MNM விருதுநகர் மாவட்டம்

MNM விருதுநகர் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு  #மக்கள்நீதிமய்...
21/08/2026

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு
#மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் கோரிக்கை விடுத்த செய்தி மாலை மலர், மாலைமுரசு,
தீக்கதிர் ஆகிய நாளிதழ்களில் வந்துள்ளன #மக்கள்நீதிமய்யம்

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுற...
02/08/2026

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
#மக்கள்நீதிமய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பாக நகர செயலாளர் கமல் கண்ணன் மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர், நிர்வாகிகள் நிக்கோலஸ், செய்யது முகமது, மைக்கேல், பன்னீர் செல்வம், கருப்பையா, நல்லதம்பி, அந்தோணிராஜ்
கமல் ரவி, அமுத குமார், மற்றும் மகளிரணி நிர்வாகி லட்சுமி தலைமையில் திரளான மகளிரணியினரும் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, தலித் விடுதலை இயக்கம், ஆம் ஆத்மி, திராவிடர் கழகம் போன்ற கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி தினத்தந்தி தின மலர், தினகரன்,
தி இந்து தமிழ் தின காற்று,
மாலைமுரசு,மாலை மலர் தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களில் வந்துள்ளன. #மக்கள்நீதிமய்யம்

ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 11 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுவிருதுந...
27/07/2026

ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 11 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
விருதுநகர் கால் நடை மருத்துவமனை ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு
#மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில்
நகர செயலாளர் கமல் கண்ணன்,
மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் பன்னீர் நிர்வாகிகள்
மாரியப்பன், பன்னீர்செல்வம் பொன்ராஜ், பூமி ராஜ், ரவி , ஹரீஸ்மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். #மக்கள்நீதிமய்யம்

தமிழக அரசின் அறிவிப்பின் படி பேருந்து நிலையம், கல்வி நிலையம் ,வழிபாட்டு ஸ்தலங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள்ள அரசு மதுப...
22/07/2026

தமிழக அரசின் அறிவிப்பின் படி பேருந்து நிலையம், கல்வி நிலையம் ,வழிபாட்டு ஸ்தலங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வலியுறுத்தி விருதுநகரில் அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சக்கணன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் , நிர்வாகிகள் காளிதாசன், கருப்பையா , மைக்கேல் , பால சுப்பிரமணி, கர்ணன் ராஜா,
திராவிடர் கழக மாவட்ட தலைவர் நல்லதம்பி , விடுதலை சிறுத்தைகள் கட்சி,ஆம் ஆத்மி , தலித் விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும்
திரளான பெண்களும் கலந்து கொண்டு
பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, மாலை பேட்டை தெருவில் உள்ள டாஸ்மாக் கடை போன்ற 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் டாஸ்மாக்
கடைகளை மூடாவிட்டால் பொது மக்களை திரட்டி மது கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவது என ஆர்ப்பாட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு விருது நகரில்  #மக்கள்நீதிமய்யம் கட்சியினர் மாவட்ட செயலாளர் காளிதாஸ...
15/07/2026

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு விருது நகரில்
#மக்கள்நீதிமய்யம் கட்சியினர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று
காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் நிர்வாகிகள் நகர செயலாளர் கமல் கண்ணன் , மாவட்ட நிர்வாகிகள் நடராஜன் பன்னீர் , நிக்கோலஸ் நகர நிர்வாகிகள் சங்கர்சசி , பூமிராஜ், பன்னீர் செல்வம், கமல் ரவி, நல்லதம்பி, கருப்பையா, தல மாரியப்பன் , கர்ணன், மைக்கேல் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#மக்கள்நீதிமய்யம்

10.07.2026 அன்று விருதுநகரில்  அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் நிர்வா...
14/07/2026

10.07.2026 அன்று விருதுநகரில் அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் நிர்வாகி எட்வர்ட் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பால முருகன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ், முன்னிலை வகித்தார்கள்.

முறைகேடாக நடைபெற்ற அரசு மருத்துவமனை கேண்டீன் டெண்டரை ரத்து செய்ய கோரியும்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு மதுபான கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் செய்யது முகமது, மைக்கேல் , விடுதலை சிறுத்தைகள் கட்சி,ஆம் ஆத்மி , திராவிடர் கழகம், ஆதித் தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி,தலித் விடுதலை இயக்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த செய்தி தினமலர்,
தினகரன், தினத்தந்தி ,
தி இந்து தமிழ் , மாலை மலர் ஆகிய நாளிதழ்களில் வெளி வந்துள்ளது. #மக்கள்நீதிமய்யம்

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்விருதுநகர் மாவட்ட  #மக்கள்நீதிமய்யம் செயலாளர் காளிதாஸ்அவர்கள் பேட்டி வெளியாகி உள்ளத...
06/07/2026

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
விருதுநகர் மாவட்ட #மக்கள்நீதிமய்யம் செயலாளர் காளிதாஸ்
அவர்கள் பேட்டி வெளியாகி உள்ளது. #மக்கள்நீதிமய்யம்

அடிப்படை வசதி இல்லாத விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கேன்டீன் டெண்டரை ரத்து செய்ய கோரியும்,இடநெருக்கடியில்...
02/07/2026

அடிப்படை வசதி இல்லாத விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கேன்டீன் டெண்டரை ரத்து செய்ய கோரியும்,
இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் மாணவர்கள் சமூக நீதி விடுதியை இடமாற்றம் செய்ய கோரி விருதுநகர் #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளி தாஸ் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த செய்தி தினமலர் தினத்தந்தி, தினகரன்,
மாலை மலர், மாலை முரசு, ஆகிய நாளிதழ்களில் வந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழைமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி விருதுநகர் மாவட...
02/07/2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த
ஏழைமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் #மக்கள்நீதிமய்யம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலைராஜ் தலைமையில் மனு அளித்தனர்.
உடன் மாவட்ட செயலாளர் காளிதாஸ்,
மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் பன்னீர் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்

விருதுநகர் வெயிலுவந்த அம்மன் கோவில் பொங்கல் முன்னிட்டு  #மக்கள்நீதிமய்யம் சார்பாக ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள் 🙏🙏🔥  #மக்கள...
26/05/2026

விருதுநகர்
வெயிலுவந்த அம்மன் கோவில் பொங்கல் முன்னிட்டு
#மக்கள்நீதிமய்யம் சார்பாக ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள் 🙏🙏🔥 #மக்கள்நீதிமய்யம்

Address

Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when MNM விருதுநகர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share