TVK Vilathikulam

  • Home
  • TVK Vilathikulam

TVK Vilathikulam தமிழக வெற்றிக் கழகம் | Official account | அதிகாரப்பூர்வ கணக்கு | விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி | தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

Happy birthday Anna ❣️ தமிழக வெற்றிக் கழகம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி.
22/06/2025

Happy birthday Anna ❣️

தமிழக வெற்றிக் கழகம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாபெரும் கிரிக்கெட் திருவிழா.
22/04/2025

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வாழ்த்துக்களுடன்....மதிப்பிற்குரிய மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N. ஆனந்த் அ...
21/04/2025

தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வாழ்த்துக்களுடன்....

மதிப்பிற்குரிய மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N. ஆனந்த் அவர்களின்
வழிகாட்டுதலின்படி....

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக S.S.D.M. கல்லூரி மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா 18.04.2025 - 20.04.2025 வரை நடைபெற்றது

இதன் இறுதிப் போட்டி 20.04.2025 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி அண்ணன திரு. A. பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

உடன் கழக நிர்வாகிகள் மனோஜ், காந்தி எட்டையாபுரம் நிர்வாகிகள் மணி, மாரிமுத்து, மற்றும் சக கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்....

மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் மற்றும் முதல் நான்கு இடத்தை பிடித்த அணிகளுக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நிர்வாகி அண்ணன் திரு. பிரவீன் குமார் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்போட்டியிற்காக பலத்த ஏற்பாடுகள் செய்து விழாவினை சிறப்பித்த சக கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழா ஏற்பாடு:-

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் மதன்குமார், தினேஷ் நாடிமுத்து, தங்க பிரவீன், பாஸ்கர், சீயாம், செல்வராமன், மாணிக்கம் ஆகியோர்.

தமிழக வெற்றிக் கழகம்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் திரு. பிரவீன் குமார் தலமையில்  தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் அவர...
18/04/2025

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் திரு. பிரவீன் குமார் தலமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா கோலாகலம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் இ...
14/04/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி திரு. பிரவீன் குமார் அண்ணன் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அதாவது விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தோழர்களும் அவருது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

மாபெரும் கிரிக்கெட் போட்டிநாள் - 18/04/2025 வெள்ளிக்கிழமை முதல் 20/04/2025 ஞாயிற்றுக்கிழமை வரை இடம் - S.S.D.M. கல்லூரி ம...
11/04/2025

மாபெரும் கிரிக்கெட் போட்டி

நாள் - 18/04/2025 வெள்ளிக்கிழமை முதல் 20/04/2025 ஞாயிற்றுக்கிழமை வரை

இடம் - S.S.D.M. கல்லூரி மைதானம் கோவில்பட்டி.

முன்பதிவு தொடர்புக்கு:

D. தங்க பிரவீன் - 8778502655
R. சியாம் - 9600352602
M. பாஸ்கர் - 8610354237

தமிழக வெற்றிக் கழகம்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்

தேசிய அளவில் பீகார் மாநிலத்தில் ‘காய’ என்ற இடத்தில் நடைபெற்ற கபாடி போட்டியில் மூன்றம் இடம் பிடித்து வெண்கலம் வென்று தமிழ...
11/04/2025

தேசிய அளவில் பீகார் மாநிலத்தில் ‘காய’ என்ற இடத்தில் நடைபெற்ற கபாடி போட்டியில் மூன்றம் இடம் பிடித்து வெண்கலம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதிய சேர்ந்த வீராங்கனை P. கீர்த்திகா அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

எட்டையபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் ; கோட்டாட்சியரிடம் த.வெ.க-வினர் மனு!தூத்துக்க...
06/04/2025

எட்டையபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் ; கோட்டாட்சியரிடம் த.வெ.க-வினர் மனு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவி ஒருவர், அக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகார் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாதர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி பிரவீன்குமார் வழிகாட்டுதலின் படி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய நிர்வாகி சங்கரலிங்கம் தலைமையில், எட்டையபுரம் நகர நிர்வாகி மணி முன்னிலையில், சுமதி ராமுத்தாய், கவிதா, பாரதி, மாரீஸ்வரி ஒன்றிய நிர்வாகி போத்தியம்மாள், இளைஞர் அணி முத்து மற்றும் கட்சியினர் பலர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அக்கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவிகளுக்கும் பாதுகாப்பு வழங்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு அளித்து கேட்டுக்கொண்டனர். மேலும் விரைவில் இந்த மாணவி பாலியல் புகாருக்கு தீர்வு காணாவிட்டால் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

தோழர்களே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மதிப்பிற்குரிய அண்ணன் திரு. ஆனந்த் அவர்களின் அற...
30/03/2025

தோழர்களே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மதிப்பிற்குரிய அண்ணன் திரு. ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி பாசமிகு திரு. அண்ணன் பிரவீன் குமார் அவர்களின் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகி திரு. அண்ணன் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய நிர்வாகி தோழர் திரு. இசக்கி ஆகியோர் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டயபுரம் பேரூர் தலைமை பெண்கள் சுமதி, ராமுத்தாய், நிஷா, கவிதா, பிரியா, பாரதி, மாரீஸ்வரி ஆகியோர் ஒன்றிணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் மற்றும் விவாசைகளின் வாழ்வாதரம் செழித்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அத்தகைய பிரச்சனைகள் எல்லாம் களையப்பட்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதை கண்டித்தும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாட்டில் ஓர் நல்ல ஆட்சி அமைய வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனை வரவிருக்கும் 2026 தேர்தலில் ஒன்றினது தி.மு.க. என்கிற ஓர் குடும்ப ஆட்சி நடத்தி வரும் இந்த அவலநிலையை உடனடியாக ஒழித்துவிட வேண்டும் என்று சபதம் ஏற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம்
எட்டயபுரம் பேரூர் தலைமை
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி அண்ணன் திரு. பிரவீன் குமா...
21/02/2025

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி அண்ணன் திரு. பிரவீன் குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மாகாண முதல் முதலமைச்சர் ஓமந்தூர் திரு.ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளை போற்றிக் கொண்டடுவோம்.
01/02/2025

சென்னை மாகாண முதல் முதலமைச்சர் ஓமந்தூர் திரு.ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளை போற்றிக் கொண்டடுவோம்.

Address

த. வெ. க/சட்டமன்றத் தொகுதி
Vilatikulam
628907

Alerts

Be the first to know and let us send you an email when TVK Vilathikulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share