குறித்தான விளக்க உரை மிகவும் சிறப்பாக இருந்தது அணைத்து உறுப்பினர்களும் கவனித்தது வியக்கதக்கதாக இருந்தது. இவர்களை சங்கத்திற்கு அறிமுகம் செய்த சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு கிருஷ்ண கோபால் அவர்களுக்கு நன்றி.கூட்ட முடிவில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டடது. இந்த இரவு உணவிற்கான செலவீனங்களை நம்முடைய சங்கத்தின் முன்னாள் செயலர் திரு சிவகுமார் (ராயல் பிரஸ்) அவர்கள் ஏற்றுக்கொண்டார், அவருக்கு சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் . இதற்காக உழைத்த, ஒத்துழைத்த அனைவருக்கும் மற்றும் குடும்ப நிகழ்ச்சியாக கருதி செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களாகிய செயல் வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.